Friday, December 08, 2006

இறைவனைப் புரிந்து கொள்வோம்!

இஸ்லாத்தில் இறைவனைப்பற்றியும் அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.

நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனங்கள், மதங்கள், இஸங்கள் உள்ளன. அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது பரிந்தும் பேசுகின்றது. ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!

உன் தெய்வம் வேறு! என் தெய்வம் வேறு! என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இஸங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் செய்கிறது. இந்த பூமியைப் படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி சற்று வித்தியாசமாக இவ்வாறு கேட்கின்றான்.

உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் , (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் ? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் ?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் '' அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை ; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள் ?

இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்வி இதுதான்.

இந்தக்கேள்விக்கு இறைவன் காட்டித்தந்த இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மனிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.

மரணத்தைச் சுவைக்காத எந்த மனிதனும் கிடையாது. அதுபோலவே அதை மரணம் என்பது இல்லை என மறுக்கின்ற மனிதனும் கிடையாது. அந்த அளவுக்கு யதார்த்தமான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது.

எங்கிருந்து வந்தோம்? எங்கே போகவிருக்கின்றோம்? என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த வாழ்வியல் நெறி போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மனிதன் என்பவன் படைத்த இறைவனை விட்டு படைப்புக்களை வணங்குவது எவ்வகையில் நியாயம் என்பதை இறைவன் கேட்கிறான்:

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா? , என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டு ) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றான்:

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக. அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா ? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா ? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது ? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

உண்மையை உணராமல், அல்லது அதைப் பற்றிய சிந்தனை செய்ய மனமில்லாமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இறைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்.

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை.
" இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா ? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா ? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்! ' என்று.

நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் பால்வெளியையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு ஜீவி (?)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.

இதுவரை பூமியில் தோன்றி மறைந்த, இனித் தோன்றவிருக்கின்ற எவராலும் முறியடிக்க முடியாத நடக்காத காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது .

நான் நினைக்கின்றேன். ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் .

நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்.

அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான். மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான். அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.

வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம். ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது. அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா ? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ' அம்மன் ' என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம் , பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.

நன்றி: இந்துமதம் எங்கே போகிறது

இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர்.

அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர் இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)

ஆக மனிதனுக்கும் இறைவனுக்கும் மகத்தான மலையளவுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது அதையெல்லாம் சாதாரணமாக மறந்துவிட்டு மனிதனும் இறைவனும் சமமே என்பதும், இறைவனுக்கும் இணை துணை உண்டு என்பதும் எங்கோ யாருக்கோ வந்த சிந்தனைக்கோளாறு. அல்லது யாரோ வயிறு பிழைக்க எடுத்த வடிகட்டிய முட்டாள்தனம்.

எனவே

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்¢ தூய்மையும்) உடையோராகலாம். 2:21

Monday, December 04, 2006

விதவையும் துன்பங்(பெண்)களே

விதவைகள் என்றாலே சமுதாயத்தில் தள்ளிவைக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு சமூகத்தில் எந்த ஒட்டும் உறவும் கிடையாது கூடாது என்று நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து வந்தவன் நான். கிணற்றுத்தவளையாக இருந்தபொழுது புரியாத பல விஷயங்கள் அதிலிருந்து வெளிவந்த பொழுது தெரிய வந்துள்ளது ஆம் உண்மைதான் இஸ்லாம் என்றாலே வெறுக்கப்படக்கூடிய மதம் என்று பொன் ,பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து நேசகுமார், வஜ்ரா சங்கர் , கால்கரிசிவா , டோண்டு போன்றவர்கள் வாய்கிழிய கத்துவதற்கு காரணம் கூட இஸ்லாம் எடுத்துவைக்கக்கூடிய வாதங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

ஒவ்வொரு மதமும் தங்களின் கொள்கையாக நம்பிக்கையாக பல கோட்பாடுகளை முன் வைக்கின்றது ஆனால் அவைகளின் எது சிறந்தது என்று சிந்தித்து நடைமுறை சாத்தியத்தையும் உணர்ந்து ஏற்றுக்கொள்வது அவரவர்களின் கட்டாயக்கடமையாகும். இங்கே நான் படித்த ஒருசில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகின்றேன்

விதவைகளின் துன்பநிலைகள்

பழைய ஏற்பாடு விதவைகளுக்கு கணவனின் சொத்திலிருந்து எந்த பங்கையும் அங்கீகரிக்காததனால், அவர்கள் யூத ஜனங்களிலேயே மிகவும் பாதிப்பிற்குள்ளானவர்களாக இருந்தனர். அவளுடைய இறந்த கணவனின் சொத்தில் பங்கு பெற்ற கணவனின் ஆண் உறவினர்கள் அச்சொத்திலிருந்து அவளுக்கு சாப்பாட்டிற்கு கொடுக்கவேண்டும். ஆயினும், அதை பெற்றுத்தருவதற்கு எந்த அமைப்பும் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களின் கருணையையே சார்ந்திருக்கவேண்டியதாயிருந்தது. ஆகவே விதவைகள் மிகவும் தாழ்ந்த வர்க்கமாகயிருந்தனர் விதவைத்துவமே மிகப்பெரும் இழிவின் அடையாளமாக கருதப்பட்டது. (ஏசாயா 54:4).

ஆனால் சொத்திலிருந்து அவளை விலக்கி வைத்திருப்பதனால் விதவைக்கு துன்பநிலை தருவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், இறந்த சகோதரனுக்கு சந்ததியை உருவாக்கி அவன் பெயர் மங்காமலிருக்கச் செய்வதற்காக, குழந்தையற்ற விதவை இறந்த கணவனின் சகோதரனை, அவன் ஏற்கனவே மணமானவனாக இருந்தால் கூட திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.
(ஆதியாகமம் 38).

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சதந்தரமாய்ப் படைத்து உன் தமையனுக்கு சந்ததி உண்டாக்கு என்றான். (ஆதியாகமம் 38:8)

இந்த திருமணத்திற்கு விதவையின் சம்மதம் அவசியமில்லை. விதவை இறந்த கணவனின், அவனின் சந்ததியை உறுதிசெய்யக்கூடிய, சொத்தாகவே கருதப்பட்டாள். பைபிளின் இந்தச்சட்டம் இன்னமும் இஸ்ரவேலில் பின்பற்றப்பட்டு வருகின்றது.48 குழந்தையற்ற விதவை அவன் சகோதரனுக்கு சொத்தாக கொடுக்கப்பட்டாள். அச்சகோதரன் திருமணம் செய்யும் வயதையடையாத சிறுவனாக இருந்தால் அவன் திருமண வயதையடையும் வரை அவள் காத்திருக்க வேண்டும். இறந்த கணவனின் சகோதரன் அவளை மணக்க மறுத்தால் மாத்திரம் அவள் விடுவிக்கப்படுவாள். அப்போது தான் விரும்பியவனை அவள் மணந்து கொள்ளலாம். இதிலிருந்து விடுதலை பெற விரும்பும் விதவைகளை அவர்களின் கணவனின் உடன் பிறந்தவர்கள் பிளாக்மெயில் செய்வது இன்றைய இஸ்ராயிலில் சாதாரணமாக நடக்கும் விசயமாகும்.

இஸ்லாத்திற்கு முந்திய அரபிகளும் இது போன்ற நடைமுறையையே பின்பற்றி வந்தனர். விதவை தகப்பனின் சொத்தாக கருதப்பட்டு மகனால் வாரிசுச்சொத்தாகப் பெறப்பட்டாள். சாதாரணமாக, இறந்த தந்தையின் மற்ற மனைவியின் மூலம் பிறந்த மூத்த மகனுக்கு அவள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். இந்த பழக்கத்தை திருக்குர்ஆன் கடுமையான முறையில் கண்டித்து அழித்தது:

மேலும் உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளாதீர்கள். முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக் செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும். (4:22)

மத குருவானவன்; விதவைகளையோ விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையோ அல்லது விபச்சாரிகளையோ திருமணம் செய்யக் கூடாது என தடுக்கப்படும் அளவிற்கு விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் பைபிளினால் கீழ்த்தரமானவர்களாக கணிக்கப்பட்டார்கள்:

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் (ஆசாரியன்) விவாகம் பண்ண வேண்டும். விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல் தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பனாக. (லேவியராகமம் 21: 13-15)

இன்றைய இஸ்ராயிலில் கோஹன் இனத்தைச் சேர்ந்தவர்கள் (ஆலயத்தின் பிரதான ஆச்சாரிய குலத்தை சேர்ந்தவர்கள்) விதவையையோ விவாஹரத்து செய்யப்பட்ட பெண்ணையோ அல்லது விபச்சாரியையோ திருமணம் செய்ய முடியாது.49 Inid., p. 47. கணவர்கள் இயற்கை காரணங்களால் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து மூன்று முறை ஒரு பெண் விதவையாக்கப்பட்டுவிட்டால் அவள் 'மிகவும் அபாயகரமானவள்' திருமணம் செய்ய தடுக்கப்பட்டவள் என யூதச்சட்டம் கூறுகிறது.50 Inid., p. 49. ஆனால் திருக்குர்ஆனோ சாதிகளையோ அல்லது 'அபாயகரமானவர்கள்' எனப்படுவர்களையோ (அப்படியானவர்கள் இருப்பதாக) அங்கீகரிகப்பதில்லை. விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் தாங்கள் விரும்பியவர்களை மணப்பதற்கு சுதந்திரம் உண்டு. விதவையின் மேலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்வளின் மீதோ எந்தவித கறையும் படிவதில்லை. திருக்குர்ஆன் அருள்கின்றது:

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (2:231)

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (2:234)

உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப்பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (2:240



இந்த வசனங்களே போதுமானது பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு உன்னதமான அந்தஸ்தையும் மரியாதையையும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள. பெண் என்பவள் பல படித்தரங்களை கட்டங்களை கொண்டவள் ஆனால் பெண் என்ற பார்வையில் அவளும் மதிக்கப்பட வேண்டியவளே என்பதில் இஸ்லாம் காட்டும் முக்கியத்துவத்தை உணர்தல் அவசியம்.

Monday, September 11, 2006

பதிலுக்கு பதில் 3 I am OK

(1) இங்கே இருப்பது I am OK you are not OK என்ற நிலை தான். அதை விட்டு I am OK you are OK என்றால் இந்த பதிவே தேவையில்லை

உண்மைதான் இந்த வார்த்தையின் மீது எனக்கும் பரிபூரணமான நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த வார்த்தை எப்பொழுது வரை தெரியுமா? நீங்கள் மற்ற மதத்தவரை கண்மூடித்தனமாக சாடாதவரை ஆனால் நீங்கள் செய்வதோ பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்று தமிழில் ஒரு பழஞ்சொல் உள்ளது அதற்கு ஒப்பானது உங்களின் இந்த வாதம்.

(2) //சார், மனிதனை மனிதனாகதான் பார்க்கிறேன் மதவாதியாக அல்ல. நான் எப்போதுமே "I am OK you are OK " டைப் தான். உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் மரியாதைக் குறியதே// - இவை இரண்டுமே சகோதரர் கால்கரி அவர்களின் கருத்தாகும்

மதத்துவத்தையும் மனித்துவத்தையும் சகோதரர் குழப்பிக் கொள்கின்றார். மனிதத்துவம் என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கால்கரி சிவாவிடம் சொன்னால் ஒத்துக்கொள்வார் ஆனால் நான் ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று சொன்னால் கால்கரி ஒத்துக்கொள்வாரா? சரி. இவர் இப்படித்தான் என்று போய்விடுவார் இது மனிதத்துவம்.

மதத்துவம் என்பது உதாரணமாக நான் சகோதரர் கால்கரியிடம் அமெரிக்காவிற்கு விமான டிக்கெட் கொடுத்து போகச்சொன்னால் சென்று வருவார். ஏன் போகவேண்டும்? என்று கேட்டுவிட்டு போவார் ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாருங்கள் என்று துபாயின் விமான டிக்கெட்டை கொடுத்தால் சகோதரர் ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிடுவாரா? நிச்சயமாக போகமாட்டார். அதுவும் ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல்!. இதுதான் மதத்துவம். அந்த ஏன் என்ற கேள்விதான் ஒவ்வொரு மதமும் சுட்டிக் காண்பிக்கும் கலாச்சார ரீதியான செயல்பாட்டின் எதிர்பார்ப்பின் திசையாகும். ஆக மதம் என்பது வேறு;மனிதத்துவம் என்பது வேறு. மனிதத்துவம் என்பது பொறுமையும், சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது.(கொள்கையை அல்ல)

மதம் என்பது சொல்லுறுதியும், செயல் உறுதியும் உடையது. அது கலாச்சார சீர்கேட்டிற்கும் காலச்சூழலின் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இவை இரண்டையும் சேர்த்துப்பார்க்கும் பொழுதுதான் I am OK you are not OK என்ற நிலைக்கு மனிதன் சிந்திக்கத் தூண்டுகின்றான் உதாரணம் 1 + 1 = 2 // 1 + 1 = 5 இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது சகோதரரே! கீழே நான் சுட்டிக்காட்டிய சான்றுகள் ஆதாரமாகும்.

பெண்களைப் பற்றிய பைபிள்-திருக்குர்ஆன் ஆகியவற்றிற்கிடையே உள்ள கொள்கை வித்தியாசங்கள் புதிதாக பிறந்த பெண் சிசு பற்றியதோடு மாத்திரம் நின்று விடவில்லை அதையும் தாண்டி அது ஆழமாகச் செல்கிறது. தன் மதத்தைப் பற்றி கற்க முயற்சிக்கும் ஒரு பெண்ணின் நிலைமை பற்றி ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

யூத மதத்தின் இதயமே தவ்ராத் -கட்டளைகள் (Commandments) ஆகும்.
ஆனாலும் ' பெண்கள் தவ்ராத்தை வாசிப்பதிலிருந்து விலக்கப்படுகிறார்கள்' என்று தல்மூது கூறுகிறது. சில யூத மத குருமார்கள் உறுதியாக அறிவித்துள்ளதாவது 'பெண்களுக்கு தவ்ராத்தின் வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதை விட அதை நெருப்பில் போட்டு அழிப்பது நல்லது. ' 'யார் யார் தன் மகளுக்கு தவ்ராத்தை கற்றுக் கொடுக்கிறானோ அவன் அவளுக்கு அசிங்கத்தையே கற்றுக் கொடுக்கிறான். ' Denise L. Carmody, "Judaism", in Arvind Sharma, ed., op. cit., p. 197.

புதிய ஏற்பாட்டில் பவுல் அவர்களின் இது பற்றிய கண்ணோட்டம் கூட பிரகாசனமானதாக இல்லை:

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்;வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்: ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. (1 கொரிந்தியர் 14:34-35)

பெண் பேச அனுமதிக்கப்படவில்லையென்றால் எவ்வாறு கற்க முடியும்? அவள் முழு அடிமைத் தனத்திலேயே இருந்தால் அவள் வளர்ச்சி எவ்வாறு அறிவுப்பூர்வமாக அமையும்? அவள் தகவல் பெறுவதற்குரிய ஒரே வழி அவளின் கணவனாக மாத்திரம் இருந்தால் அவளின் சிந்தனையை வானம் வரை எவ்வாறு அவள் விரிவடையச் செய்ய முடியும்?

ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது. அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.

அவள் வரதட்சணை என்றும் சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.

அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.

விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள்.

அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது.

அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது.

அவள் அணிமணிகள் அணியக்கூடாது.

செவ்வாய் தோசம் போன்ற கொடூரமான மூடநம்பிக்கைகளால், அத்தோசமுள்ள பெண்ணின் மறுவாழ்வே கேள்விக் குறியாகி விடுகிறது )

மனுஸ்மிர்தி கூறுகின்றது:
பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.உன்னுடைய மகளோடு தனித்து அமராதே.

அவள் உன்னைத் தூண்டுவாள்.உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது. நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

" ஹாரியா"வின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள். அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம். பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்:

வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். ஒரு பெண்ணின் கணவன் பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்துவிட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக் கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும். 14-9-87 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் இந்தச் செய்தியைத் தருகின்றது.

இருபக்கமும் சமநீதியோடு இருக்கும் வகையில் இது பற்றி திருக்குர்ஆனின் நிலை வேறுபட்டுள்ளதா என்றும் நாம் கேட்க வேண்டும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரு சிறிய சம்பவமே இது பற்றி அதனுடைய நிலையை சுருக்கமாக விளக்க போதுமானது.

கவுலா என்ற முஸ்லிம் பெண்மணியின் கணவர் கோபத்தில் அவரிடம் ' நீ என் தாயின் முதுகைப் போன்றவள்' என்று கூறி விடுகிறார். இது திருமணக் கடமைகளிலிருந்து ஒரு கணவனை விடுவிக்கக் கூடிய ஆனால் மனைவியை கணவனின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லவோ அல்லது வேறு ஒருவனை மணக்கவோ அனுமதிக்காத ஒரு வகையான விவாஹரத்து சொல்லாக அன்றைய அரபிகளால் கருதப்பட்டது.

தன் கணவன் இவ்வாறு சொல்லக்கேட்ட கவுலா அவர்கள் மிகவும் துக்ககரமாகி விட்டார். தன் நிலைமையைக் கூறி வாதாட நபி (ஸல்) அவர்களிடமே அவர் நேராக போய் விட்டார். இதற்கு வேறு வழி தெரியாததால் நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட தன் திருமண பந்தத்தை காப்பதற்காக கவுலா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் திருக்குர்ஆன் இதில் தலையிட்டது:

கவுலாஅவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கெட்ட பழக்கத்தை தெய்வீக தீர்ப்பு அழித்தொழித்து விட்டது. இந்தச் சம்பவம் தொடர்ந்து ஒரு முழு அத்தியாயமே 'அல் முஜாதிலா' அல்லது 'வாதாடும் பெண்' என்று பெயரிடப்பட்டுள்ளது:

தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும் , அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக்கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான் ( 58:1)

திருக்குர்ஆனின் கொள்கையைப் பொறுத்தவரை ஒரு பெண் இஸ்லாத்தின் நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக வாதாடும் உரிமை பெற்றிருக்கிறார். மௌனமாயிருக்கும்படி அவர்களைச் சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. சட்டம், மதம் ஆகியவற்றைக் கற்பதற்கு அவரின் கணவனை மாத்திரம் சார்ந்திருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது.

பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமையில்லை இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது எனக் கூக்குரலிடுகின்றவர்கள் சற்று நிதானமாக சிந்திக்கும் சமயம் வந்துவிட்டது.

இவை பெண்களுக்கு முல்லாக்கள் கொடுக்கும் மரியாதையாகும்.

இதெல்லாம் பெண்களை தானம் செய்து வயிறு பிழைக்கும் வந்தேறிகளுக்கு எப்படித் தெரியும்

I am OK; You are NOT OK" என்பதில் குற்றம் காண்பவர்கள் சிந்திக்கட்டும்! ஏனெனில், "சிந்திப்பவர்களுக்கு இதில் நல்லுபதேசம் உள்ளது" என்பது குர்ஆனின் அழைப்பல்லவா?

Wednesday, September 06, 2006

பதிலுக்கு பதில் 2 (பர்தா)

ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

இந்த வார்த்தை முஸ்லிம்கள் மீது மட்டும் வழுக்கட்டாயமாக திணிக்கப்படும் வார்த்தையாகும். எல்லா மனிதருமே ஏதோ ஒரு மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கின்றோம். அவர்களின் செயல்பாடுகளுமே அதை ஒத்துத்தான் அமையும். சில விசயங்கள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது என்று வேண்டுமானால் மாற்றிவைக்கக்கூடும்.

உதாரணமாக வரதட்சணையை இந்துமதம் (பார்க்க: பொட்டு வைத்தல்
http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_14.html ) ஆமோதிக்கின்றது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை என்றும் வரதட்சணை வாங்காதே என்றும் அதே இந்துக்களே பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் இதுபோன்ற மாற்றத்துக்கு இதுவரை ஆளாகவில்லை இன்ஷா அல்லாஹ் இனியும் ஆகாது.

ஆனால் பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ளமுடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.

2 எனக்கு எழும் ஸந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.

(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன் (குர்ஆன் 24:30)

இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது. இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'ஸந்தேகம்' வராது.

மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.
மிகவும் எதார்த்தமாகச் சொல்வதென்றால், சகோதரி முன் ஒரு சகோதரன் அரைகுறை ஆடையுடன் அல்லது அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்து நிற்பதை தவறாகக் கருதாத சமூகம், அதே ஒரு சகோதரி அவ்வாறு நின்றால் ஏற்குமா? என்று சிந்திந்தால், இஸ்லாம் எதார்த்தமாகவே மதக்கட்டளை இட்டுள்ளது என்பது விளங்கும்.

பர்தா என்பது யூத-கிறிஸ்தவ மதத்தில் இல்லை என்பது உண்மையா? அது பற்றி ஆதாரங்களை முதலில் பார்க்கலாம். டாக்டர் மெனாகெம் பிரேயர் (பைபிள் இலக்கியப் பேராசிரியர், யேஷவா பல்கலைக்கழகம்) தன்னுடைய 'ரப்பானிய நூல்களில் பெண்கள்' என்ற புத்தகத்தில் 'யூதப்பெண்கள் வெளியே செல்லும் போது தலையை மூடிக்கொண்டு செல்வார்கள்; சில சமயங்களில் முகத்தையும் மூடிக்கொண்டு ஒரு கண்ணை மாத்திரம் திறந்திருப்பார்கள் என கூறுகிறார்.76 சில புராதான அறிஞர்களின் வாக்குகளை அவர் கோடிட்டு காட்டுகிறார், 'இஸ்ராயீலியப் பெண்கள் தலையை திறந்த வண்ணம் நடக்கக்கூடாது' 'தன் மனைவியின் தலைமுடியை மற்றவர்களை பார்க்க விடுபவன் சபிக்கப்படுவானாக.... அலங்காரத்திற்காக தலைமுடியை தொங்கவிடுபவள் வறுமையை வரவழவைப்பவளாவாள்'

பிரார்த்தனைகளையோ அல்லது அருள்மொழிகளையோ தலையைத் திறந்திருக்கும் பெண்ணின் முன்னால் ஓதுவதை ரப்பானிய சட்டம் தடுக்கிறது. ஏனெனில் தலையை திறந்திருப்பது 'நிர்வாணமாக' இருப்பது போல் கணிக்கப்படுகின்றது.77 தன்னயத்தியன் என்ற காலத்தின் போது தலையை மூடாத பெண் கற்பையே கேவலப்படுத்தியவளாக கருதப்பட்டாள் என டாக்டர் ப்ரேயர் மேலும் குறிப்பிடுகிறார்.

அவள் தலை திறந்திருந்தால் இக்குற்றத்திற்காக அவளுக்கு நானுஸறு ஸஹஸிம் அபராதம் போடப்படலாம்.' ஆனால் இந்த யூதப் பெண்களின் இந்த திரை எப்பொழுதும் கற்பின் அடையாளமாக கருதப்படவில்லை என டாக்டர் ப்ரேயர் விளக்குகிறார். சில நேரங்களில் அது கற்பை குறிப்பதை விட உயர்ந்த நிலையையும் வசதியையுமே குறித்தது. கண்ணியமிக்க பெண்களின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் அடையாளமாக திரை திகழ்ந்தது. அவள் மற்றவர்கள் புக முடியாத தன் கணவனின் புனிதசொத்து என்பதிற்கு அடையாளமாகவும் அது திகழ்ந்தது.

திரை பெண்ணின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்தை குறித்தது. கீழ்சாதிப்பெண்கள் தங்களை மேல்சாதிப்பெண்களாக காட்டிக்கொள்வதற்காக அடிக்கடி திரையை அணிந்து வந்தனர். திரை என்பது கண்ணியத்தின் அடையாளம் என்பதால்தான் யூத சமுகத்தில் உள்ள விபச்சாரிகள் அதை அணிய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், விபச்சாரிகள் மரியாதைக்குரியவர்களாக தோற்றமளிக்கும் பொருட்டு வேறு விஷமான தலைமறைவை அணிந்து வந்தனர்.79 ஐரோப்பாவிலுள்ள யூதப்பெண்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, அவர்களின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலக கலாச்சாரத்துடன் கலந்து போகும் காலம் வரை, திரையை அணிந்தே வந்தனர். ஐரோப்பிய வாழ்க்கையின் வெளிப்புற அழுத்தம் அவர்கள் தலையை திறந்து நடமாட நிர்ப்பந்தித்தது.

தங்களின் வழமையான தலைமறைவை அணிவதற்குப் பதிலாக விக் அணிவது மிகவும் சௌகரியமானது எனக்கண்டனர். இன்று, மிகவும் பக்தியுள்ள யூதப்பெண்கள் கூட ஆலயத்திலல்லாது வேறு எங்கும் தலையை மறைப்பதில்லை.80 அவர்களில் ஹாஸிதிக் பிரிவைச் போன்ற சிலர் இன்னமும் விக்கை உபயோகித்து வருகின்றனர்.81

இது சம்பந்தமாக கிறிஸ்தவ நடைமுறை என்ன? கத்தோலிக்க பெண் துறவிகள் பல நூற்றாண்டுகளாக தலையை மறைத்து வருகின்றனர் என்பது நன்கு அறியப்பட்டதே. புனித பவுல் திரையைப்பற்றி மிகவும் சுவையான செய்தியை கூறுகிறார்:

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாறென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.

ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்: அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்: தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக் கடவுள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் கிமையுமாயிருக்கிற படியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை:

ஸ்திரியானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸதிரீக்காகச் சிருஷடிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ;டிக்கப்பட்டவள். ஆகையால் (தென் காரணமாகவும்) மேலும் தூதர்களினிமித்தமும் ஸ்திரீயானவள் தலையின் மேல் (அதிகாரத்தின் அடையாளமாக). முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். (1 கொரிந்தியர் 11:3-10)

அது தேவனுடைய சாயலாயிருக்கும் ஆணிற்கு, அவனிலிருந்து, அவனுக்காக படைக்கப்பட்ட பெண்ணின் மேலிருக்கும் அதிகாரத்திற்கு அடையாளம்தான் திரை என்பதுதான் திரைக்கு புனித பவுலின் விளக்கம். புனித தர்த்தலியன் தன்னுடைய புகழ்பெற்ற 'கன்னிகள் திரையிடுதல்' பற்றிய கட்டுரையில் 'வீதிகளில் செல்லும் போது திரையணியும் இளம் பெண்களே, நீங்கள் ஆலயத்திலும் அணியுங்கள், அன்னியர் முன் திரையணியும் நீங்கள் உங்கள் சகோதரருக்கிடையே இருக்கும் போதும் திரையணியுங்கள்....' என்று கூறுகிறார். கத்தோலிக்க சர்ச்சின் கானானிய சட்டங்களில் பெண்கள் சர்ச்சிலிருக்கும் போது திரை அணிய வேண்டும் என்ற சட்டமும் ஒன்றாகும்.82 இன்றளவு வரை ஆமிஷ;, மென்னோமித் போன்ற சில கிறிஸ்தவ பிரிவுகள் தங்களின் பெண்களை திரையிட்டவர்களாக வைத்திருக்கின்றனர்.

திரைக்கு சர்ச் தலைவர்கள் கொடுக்கும் காரணம் பவுலடியார் புதிய ஏற்பாட்டில் கொடுக்கும் அதே காரணம்தான்: 'தலைமறைவு என்பது பெண் ஆணுக்கும் கடவுளுக்கும் அடிமைப்பட்டிருப்பதன் அடையாளமாகும்'83

தலைமறைவு என்பது இஸ்லாத்தால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை மேலுள்ள ஆதாரங்கள் தெளிவாக்கும். இருப்பினும், இஸ்லாமும் அதை அங்கீகரித்தது. விசுவாசம் கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை தாழ்த்துமாறும் கற்பை காத்து வருமாறும் பெண்கள் தங்களின் தலைமறைவை தங்கள் கழுத்து மார்பு ஆகியன வரை இழுத்து விடவும் இஸ்லாம் கட்டளையிடுக்கின்றது

(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். .... மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளை பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்: அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிரஸ மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)

எதற்காக திரை அணிய வேண்டும்? இதை திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.

'நபியே, உம்முடைய மனைவிகளிடமும் பெண்களிடமும் மற்றும் மூமினான பெண்களிடமும் கூறுவீராக: அவர்கள் (வெளியே அவசியத்தின் காரணமாக) செல்லும் போது தங்களி;ன் முந்தானைகளை தங்களின் மேல் தொங்க விட்டுக்கொள்ளட்டும். அதனால் அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்பட்டு துன்பத்திற்கு உள்ளாகாமல் இருப்பதற்காக. (33:59)

இதுதான் முழு விசயமுமே. பிறரால் துன்பத்திற்குள்ளாவதிலிருந்து பெண்களை திரை பாதுகாக்கிறது. திரையின் முழு நோக்கமே பாதுகாப்பு என்பதற்காகத்தான். இஸ்லாமிய திரை, கிறிஸ்தவ திரையைப் போலல்லாமல் பெண்ணின் மேல் ஆணுக்குரிய அதிகாரத்தின் அடையாளமோ அல்லது பெண் ஆணுக்கு அடிமை என்பதற்கான அடையாளமும் அல்ல. இஸ்லாமிய திரை யூதப்பெண்களின் திரையைப் போலல்லாமல் செல்வச் செழுப்பின் அடையாளமோ அல்லது சில திருமணமான உயர்ந்த பெண்களின் தனிப்பட்ட தன்மையையோ காண்பிப்பதுமல்ல.

இஸ்லாமிய திரையென்பது பெண்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக அணியப்படும் ஒழுக்கத்தின் அடையாளமே. நஷ்டப்பட்ட பிறகு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை விட எப்பொழுதும் பாதுகாப்பான முறையில் இருந்து கொள்வது சிறந்தது என்பதுதான் இஸ்லாமிய தத்துவமாகும். உண்மையில் திருக்குர்ஆன் பெண்ணின் உடலையும் அவள் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் எந்த அளவிற்கு அக்கறை எடுத்துள்ளதெனில், அவள் மீது எவறேனும் பொய்யாக களங்கம் சுமத்த முயலுவாரேயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகிறது:

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் எற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (24:4)

இந்த தண்டனையை கற்பழிப்பு குற்றத்திற்கு பைபிள் தந்திருக்கும் மிகச்சிறிய தண்டனையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்:

நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோட சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோட சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்: அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்: அவன் உpரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. (உபாகமம் 22: 28:29)

இங்கு யார் உண்மையிலேயே தண்டிக்கப்படுகிறார் என்பதை ஒருவர் சிந்திக்கவேண்டும். கற்பழித்ததற்காக அபராதம் விதிக்கப்படுவது ஆணா அல்லது தன்னைக்கற்பழித்தவனை மணக்குமாறும் அவன் சாகும் வரை அவனோடு வாழ நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணா? இங்கு கேட்கப்பட வேண்டிய மற்றொரு கேள்வி: பெண்ணுக்கு அதிக பாதுகாப்பளிப்பது எது? திருக்குர்ஆனின் கடுமையான போக்கா அல்லது பைபிளின் தளர்ந்த போக்கா?

சிலர், குறிப்பாக மேற்கத்தியர், பர்தா (பெண்ணை) பாதுகாக்கிறது என்பதை ஏளனம் செய்வர். கல்விiயையும், நல்ல பண்பாடு நிறைந்த நடைமுறைகளையும், கட்டுப்பாடாக இ ருப்பதன் அவசியத்தையும் பரப்புவதுதான் மிகச்சிறந்த பாதுகாப்பு என அவர்கள் கூறுவர். அது மிகச் சிறந்ததுதான். ஆனால் போதுமானதல்ல என நாம் கூறுவோம். பண்பாடு மாத்திரம் பாதுகாப்பு தருவதற்கு போதுமானதென்றால், ஏன் வட அமெரிக்காவிலுள்ள பெண்கள் இருட்டாக இருக்கும் தெருவில் தனியாக நடப்பதற்கோ ஏன் ஆட்கள் காலியாக இருக்கும் கார் நிறுத்துமிடங்களில் கூட நடப்பதற்கோ பயப்படுகின்றனர்?

கல்வி மாத்திரம் தெற்கு தீர்வெனில், மிகவும் மதிக்கப்படும் குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் கூட பெண்களுக்கென தனியாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 'வீட்டிற்கு நடந்து செல்லும் வழி' ஏன் இருக்கிறது? மனக்கட்டுப்பாடு மாத்திரம் தீர்வெனில் ஏன் வேலை செய்யுமிடங்களில் பெண்கள் காமக்களியாட்டங்களுக்கு உட்படுத்தப்படுவதாக தினமும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன?

கப்பற்படை அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசியர்கள், சட்ட வல்லுனர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேலும் அமெரிக்க ஜனாபதியும் கூட காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ழுன் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த கீழ்காணும் புள்ளிவிவரத்தை நான் வாசித்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை:

கனடாவில் ஒவ்வொரு 6 நிமிடத்திலும் பெண்கள் பலாத்காரப் படுத்தப்படுகின்றனர்.
கனடாவிலுள்ள மூன்று பெண்களில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் ஓரு முறையிலாவது கற்பழிக்க முயற்ச்சிக்கப்படுவர்.

நான்கு பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையில் கற்பழிக்கப்படும் அபாயத்தில் அல்லது திட்டமிட்டு கற்பழிப்பக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

எட்டில் ஒரு பெண் கல்லுஸரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டிருக்கும் போது பலாத்காரப்படுத்தப்படுவார்.

மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அபாயம் இல்லையானால் தாங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிடுவோம் என கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 60 ஆண்கள் தெரிவித்தனர்.

நாம் வாழும் சமூகத்தில் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது. சமூகத்தின் வாழ்க்கை முறையிலும் கலாச்சாரத்திலும் ஒரு அடிப்படையான மாற்றிலும் முற்றிலும் அவசியமானது. ஒழுக்கரீதியான வாழ்க்கை மிகவும் அவசியப்படுகின்றது. உடையில், பேச்சில் ஆண் பெண் இருபாலருடைய பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கம் வேண்டும்.

இல்லையெனில் மிகவும் மோசமான புள்ளி விபரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் வரும் மேலும் துரதிர்ஷடவசமாக தென் விலையை பெண்கள்தான் கொடுத்து வருவார்கள். இதனால் உண்மையில், நாம் அனைவரும் துன்பத்திற்குள்ளாகிறோம் என்றாலும், நம் நிலை ,க. கிப்ரன் அவர்கள் கூறியது போல் '... அடியை வாங்கிக்கொண்டிருப்பவன் அதை எண்ணிக்கொண்டிருப்பவனைப் போலல்ல.'84

பெண்கள் வாங்கும் அடியை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்களாவர்கள் ஆண்கள். ஆகவே, ஓழுக்கமாக உடையணிந்து வந்த காரணத்தால் பள்ளிக்கூடங்களிலிருந்த மாணவிகளை வெளியேற்றிய பிரஞ்சு சமுதாயத்தைப் போன்ற சமுதாயங்களெல்லாம் இறுதியில் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறது.

ஆண்களுக்கு பெண்கள் மேலுள்ள அதிகாரத்தை காண்பிக்கும் வகையில் கத்தோலிக்க சந்நியாசிப்பெண்களால் அணியப்படும் தலைமறைவை 'புனித' அடையாளம் என மதிக்கப்படும் அதே வேளையில் பாதுகப்பிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் அதே தலைமறைவை 'அடக்குமுறை'யின் அடையாளம் என கருதப்படுவது இன்றைய உலகில் உள்ள மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்றானதேயாகும்.

Sunday, September 03, 2006

பதிலுக்கு பதில் 1

என்னுடைய பதிவைப் பற்றி தங்களுடைய பதிவில் சர்ச்சை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில்

சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர். உங்கள் மீது நடக்கப்போகும் அர்ச்சனைக்கு இப்போதே வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்த விஞ்ஞான காலத்திலும் இப்படியொரு பதிலை வைப்பது அபத்தம் தான். மேலும் நான் இன்டர் நெட் உலகிற்கு புதியவன் தான் ஆனால் என்னை இந்த அளவிற்கு சிந்திக்க வைத்ததே, ஆரோக்கியம், டோண்டு ராகவன்,
Calgary சிவா, நேச குமார், வஜ்ரா ஷங்கர் போன்றோர் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருந்ததால்தான் நாமும் எழுதினால் என்ன என்ற சிந்தனையே வந்தது அவர்கள் இந்து மதத்தைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை ஏனெனில் நானும் அங்கிருந்து வந்தவன் தான் ஆனால் சம்பந்தமில்லாமல் பிற மதங்களின் அடிப்படை தத்துவங்களின் மீது அதன் பூரண ரூபம் தெரியாமல் விமர்சித்தால் அதன்மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு வெறுப்பும் வேதனையும் ஏற்படுவது சகசமே பிறகு அவர்கள் தீவிரவாதிகள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று கூக்குறலிடுவது எந்த விதத்தில் ஞாயம் என்பதை சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியம் சாரோ, டோண்டு ராகவன் சாரோ, Calgary சிவா சாரோ, நேச குமார் சாரோ, வஜ்ரா ஷங்கர் சாரோ அவர்களை கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை அவர்களும் என் சகோதரர்களே இது எனக்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் பாடமாகும் அறியாமையால் செய்யும் அவர்கள் நல்லவர்களாகக் கூட இருக்கலாம்

சிவா அவர்களுடன் உண்டான வலைப்பதிவு கருத்துப் பரிமாற்றங்களில் என்னை மதித்து வீட்டிற்கு அழைத்தால் யாருடன் என்னைக் கூட்டாக அழைப்பேன் என எழுதியிருந்தார். அன்று முதல் அவரது பதிவுக்கு வருவது வழக்கமாகிப்போனது ஏனய்யா மத்திய கிழக்கில் வேலை செய்யும் என்போன்றோரை அடிமை என்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டபோது, பண்பாக மன்னிப்புக் கேட்டு ' இனி தவிர்த்துக்கொள்வேன் ' என்றார். அவர் மீது கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

டோண்டு ராகவன் சாரை நேரில் சந்தித்த அனுபவமும் இருப்பதால் அவர் சொல்லிய கருத்தின் விளக்கம் கேட்கிறேன் , அவ்வளவே.
அன்புடன் ஆசாத்

இது சகோதரர் ஆசாத் அவர்களின் அபிப்ராயம்

ஆனால் அவர்களின் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருப்பதால் தான் எதிர்க்கின்றேன். மற்றவர்களை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக கொள்ளாமல் அவர்களும் என்ன சொல்கின்றார்கள் என செவிகொடுத்து கேட்க ஆரம்பித்தாலே போதும் மனக்கசப்புகள் நீங்க.

இவர்களின் இப்படிப்பட்ட கூத்தைப் பார்த்துத்தான் மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும் http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post.html என்ற கட்டுரையே எழுதினேன். ஆக என்னை இந்த உலகிற்கு இழுத்து வந்தவர்களே மேலே குறிப்பிட்ட இந்த சகோதரர்கள் தான்.

அதனால் சகோதரர் ஆரோக்கியம் சொல்வதுபோல்

//சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர்//

அவர் நான் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் பதில் தொடரும்

Tuesday, August 08, 2006

பெண் என்றால் பேயும் இறங்கும்

பெண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்றெல்லாம் கூக்குறல் எழுப்பும் இந்த நவீன பெண்ணியக்கவாதிகள் யார் இவர்களின் பூர்வீகம் என்ன இவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம் இந்து யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப்பற்றியான பார்வை என்ன?

தீமை புரியத்தூண்டுபவள் என்று பைபிளில் ஏவாளைப்பற்றி கூறப்பட்டிருப்பது யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ள பெண்களுக்கு எதிராக தொடர்ந்து மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பெண்களும் அவர்களின் தாயாரான ஏவாளிடமிடமிருந்து அவளுடைய குற்றத்தையும் கபடத்தனத்தையும் பரம்பரையாகப் பெற்றுள்ளனர் என்று நம்பப்படுகின்றனர். அதனால் அவர்கள் அனைவரும் நம்பத்தகாதவர்களாக ஒழுக்க ரீதியாக தாழ்ந்தவர்களாக தீயவர்களாக கருதப்படுகின்றனர்.

மாதவிடாய் கர்ப்பம் குழந்தைப்பேறு ஆகியவைகள் சபிக்கப்பட்ட பெண்ணினத்தின் என்றென்றும் நிலைத்திருக்கும் குற்றத்தின் தண்டனையாகவே கருதப்படுகின்றது. பைபிளிலுள்ள ஏவாள் அவளின் பெண் வாரிசுகளின் மீது எந்த வகையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள நாம் கடந்த காலத்திலுள்ள சில மிகவும் முக்கியமான யூத-கிறிஸ்தவர்களின் எழுத்துக்களை நோட்டமிட வேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் தொடங்குவோம்.

யூத மதத்தில் பெண்களின் பங்கு

ஞான இலக்கியம் என்று கூறப்படுவதில் காணப்படுவதாவது :
மரணத்தை விட கசப்பானவள் பெண். அவள் சிக்கவைக்கும் வலையாவாள் அவளின் இதயமோ கண்ணியாகும் மேலும் அவளின் கைகள் விலங்குகளாகும். இறைவனை மகிழ்விப்பவனோ அவளை விட்டு தப்புவான் ஆனால் பாவியையோ அவள் தன் வலைக்குள் சிக்கவைத்துவிடுவாள்... நான் தேடி தேடி காணமுடியாமலிருக்கும்போது ஆயிரம் பேரில் ஒரு நீதிமிக்கவனை கண்டுகொண்டேன். ஆனால் பெண்களிலோ அவர்களெல்லாரிலும் கூட ஒரு நீதிமிக்க பெண்ணை கூட காண முடியவில்லை. (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)

கத்தோலிக்க பைபிளில் காணப்படும் ஹீப்ரு இலக்கியத்தின் மற்றொரு பாகத்தில் உள்ளதாவது:

பெண்ணின் தீமைக்கருகில் கூட வேறு எந்த தீமையும் வர முடியாது.... பாவம் பெண்ணிலேயே ஆரம்பித்தது. அவளாலேயே நாமெல்லோரும் இறப்பதால் அவளுக்கு நன்றிகள். (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)

ஏவாளின் பாவத்தின் காரணமாக பெண்கள் மேல் சுமத்தப்பட்ட ஒன்பது வகையான சாபங்களை யூத அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளனர் :
பெண்ணிற்கு இறைவன் ஒன்பது சாபங்களையும் மரணத்தையும் விதித்தான்.

1.மாத விடாய் இரத்தத்தின் மூலமான துயரம்

2.பருவமடையும் போது இரத்தம் வருவதனால் ஏற்படும் துயரம்

3. கர்ப்பத்தால் ஏற்படும் துன்பம்

4. குழந்தை பெறும் போது ஏற்படும் துன்பம்

5.குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் துன்பம்

6. துக்கித்தவள் போல அவள் தலையை மூடியிருத்தல்

7. தன் எஜமானனிற்கு நிலையாக பணி புரியும் அடிமையைப் போல அவள் தன் காதை துளைத்துக் கொள்ளுதல் (அடியாத்தி... இப்பத்தான் புரியுது பெம்பளைக்கி ஏன் காதுகுத்துராங்கன்னு) பார்ப்பணர்கள் இந்தியாவிற்குள் திணித்த கலாச்சாரத்திலும் இஸ்ரேலிய கலாச்சார வரலாற்றுப் பிண்ணனி உள்ளது

8.அவளின் சாட்சி நம்பப்படாதிருத்தில்

9.எல்லாவற்றிற்கும் பிறகு ..... மரணம்.

இப்போதும் கூட மதப்பிடிப்புள்ள யூத ஆண்கள் தங்களுடைய பிரார்த்தனையின் போது 'என்னை பெண்ணாக ஆக்காதிருந்த அகிலத்தின் அரசனான இறைவனே தூயவன்' என்று கூறுகின்றனர். பெண்கள் தங்களின் பிரார்த்தனையின் போது 'என்னை உன் விருப்பத்திற்கேற்ப படைத்த'என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். பல யூத புத்தகங்களில் காணப்படும் மற்றொரு பிரார்த்தனை என்னவெனில் 'அந்நிய மதத்தவனாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் பெண்ணாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் என்னை அறிவீனனாக படைக்காத இறைவன் புகழப்படுவாராக.' என்பதாகும்.

கிறிஸ்துவ மதத்தில் பெண்களின் பங்கு

பைபிளினுடைய ஏவாளின் பங்கு யூத மதத்தை விட கிறிஸ்துவ மதத்தில் மிகவும் அதிகம். அவளுடைய பாவம் முழு கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கே மையமானதாகும் ஏனெனில் இவ்வுலகில் இயேசுவின் பணியைப் பற்றிய கிறிஸ்தவ கொள்கைக்கான காரணமே ஏவாள் இறைவனிற்கு கீழ்படியாதது என்பதினாலேயாகும். அவள் பாவம் செய்தாள் மேலும் அவளை பின்பற்றும்படி ஆதமையும் தூண்டினாள்.

அதன் விளைவாக இறைவன் அவர்களிருவரையும் சுவனத்திலிருந்து அவர்களின் காரணமாக சபிக்கப்பட்ட பூமிக்கு வெளியேற்றினான். இறைவனால் மன்னிக்கப்படாத அவர்களின் பாவத்தை அவர்கள் தங்களின் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர் அதன் காரணமாக எல்லா மனிதர்களுமே பாவத்தில் பிறக்கின்றனர். மனிதர்களை இந்த ஆதி பாவத்திலிருந்து நீக்கி பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் தேவ குமாரன் எனக் கருதப்படும் இயேசுவை சிலுவையில் பலி கொடுக்க வேண்டியதிருந்தது.

ஆகவே ஏவாள் தன்னுடைய சொந்த பாவத்திற்கும் அவளுடைய கணவனின் பாவத்திற்கும் முழு மனித இனத்தின் ஆதி பாவத்திற்கும் மற்றும் தேவ குமாரனின் மரணத்திற்கும் காரணமாவாள். வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஒரு பெண் தன்னிச்சையாக செய்த செயலின் விளைவாக முழு மனித இனத்தையுமே பாவமுள்ளதாக்கி விட்டாள். அவளின் பெண் மக்களில் நிலை என்ன? அவர்கள் அவைளைப் போலவே அவர்களும் பாவிகளாவார்கள் அவர்களை பாவிகளாகவே நடத்தப்படவேண்டும். புனித

பவுலடியாரின் கடும் கண்டனத்தை கேளுங்கள்

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம் பண்ணவும் புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதியாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான் பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். (1 திமோத்தி 2:11-14)

புனித தர்த்தலியன் தன்னுடைய 'மிகச் சிறந்த நேசத்திற்குரிய சகோதரிகளிடம்' பேசும் போது அவர்களை பவுலடியாரை விட கடுமையாக சாடுகிறார் :

நீங்கள் ஒவ்வொருவரும் ஏவாள் என்பது உங்களுக்கு தெரியாதா? இறைவனின் தண்டனை உங்களின் பெண் இனத்தின் மீது இந்தக் காலத்திலும் இருந்து வருகிறது. ஆகவே அதற்கான குற்றமும் (இப்பொழுதும்) இருந்தே தீர வேண்டும். நீங்கள் சாத்தான் நுழையக்கூடிய நுழைவாயில்;: தடுக்கப்பட்ட மரத்தை திறந்தவர்கள் நீங்கள்; தெய்வீக கட்டளையை முதன் முதலில் மீறியவர்கள் நீங்கள்; எவரைத் தாக்குவதற்கு சாத்தான் போதுமான வலிமையற்றவனாக இருந்தானோ அவரையே மயக்கிய பெண் நீங்கள்தான்; கடவுளின் சாயலான மனிதனையே நீங்கள் அழித்தீர்கள். நீங்கள் வரம்பு மீறியதாலேயே இறைமகன் கூட சாக நேர்ந்தது.
தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற (இத்தகைய கருத்து) சொத்திற்கு விசுவாசமானவராக புனித ஆகஸ்டின் விளங்கினார். தன்னுடைய ஒரு நண்பருக்கு அவர் இவ்வாறு எழுதுகிறார்:

'பெண் அவள் மனைவியாயிருந்தால் என்ன தாயாக இருந்தால் என்ன அதில் எந்த வித்தியாசமுமில்லை. பாவத்திற்கு தூண்டக் கூடிய ஏவாளாகவே எந்தப் பெண்ணும் இருக்கிறாள் என நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.... பெண்ணிற்கு பிள்ளை பெறும் வேலை இல்லாவிட்டால் அவளால் ஆணுக்கு வேறு எந்தப் பயனும் இருப்பதாக என்னால் காண முடியவில்லை.
இதற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட புனித தாமல் அக்யுனாஸ் பெண்களை குறைபாடுள்ளவர்களாகவே கருதினார்:

'பெண்ணின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்த வரை அவள் தேவடியாளாகவே இருக்கிறாள். ஏனெனில் ஆணுடைய விந்திலுள்ள வீரியமுள்ள சக்தி அவனைப் போன்ற முழுமையான ஆணை உருவாக்குகிறது. ஆனால் அந்த வீரிய சக்தியில் ஏற்ப்பட்ட ஏதோ குறைவினாலோ அல்லது பலவீனத்தாலோ அல்லது சில வெளிப்புற செல்வாக்கின் விளைவினாலோதான் பெண் பிறக்கிறாள்.'

இறுதியாக புகழ் பெற்ற சீர்திருத்தவாதியான மார்டின் லூதரும் பெண்கள் குழந்தை பெறுவதைத்தவிர அவர்களால் வேறு எந்த நன்மையும் இருப்பதாக கருதவில்லை. பெண்கள் எத்தனை அதிகமான குழந்தைகள் பெற முடியுமோ அவ்வளவு குழந்தைகள் பெற வேண்டும். அதனால் அவர்களுக்கு எவ்வளவு பாரதூரமான விளைவு ஏற்பட்டாலும் சரியே.

'அவர்கள் (குழந்தை பெறுவதில்) வெறுப்புற்றாலும் ஏன் அதனால் இறந்து போக நேரிட்டாலும் ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் அதனால் (சாக நேரிடின்) சாகட்டும். ஏனெனில் அதற்காகத்தான் (குழந்தை பெறுவதற்காகத்தான்) அவர்கள் இருக்கிறார்கள்.'

பாவம் செய்யத் தூண்டிய ஏவாள்தான் இவர்கள் என நினைத்துக் கொண்டும் பெண்கள் மீண்டும் மீண்டும் இழிவுக்குள்ளாக்கப்படுகின்றனர். (ஏவாளைப் பற்றிய) ஆதியாகமத்தின் கதைக்கு நன்றிகள். மொத்தத்தில் யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப் பற்றிய கருத்தோட்டம் ஏவாளும் அவளின் பெண் சந்ததிகளும் பாவம் செய்யும் இயல்புள்ளவர்கள் என்ற நம்பிக்கையால் விஷமாக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என நாம் இப்போது கவனித்தால் பெண்களைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்தோட்டம் யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ளதை விட மிகவும் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நம் இந்து மதத்தில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருந்தது என்று சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல அறிந்த உண்மைகள்தான்.

பெண்கள் பற்றி திருக்குர்ஆனே பேசட்டும்:

ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும் நம்பிக்கையாளர்களாகவும் கீழ்ப்படிபவர்களாகவும் வாய்மையாளர்களாகவும் பொறுமையுடையோராகவும் தானதர்மம் செய்பவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (33:35)

இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (9:71)

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் - அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி - நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (3:195)

தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி - இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் - அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (40:40)

ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்க ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (16:97)

பெண்களைப் பற்றிய திருக்குர்ஆனின் கண்ணோட்டம் ஆண்களிலிருந்து மாறுபட்டதல்ல என்பது தெளிவு. அவர்கள் இருவரும் இறைவனின் படைப்புக்களே. அவர்களின் ரப்பை வணங்குவதும் நற்செயல்கள் புரிவதும் தீய செயல்களை தவிர்ப்பதுவுமே பூமியில் அவர்களின் உன்னத இலட்சியமாகும்.

அவர்கள் இதை எந்த அளவிற்கு சரியாக நிறைவேற்றுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுவார்கள். பெண் சாத்தானின் நுழைவாயில் என்றோ அல்லது அவள் இயல்பிலேயே ஏமாற்றுக்காரி என்றோ திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை. மேலும் ஆண் இறைவனின் சாயல் என்று திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை: ஆண்கள் பெண்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்களே. அவ்வளவுதான். திருக்குர்ஆனைப் பொறுத்தவரை இவ்வுலகில் பெண்களின் பங்களிப்பு குழந்தை பெறுவதோடு நின்று விடுவதல்ல. மற்ற ஆண்கள் எந்த அளவிற்கு நற்காரியங்கள் செய்ய வேண்டுமோ அது போலவே அவர்களும் செய்ய வேண்டும். நேர்மையான பெண்களே இருந்ததில்லை என்று திருக்குர்ஆன் ஒருபோதும் சொன்னதில்லை.

அதற்கு மாறாக கன்னி மரியாள் பிர்அவுனின் மனைவி போன்றவர்களின் உயர்ந்த முன் மாதிரிகளை எல்லா நம்பிக்கையாளர்களும் பெண்களும் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:

பிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒரு போது அவர் இறைஞ்சினார்: 'என் அதிபதியே எனக்காக உன்னிடத்தில் - சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக

மேலும் இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகிறான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும் அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (66 11-12)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவில் இருக்கக்கூடிய பார்ப்பணர்களின் நம்பிக்கையும் இஸ்ரேல் யூதர்களின் நம்பிக்கையும் ஒன்றுதான் என்பதாகும். (யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா… என்ற பாடல் தான் ஞாபகம் வருது போங்க)

இந்த அளவுக்கு பெண்களை கேவலமாக நினைக்கக்கூடிய கீழ் புத்திகொண்ட இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய சகோதரர்கள் டோண்டு, வஜ்ரா, நேசகுமார் வகையாராக்கள் பெண்களின் கற்பைப்பற்றி பெண்கள் கர்ப்பம் ஆகாமல் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி அட்வைஸ் செய்ததில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் எப்படி பெண்களை கேவலமாக நினைக்கின்றார்களோ முழு சுதந்,,,,,,,,,,,,,,,,,,திர அழகி போட்டிகள் என்ற பெயரில் அப்படியே செயல்படுத்தவும் துணிந்துவிட்டனர் பெண்களை பெண்களாக நினைப்பவர்களிடம் பபர்த்தீர்களா நாங்கள் தான் ஜெயித்தோம் என்று மார்தட்டி இருமாப்பு கொள்கின்றனர் பாவம் இதை பெண்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை

பெண்களுக்கே உரிய நீ அழகா? நான் அழகா? என்ற போட்டி மனப்பான்மையைவ(ஜ்)க்கிர புத்திகொண்டவர்கள் மிக அழகாக சூசகம் செய்து கொண்டனர்.

இதில் பெண்கள் பலிகடாக்கள். நாசமாவது சமூகம் & கலாச்சாரம்.
நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டுவர்ரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்

Monday, July 24, 2006

புராணங்களை படித்தும் புரியாதது

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முழுநேர ஊழியர்களாகவும் கால வரையரையுற்ற தொண்டர்களாகவும் பேசி எழுதித்தள்ளிக்கொண்டே இருந்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச்செய்து கொண்டேதான் இருக்கின்றான், அல்ஹம்துலில்லாஹ்.

நிகழும் இந்த காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிராக புனையப்படும் பொய்க் கணைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவை அனைத்தும் இப்பொழுது நாம் சிந்தித்துத்தான் எழுதுகின்றோம் பேசுகின்றோம் என்ற நினைப்பில்தான் ஒவ்வொரு சிந்தனையாளன் என்ற பெயரில் உள்ள அறிவு சூனியங்களும் உள்ளனர்.

ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தின் வழியே சஞ்சரிக்கும் மனிதர்களுக்கு நன்றாகத் தெரியும் இவையனைத்தும் இஸ்லாத்தின் எதிரிகள் காலாகாலமாக சொல்லிக் கொண்டேயிருக்கும் கூப்பாடுகள்தான் என்று.

இந்த எழுத்துத்துறையில் உள்ள சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளுக்கு என்னதான் பதில் எழுதினாலும் அவர்கள் அதையேதான் சிக்கிப்போன ஒலித்தட்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இஸ்லாத்தின் எதிரிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்த சமுதாயத்திற்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது அதுதான் அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி ஆம். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வாக்குறுதியளிக்கின்றான்.

காஃபிர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (9:32)

இந்த இறைவசனத்திற்கு சான்றாக இதோ அல்லாஹ்வின் மீண்டும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள்.

புராணங்களை படித்தும் புரியாதது குர்ஆனைப் படித்து....
அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய 18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.

முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள்.
வாழ்க்கை முறை
நான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்பந்தமான கல்வியை நான் கற்றேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது.

சில காலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.
இஸ்லாத்துடன் பரிச்சயம்
ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை.
சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர். சில காலம் கழிந்து அந்த பகுதிநேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன்.

மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன்.

வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.

அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது. இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன்.

எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?
எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம்.

இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள். இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை.
அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)

இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன். ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால்
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14

அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால்

..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)
இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன். என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது. அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன்.

டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள்.
நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான்.ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொகுப்பு: (ஆங்கிலத்திலிருந்து தமிழில்) : கோவை. பஷீர்

Thursday, June 22, 2006

வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.

மதம் அல்லது மார்க்கம் என்பது மனிதனை மனிதனாக மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சக மனிதனை மிருகமாகவும் காட்டுமிராண்டியாகவும் அல்லது தன்னை விட மட்டமாகவும் கருதுவதை அல்லது அந்த கருதுதலை நியாயப்படுத்தி கடமையாக்குவதை ஒருபோதும் மார்க்கமாகக் கருதமுடியாது.

ஏனெனில் அது மனிதனை நற்சிந்தனைக்கு பதிலாக தீய வழிக்கே இட்டுச் செல்லும் மத நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. அப்படி தன் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அந்த மதத்தை மற்றவர்கள் விமர்சிப்பதும் அதற்கு பதில் இல்லாமல் விமர்சிக்கக்கூடிய விமர்சனத்திற்கு பதில் தராமல் விமர்சிக்கக்கூடியவர்களை கெட்டவர்கள் என்று தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்.

ஒரு கடைக்காரன் தன் பொருள் நல்லபொருள் என்று சொல்லாமல் பக்கத்து கடைக்காரனின் பொருள் மோசமானது என்று சொல்வது எப்படி சரியில்லாத வழிமுறையோ அதுபோலத்தான் இதுவும்.

இதை நன்கு சிந்திக்கக்கூடியவன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்தேன். இந்து மதத்திலிருந்து விரக்தியுற்று பிரிந்தவர்கள்தான் நாத்திகர்கள். அதாவது தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள். அதாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள். இயற்கையை கடவுளாக வணங்கக்கூடியவர்கள் (தமிழர்கள்) ஆனால் அவர்களிடம் தற்போது பாக்கியுள்ளது என்ன?

தமிழர்திருநாள் பொங்கல் மட்டுமே பாக்கியுள்ளது. அதாவது போகிப்பண்டிகை, பொங்கல்திருநாள், மாட்டுப்பொங்கல் இந்த மூன்று திருநாள்களை தவிர அந்த தமிழர்களை கடந்து செல்லக்கூடிய வருடத்தின் 362 நாட்களும் யாரோ (வந்தேறிகள்) நம்மீது புகுத்தியது; திணித்ததாகும். இதை ஒத்துக்கொள்ளாத எந்த தமிழ்மனம் உண்டு?

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு. அந்த இனமும் அதற்கான குணமும் இப்பொழுது எங்கே? வரதட்சணை கொடுத்து திருமணம், மகளின் பூப்புனித நீராட்டுவிழா, விநாயகர் ஊர்வலம், இறந்தவர்களுக்கு திவசம், நல்ல நாள் பார்ப்பது இதுபோல் இன்னும் பலபல ……. இவையெல்லாம் தமிழகத்துக்குள் புகுந்தது எப்படி? எப்பொழுது? உண்மை நிலை என்னவெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, படிக்காத மேதை காமராஜர் ஆகியோருக்கு பிறகு ஒரு தமிழன் கூட தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பாசறையில் வந்த தலைவர்கள் எங்களுக்கு நாற்காலி கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த சமூகத்திற்குள் அவர்களால் பிடித்து நிற்க வழி தெரியவில்லை. அல்லது வழி நடத்த தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.

தமிழுக்கென்ற மரியாதையை தமிழன் கொடுக்கவில்லை. அதனால் வந்தேறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டு தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் தங்களின் சித்தாந்தத்தை உள்ளே வாழைப்பழத்தில் விஷ ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றி நாசமாக்கி விட்டனர். விளைவு? அந்த இனத்தையும் குணத்தையும் யாராவது எங்காவது கண்டால் தயவு செய்து தமிழ்மணத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்ற நிலையாகி விட்டது.

அதன் விளைவில் ஒன்றைத்தான் இன்று தமிழர் சமூகம் வரதட்சணை என்ற பெயரில் அனுபவிக்கிறது. இதனைக் கொடுக்க முடியாமல் எம் சகோதர கன்னிப்பெண்கள் ஜன்னலோர தேய்நிலவாக கண்ணீரில் குளிக்கின்றனர். ஆச்சாரம் என்ற பெயரில் யாரோ அவிழ்த்துவிட்ட அனாச்சார கட்டுக்கதைகளால் சம்பாதிக்கக்கூடிய குறைந்த தொகையில் கணிசமான ஒரு பகுதியை கோவிலில் அர்ச்சனைக்காக அவாள்களிடம் எதிர்பார்ப்பின் கண்ணீரோடு தாரைவார்க்கின்றான் தமிழன். தமிழன் புரிந்து கொள்ளவேண்டும் இந்த ஒட்டுண்ணிகளின் வயிறு வளர்க்கும் தந்திரங்களை. தமிழா உன்னை நீ புரிந்துகொள்.

வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!!

அதற்காக,

இதோ இருகரம் நீட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது இஸ்லாம்.

Tuesday, April 25, 2006

ஜாதிகள் உள்ளதடி பாப்பா'

நான் போன பதிவில் வைத்ததைப் போன்றே மேலுமொரு பதிவாகும். ஜாதிவெறி என்ற நச்சு, நிச்சயமாக அடிமனதிலிருந்து களையப்படவேண்டிய ஒன்றாகும்

சமீபத்தில் எனது வகுப்பாசிரியர் அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் . அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்தார் ஆசிரியர். என்னைக் கண்டதும் வரவேற்று நலம் விசாரித்தவாறே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசினார். நானும் ஒருமணி நேரம் வாசலில் மரியாதையாக நின்றுகொண்டே பேசினேன்.

அப்போது ஆசிரியரின் துணைவியார் ஒரு கண்ணாடி டம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து "தம்பி எடுத்துக்கோ" என்று திண்ணையில் வைத்துவிட்டு போய் விட்டார். நானும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் காப்பியை குடித்து முடித்து டம்ளரை த் திண்ணையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் விடைபெற்று த் திரும்பும்பொழுது ஆசிரியரின் துணைவியார் ஆசிரியரை அழைத்து, "என்னங்க அந்த கண்ணாடி டம்ளரெ அந்த குப்பைத் தொட்டியிலே போட்டுடுங்கோ … ஆமாம் … அந்த பையன் கீழ்ஜாதிக்காரன் தானே?" என்றார் .

அதற்கு ஆசிரியரும், "நானும் அதையே தான் நினைத்தேன் … கொஞ்சம் பொறு ஒரு குச்சியிலே எடுத்துட்டு போயி போட்டுட்டு வர்றேன்" என்றார் ஆசிரியர்.

அதைக் கேட்ட எனக்கு நெஞ்சு திக்கென்றது. ச் … .சே என் குருவா இப்படி? வகுப்பில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு மனதில் ஜாதிகள் உள்ளதடி என நினைக்கின்றார் என்று எனக்குள்ளேயே நொந்து வெளியேறினேன்.
-வஸந்த் பூபதி,வெள்ளாங்கோவில்.பிப்ரவரி, 27, 2000 (27/02/2000) (தினமலர்)

இந்தச் சிந்தனை மாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் அவருடைய மனதிலிருந்து பிறப்பால் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நீக்கப்படவேண்டும் . ஒருவனிடமிருக்கும் 'நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்ற எண்ணம், அவனுடைய அடிமனதிலிருந்து முற்றாக அகற்றப் படாதவரை அவனுடைய மனதை ஆட்சி செய்பவன் அவனல்லன்; ஜாதி வெறி பிடித்த அரக்கன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஜாதி வெறியைச் சட்டம் போட்டோ இரும்புக் கரம் கொண்டோ நிச்சயமாக ஒடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டுதான் வஸந்த் பூபதியின் வேதனையில் வெந்த வரிகள் :

நான் உயர்ந்தவன்' என்ற இறுமாப்பு , மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.
லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய மகனுக்கு நல்லுபதேசம் செய்வதைப்போல் ஒரு சம்பவம் குர்ஆனில் காணக் கிடைக்கிறது::

31:18 ''( பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
தன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கை :

17:37 "மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது".

'நான் பெருமைக்குரியவன்' என்ற அகங்காரத் திமிரை விட்டொழிப்பதை இஸ்லாம் அடிப்படைக் கல்வியாகியுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
"கிட்டவராதேடா அபிஷ்டு" என்று திமிர்தனமாக விரட்டக்கூடிய ஜாதி வெறி பிடித்தவர்களும் நிறவெறி கொண்டலையும் வெள்ளையரும் வெட்கித் தலைகுனியும் படியான வேதவரிகளைப் பாரீர்

15:26 "(காய்ந்திருப்பின் சுண்டினால்) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் (முதல்) மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்"
36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? ...".

76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

19:67 "முன்னர் ஏதொன்றுமாக இல்லாதிருந்தவனை நிச்சயமாக நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"

22:5 மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் , (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்து, பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு கருவிலிருந்து, பின்பு அரைகுறை தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (படிப்படியான மாறுதல்களை விவரிக்கிறோம்): மேலும் , நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், உங்களில் (குறுகிய காலத்தில் உயிர் ) கைப்பற்றப் படுபவர்களும் (நீடித்து வாழ்ந்து) அறிவு பெற்றப் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..."

உலக மனிதர்கள் அனைவருமே ஒரே அடிப்படையில் தான் பிறந்தோம் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

உண்மை இவ்வாறிருக்க ,

"உன்னைப் போலவே பிறந்த சக மனிதனை, ' பிறப்பால் அவன் தாழ்ந்தவன்; நான் உயர்ந்தவன்' என்று ஏன் பிரித்துப் பார்கிறாய்?" என்பதுதான் ஏற்றத் தாழ்வு கற்பிப்போரை - வெள்ளாங்கோவில் வஸந்த் பூபதியின் ஆசிரியர் உட்பட - நோக்கி வீசப் படும் இறைவனின் கேள்வியாக இருக்க முடியும்
இந்த கேள்வியும் அதற்கான பதிலும் மனிதர்களின் மனதைத் தட்டுமானால்................
அதுவே நான் இந்த மார்க்கத்தை எற்றுக் கொண்டதன் லட்சியம்
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!!!

Monday, April 10, 2006

அன்பிற்கும் உண்டோ...

நமக்கு ஒருவர் மீது ஏற்படக் கூடிய அன்பு என்பது, நம்முடன் அவர் பழகும் முறையை வைத்துத் தோன்றுவதாகும். அவருடைய கொள்கையையும் நடத்தையையும் கண்டு, நண்பர் என்றால் இவரைப் போலல்லவா இருக்க வேண்டும் என்று நாமே தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும் நட்பு.

இந்தக் காலத்தில் நல்ல பொருள் வளம் இருந்தால் மட்டுமே நண்பன் என்பது எழுதாத சட்டமாகவே மாறிவிட்டது. "உற்ற நண்பனை ஓட்டலில் பில் கொடுக்கும்போது கண்டு கொள்ளலாம்" என்று எப்பொழுதோ படித்த ஞாபகம் உள்ளது.

நல்ல நண்பன் முகம் பார்க்கும் கண்ணாடிக்குச் சமம் என்பார்கள். " ஒரு மனிதனை நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற்றுவது அவனது நண்பர்களும் சூழ்நிலையும்" என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நல்ல நண்பனைப் பெற்றவன் நிச்சயமாக வழிகெடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உண்மை.

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: " மனிதன், தன் உற்ற நண்பனின் வழி எதுவோ அதன் படி நடக்கிறான்" நூல் : திர்மிதி, அபூதாவூத்

நண்பன் என்பவன் எந்த நேரத்திலும் துணையாக நிற்பவன். சந்தோஷம் வரும்பொழுது கும்மாளம் அடிப்பவனும் கஷ்டம் வந்துவிட்டால் விட்டு ஓடிவிடுபவனும் நிச்சயமாக நண்பனல்லன்; அவன் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதி என்பதை விட ஒட்டுண்ணி என்பதே பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன்.

இஸ்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியமாக நான் கருதுவதற்குக் காரணமான சில சம்பவங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு மனிதன் தன் தாய் மதத்தை விட்டு வேறொரு மதத்தைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால் அதைச் சிறிய விஷயமாக யாரும் எடைபோடக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை பழகிவந்த பழக்கவழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கலாச்சாரம் ஏன் அன்றாடம் இன்றியமையாத் தேவைகளைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அவன் தன்னைத் தயார் செய்து கொள்கின்றான். ஏனெனில் அவன் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி, அவனை அவ்வாறு மாற்றி அமைக்கிறது.

இதில் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்: ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மனிதன் மாற்றுகின்றான் என்றால் அந்த வரவை இன்முகத்தோடு வரவேற்கக்கூடிய சமுதாயமாக அல்லது அவனையும் அவனுடைய முடிவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்களாக அவர்கள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் வெற்றியும் இதுவே என்றே நான் நினைக்கின்றேன்.

இஸ்லாம் மறுமை நம்பிக்கையை மையமாக வைத்து மாந்தர்கள் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளச் சொல்கின்றது. மறுமை நம்பிக்கை என்பது 'நாளை மரணத்திற்கு பிறகு மீண்டும் நான் எழுப்பப்படுவேன்; பூவுலகில் என்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவேன்' என்பதாகும். இந்த நம்பிக்கை ஒரு மனிதனுடைய மனதில் ஆழமாக இல்லையெனில் அவன் தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனுமில்லை என்கின்றது இஸ்லாம்.

'நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அது உனக்கு நல்லது நீ அதை புறக்கணித்து வாழ்ந்தால் அது உனக்குத்தான் கேடு' என்ற கருத்தில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. உலகாதாயத்தை எதிர்பார்த்துத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லவுமில்லை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் இவ்வடிப்படையில் அமைதல் நலம் பயக்கும் .

நபித்தோழர் குபைப் இப்னு அதிஃ(ரலி ) அவர்களைக் கைதியாகச் சிறை பிடித்து, அவரைச் சிலுவையில் அறைந்து, அம்புகளாலும் கத்தியாலும் வெட்டிச் சித்ரவதை செய்து அவரைக் கொல்லத் தீர்மானித்த பின்னர், " உன்னுடைய இந்த இடத்தில் உனது தோழர் முஹம்மதை வைத்து விட்டு , அதற்குப் பதிலாக நீ விடுதலை அடைந்து உனது குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்க விரும்புகின்றாயா"? என்று அபுசுப்யான் கேட்டார்.

அதற்கு "இறைவன் மீது சத்தியமாக! எங்களது ஆருயிர்த் தோழர் முஹம்மது (ஸல்) அவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு நான் என்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருப்பதா? அவரது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்" என்று குபைப் இப்னு அதிஃ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த பதிலால் கொதிப்பேறிய அபுசுப்யான், தன் கையில் இருந்த ஆயுதத்தை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தவராக, "முஹம்மதை, முஹம்மதின் தோழர்கள் நேசிப்பது போன்றதொரு நேசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை", என்று கூவினார் .

இதுதான் நேசத்தையும் நேசத்தை நேசிப்பவர்களின் உள்மனதையும் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அறிவுரையாகும்.

இங்கு நான் என் மனதை பாதித்த ஒரு நட்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜாதி என்ற அந்த வெறி, மமதை ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. "ஜாதி என்பது மனிதனோடு ஒட்டிப்பிறந்தது அதை பூமியில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் நாம் எந்தக்குலத்தில் பிறக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டே பிறக்கின்றது" என நம்புகின்றான் இந்த படித்த மடையன்.

முதலில் நட்பைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.

தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்திய சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.

ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சான்று பகர்தலின் மூலம் இஸ்லாம் மனிதர்களைச் சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.

விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)

இறை நம்பிக்கை கொண்ட சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை:

1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். '' (ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ்முஸ்லிம்)

அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.

இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றிநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. நீதமான அரசன்

2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்

3. இதயத்தால் இறையில்லத்துடன் இணைந்திருக்கும் மனிதர்

4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே இணைந்தனர்; பின் அல்லாஹ்வுக்காகவே பிரிந்தனர்.

5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் '' என்று கூறி (மறுத்து) விட்டார்.

6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்

7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே ? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன். '' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம், தன் நண்பனை இந்த அடிப்படையில்தான் உருவாக்கவேண்டும். அதை விட்டு உலக ஆதாயத்துக்காக நண்பர்களைத் தேடினால் அந்நட்பு நிலைக்காதது மட்டுமின்றி அந்த நட்பு நண்பன் என்ற உறவுக்கு செய்யும் துரோகமாக இஸ்லாம் கருதுகின்றது. நான் சொன்ன இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இந்த சம்பவத்தை உங்களின் அடிமனதில் நிறுத்தி அசைபோட்டுப் பாருங்கள். இஸ்லாத்தின் வெற்றி உங்களுக்கும் புரியும்.

பொதுவாக தினமலர் வாங்கினால் "இது உங்கள் இடம்" மற்றும் அந்துமணியின் "பார்த்தது-கேட்டது-படித்தது" ஆகிய இரண்டு தான் நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதிகளாகும். எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன் 02/11/97 ல் பிரசுரமான தினமலர் கிடைத்தது. இது உங்கள் இடத்தில் பதிவாகியிருந்த இந்த சம்பவத்தை படித்து வெறுப்பதா? வேதனைப்படுவதா? என அறியாமல் திகைத்துவிட்டேன். அதை அப்படியே கீழே தருகின்றேன்.

எனக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் ஏராளமான பேனா நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒரு
நண்பர் என்னைப் பார்க்க எங்கள் ஊருக்கு வருவதாக கடிதம் எழுதியிருந்தார். நானும்
அவர் வருவதாகக் கூறியிருந்த நாளில் வெளியில் எங்கும் செல்லாமல் வழி மேல் விழி
வைத்துப் பார்த்திருந்தேன். நேரம் போனதுதான் மிச்சம் அவர் வரவே இல்லை.என் நண்பர்
அவர் குறிப்பிட்டிருந்த நாளில் வந்திருக்கின்றார். என் வீட்டிற்கு வழி கேட்கும்
போது என்னுடைய ஜாதி பற்றியும் அறிந்திருக்கிறார்.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட
இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் அப்படியே திரும்பி சென்று விட்டிருக்கிறார்.
இந்த விஷயம் எனக்குபிறகுதான் தெரிந்தது. உண்மையான நட்புக்கு கூடவா ஜாதி வேறுபாடு
பார்ப்பது என்று நொந்து கொண்டேன். இப்போதெல்லாம் பேனா நண்பர்களிடம் முன்கூட்டியே
என்னுடைய ஜாதி பற்றியும் எழுதி விடுகிறேன். பல நண்பர்கள் இதை கண்டிக்கின்றனர்.
எனினும் கசப்பான அந்தப் பழைய அனுபவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை.

வே.கார்த்திகேயன் களையகாவிளை. தினமலர் 02/11/97 (இது உங்கள் இடம்)
பகுதி.

நண்பர்களாக பழகுவதில் கூடவா ஜாதிவெறி!!

எனதருமை வாசகர்களே! நான் தாழ்ந்த ஜாதிக்கார(னாக சித்தரிக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவ) னல்லன். இருப்பினும் அந்த ஜாதீய சிந்தனைக்கு எதிரானவன் என்பதை இதுவரை என்னுடைய எழுத்துக்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நானும் என்னுடைய சந்ததியும் இதுபோன்ற கொடுமையிலிருந்து காலாகாலத்திற்கும் விடுதலை அடைய வேண்டுமென்றால் நான் எடுத்த முடிவு சரியானது தான் என என்னால் ஆணித்தரமாகக் கூற இயலும்.

Tuesday, March 21, 2006

சகோதரர் மகேஸ் அவர்களுக்கு பதில்

சகோதரர் மகேஸ் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி

நான் பிரமணர்களை திட்டுவதாக சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்து கொண்டார்கள் இது அவர்களின் புரிந்தாற்றலின் தவறாகும் நிச்சயமாக ஒரு முஸ்லிம் இன்னொரு தனிநபரை நேருக்கு நேர் அல்லாது சம்பத்த்ப்பட்ட மனிதருக்கு முன்னால் இல்லாது பின்னால் இருந்து திட்டுவதை எங்களின் நபி (தலைவர்) முஹம்மது (ஸல்)அவர்கள் தடுத்து உள்ளார்கள் அதுமட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.


அதனால் பிராமணர்களை நான் திட்டவில்லை மாறாக அவர்களின் கொள்கையைத்தான் எதிர்க்கின்றேன் அவர்கள் பிற மனிதர்களை பார்க்கும் பார்வையையும், அவர்கள் நடத்தும் முறையையும் தான் எதிர்க்கின்றேன். மற்றபடி அவர்களும் என் சகோதரர்களே.




மேலும் சகோதரர் மகேஸ் கூறும் பொழுது (இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.( இங்கு தகுதி என குறிப்பிட்டது கல்வித் தகுதியை)

என்று கேட்டிருந்தார் இது அவரின் அறியாமையா? அல்லது நானும் இதை சொல்லவேண்டும் என்ற ஆசைப்பட்டாரா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்வதைவிட சான்றோர்களின் பட்டியலையே சான்றாக கொடுக்கின்றேன்

இன்று இந்த நாட்டில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.பணமும் - வளமும் - பிராமணர்களும்மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.

சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான்.

அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறுக்கலாகாது.

இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36%3 கவர்னர்கள் - L.G. 50%4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)

ஏனைய நிறுவனங்களில்வங்கிகள் 57%விமானத் துறை 61%IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.

இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.

இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.

சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.
நன்றி www. எனது கிறுக்கல்ஸ் April 2005.htm

இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல என்பதை சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்



Sunday, March 12, 2006

தேவை மனமாற்றமா? மதமாற்றமா?

எந்த ஒரு இஸமானாலும் மதமானாலும் அதனுடைய கொள்கையும் கோட்பாடும் குறைந்த பட்சம்

1. பிறரின் தன்மானத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது.
2. மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

இவை இரண்டும் இல்லாத எந்த ஒரு இஸமும் மதமும் காலச் சுழல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அல்லது அதன் கூடாரம் சிறுகச் சிறுக காலியாகிவிடும்.

என் அருமை நண்பனின் தன்மானம் பறிக்கப்பட்ட நிகழ்வுகள், பல ஆண்டுகளாய் என் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி, மறக்க முயன்றும் முடியாததாகவே பதிந்து விட்டது.
அதை இங்குப் பதிவதற்கு முன்னர் ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இரண்டு நண்பர்கள் ஒரே இடத்திற்குப் போவதற்குப் பேருந்திற்காக காத்து நின்றனர். பேருந்தும் வந்தது. நண்பருள் ஒருவர் ஏறிவிட்டார். மற்றொருவர் ஏறுமுன்னரே பேருந்து நகர்ந்து விட்டது. பேருந்தில் ஏறிய நண்பரால் அந்த பயணத்தை நிம்மதியாகத் தொடர முடியுமா? மனிதனையும் மனித நேயத்தையும் நட்பின் ஆழத்தையும் உணர்ந்து நேசிக்கின்ற எந்த ஒரு மனிதனாலும் நிச்சயமாக முடியாது. அப்படிப்பட்டவன் ஒன்று அந்த பேருந்திலிருந்து இறங்கிவிடுவார். அல்லது பேருந்தை நிறுத்தி விடுவார். இதுதான் உண்மையான நேசத்தை வெளிப்படுத்தும் நல்ல மனதின், உறுதியான நட்பின் நிலைபாடாகும்.

ஆனால், பேருத்தில் ஏறிக்கொண்ட நண்பன் பயணத்தைத் தொடர்ந்தானேயானால் பேருந்தைத் தவற விட்ட நண்பனின் உள்ளம் எவ்வளவு பரிதவிக்கும்? அந்தப் பரிதவிப்பை வெறும் ஏட்டில் எழுதி உணர வைக்க முடியுமா?

சுனாமியின் பாதிப்பை கேஸட்டிலும் டெலிவிஷனிலும் பார்ப்பவர்களுக்கு , அதனுடைய பாதிப்பின் ஆழத்தை உணரமுடியாது. அதில் நேரடியாக அகப்பட்டவனுக்குத்தான் அந்த பாதிப்பின் சுயரூபத்தையும், தாக்கத்தையும், வீச்சையும் உணரமுடியும்.

அதுபோலவே, ஜாதி என்னும் கொடுங்கோலனின் ஆட்சியில் அகப்பட்டுத் தன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டவனுக்குத்தான் அதன் கொடுமையின் கடுமை தெரியும்.

இனி, விஷயத்துக்கு வருகிறேன்.

என் மனது சொல்லமுடியாத அளவுக்கு வேதனைப்பட்டதும் இன்னும் வேதனைப்படுவதும் என்னுடைய சிறுவயது பள்ளி வாழ்க்கையில், அந்தப் பிஞ்சு மனதில் ஏற்பட்ட கலக்கங்களினால். அப்போது அதை எதிர்த்து நிற்கவும் முடியாது; அதற்கான மாற்று வழி தேடவும் தெரியாது. அந்நிகழ்வு பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்து விட்ட வடு. நான் நட்பைப் பெரிதாக மதிப்பதால்தான் என்னால் அந்த வேதனையை உள்ளது உள்ளபடி உணர முடிகிறதோ என்னவோ?

பள்ளிகளில் நிச்சயமாக ஜாதியம் போதிக்கப்படுவதில்லை. ஆனால் பள்ளிக்கு வெளியில் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அது குடிகொண்டு ஆட்சி செலுத்துகிறது. என்னுடைய பள்ளி நண்பர்கள் அனைவரும் ஆதி திராவிடர்கள்தாம். அவர்களோடு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருடனும் நான் மிக நெருக்கமாகவே பழகினேன். நட்பை, உலகில் உயர்ந்த ஒன்றாகக் கண்டேன். அதனால்தான் நட்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த ஒரு சம்பவத்தையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எழுத்துக்காக கற்பனையில் சொல்வதன்று; என்னுடைய வாழ்க்கையில் பிஞ்சு மனதில் பதிந்த, கருத்த நிழற்படங்கள்.

அதனால்தான் அந்தச் சம்பவங்களை என் மனதிலிருந்து மாற்றவோ மறைக்கவோ முடியாமல் போனது. அதற்கான மாற்று என்ன எனத் தேடவும் தூண்டியது.

நானும் என் நண்பர்களும் பள்ளியறையில் ஒரே பெஞ்சில்தான் அமர்ந்திருப்போம். காலையில் இடைவேளயின் போது ஐந்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி, சட்டைக்குள் வைத்து (காக்கை கடி) கடித்து எல்லா நண்பர்களும் பகிர்ந்து கொள்வோம். மதிய உணவும் மரத்தடியின் கீழமர்ந்து பகிர்ந்தே உண்போம். காலையிலிருந்து மாலைவரை கிட்டத்தட்ட ஒன்பதரை மணிநேரம் ஒன்றாகவே பள்ளியில் இருப்போம். எல்லோரும் ஒன்றாகவே வீட்டிற்கும் திரும்புவோம் . ஆனால் பள்ளியை விட்டு வெளியில் வந்தவுடன் இவன் மேல்ஜாதிகாரன்; அவன் கீழ்ஜாதிக்காரன் எனப் பிரிக்கப்படுவோம்.
நானும் என் ஆதி திராவிட நண்பனும் அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிடப் போவோம். எனக்கு மட்டும் உள்ளே நுழைய அனுமதி தரப்படும். எனதருமை நண்பன் வெளியே நிறுத்தப்படுவான்.

கடைக்குப் போவோம். எனக்கென்று தனி ஒரு உபசரிப்பு; அவனுக்கென்று வேறு மாதிரி உபசரிப்பு.

என் வீட்டிற்கு இரவு நேரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கு என் நண்பன் வருவான். விடிந்தால் பள்ளியில் என்னுடன் ஒட்டி உறவாடி ஓடியாடி விளையாடக்கூடிய என்னுயிர் நண்பன், எங்கள் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படுவான். என் வீட்டிற்கு உள்ளே வருவதும் என்னுடன் வெளிப்படையாகப் பழகுவதும் அவனுக்குத் தடை செய்யப் பட்டதாகும்.

காரணம் என்ன? அவன் கீழ்ஜாதிக்காரன்; என் வீட்டிற்குள்ளே அவன் வந்தால் சாமி தீட்டாகிவிடும். இப்படி சக மனிதனோடு அவனின் சுயமரியாதையோடு விளையாடக்கூடிய சாமியும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கின்ற தீய சம்பிரதாயமும் நமக்கு தேவையா?

"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்;
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்


என்றெல்லாம் ஆயிரம் சொல்லிப் பார்த்தார் பாரதியார். ம்ஹூம் ... ஒன்றும் பிரயோஜனமில்லை.

இப்போது நான் கேட்கின்றேன் இங்கு நமக்குத் தேவை மனமாற்றமா? அல்லது மதமாற்றமா?


மனமாற்றம் என்றால் என்ன?
இந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காக நம் அரசாங்கம் பொறி கடலையெல்லாம் கொடுக்கத்தான் செய்கின்றது. ஆனால் சமூகத்தின் மனதை மாற்றமுடிகின்றதா ? அவ்வளவு ஏன்? பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் போதுகூட ஜாதியைக் குறிப்பிட்டே தான் சேர்க்கப்படுகின்றனர்.


ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் போய் வாழ்ந்தால் பிறப்பினால் ஒட்டிக் கொண்ட ஜாதியைக் கொஞ்ச காலமாவது மறைக்க முடியும். ஆனால் அதுவும் எவ்வளவு காலம் நடக்கும்? மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற இழிநிலை எப்பொழுது தீர்க்கப்படும்? எப்படி தீர்க்கப்படும்?


மதம் மாறினால் மட்டுமே இந்த இழிநிலை உறுதியாகத் தீர்க்கப்படும். !!!

Tuesday, February 28, 2006

கலிபோர்னியா ஆனந்த் அவர்களுக்கு நல்வரவு!

என்னிடமிருந்து என் பிறப்பு தொடங்கி இன்றுவரையான எல்லாத் தகவல்களையும் ஐந்து கேள்விகளுக்குள் அடக்கி, பதில் தருமாறுக் கேட்டிருக்கின்றீர்கள். ஆனால், உங்களைப் பற்றி - குறைந்த பட்சம் - ஒரு மின்னஞ்சல் முகவரிகூட இல்லாமல் அனானியாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள். நீங்கள் பார்க்கக் கூடிய எத்தனை வெப்சைட்கள் பயடேட்டாவுடன் வலம் வருகின்றன.

என்றாலும் என்னைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் காட்டியிருக்கும் ஆர்வத்துக்கு நன்றி! உங்கள் ஆர்வத்துக்காகக் கொஞ்சம் அவல் தந்திருக்கிறேன், நீங்கள் உமிகூடத் தராத போதும்.

என்னுடைய பயோடேட்டாவை பற்றித் தெரிந்து கொள்வதைவிட ' இவன் ஏன் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறினான்?' எனத் தெரிந்து கொள்வது உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பலன் தரும் என நினைக்கின்றேன்.

நம்முடைய உற்ற நண்பர் ஒருவர் நம்முடன் சரியாக பேசவில்லை என்றால் அதற்காக ஆ.... ஊ..... என்று கத்தாமல் அவர் நம்மோடு பேசாத அளவிற்கு நாம் என்ன தவறு செய்திருக்கின்றோம்? அல்லது அவர் மனம் நம்மிடம் ஏதோ குறைகண்டிருக்கின்றது எனச் சிந்திப்பதுதான் ஆக்கப்பூர்வமான, விவேகமான சிந்தனையாகும்.

என் தந்தை அடிக்கடி சொல்வார் "நாயின் மீது கல்லை எறிந்தால் அந்த நாய் கல்லைக் கடிக்காது... எறிந்த ஆளைத்தான் கடிக்கும்" என்று. அதனால் என்னைப் பற்றிச் சிந்திப்பதை விட என்போன்ற இளைஞர்கள் ஏன் மதம் மாறுகின்றனர் எனச் சிந்தியுங்கள். உங்களின் சிந்தனைக்காக ஒரு சில விஷயங்களை உங்களுக்கு சொல்கின்றேன் :

தந்தை பெரியார் "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்று ஏன் சொன்னார் என்பதைச் சிந்தியுங்கள்.

டாக்டர் அம்பேத்கார் 1 லட்சம் தொண்டர்களோடு இந்து மதத்திலிருந்து புத்த மதத்தை ஏன் தழுவினார் எனச் சிந்தியுங்கள். இன்ஷா அல்லாஹ் விடைகிடைக்கும் .

இவர்களைப் போன்றவர்கள் பணத்திற்காகத்தானே இஸ்லாத்தை ஏற்கின்றனர் என நீங்கள் முணுமுணுக்கக் கூடும். ஒரு வாதத்திற்கு அது சரியென்றே வைத்துக் கொண்டாலும் சாதாரண ஏழை மக்களைத் தானே அப்படி வாங்க முடியும்?

ஆனால், உலகத்தில் எந்த ஒரு இன்பத்தையும் பாக்கி வைக்காத, பெண்ணாலும் பொன்னாலும் கொடிகட்டிப் பறந்த கேட் ஸ்டீவன்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற பாடகரை ( இன்றைய யூசுஃப் இஸ்லாம் என்பவரை) யார் விலை கொடுத்து, எவ்வளவுக்கு வாங்கினர்?

உடலியல் நிபுணரான டாக்டர் மாரிஸ் புகைலை எவ்வளவு கொடுத்து யார் விலைக்கு வாங்கினர் ?

மனித வரலாற்றில் சரித்திரத்தில் புகழ் பெற்ற 100 பேரின் வாழ்க்கையையும் அவர்கள் எடுத்துக் கொண்ட துறையையும் ஆராய்ச்சி செய்து, "அரேபியாவை சேர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத முஹமது நபிதான் முதலிடத்திற்குரியவர்" என கூறிய மைக்கேல் ஹார்ட் என்ற புகழ்பெற்ற ஆராய்சியாளரை யார் விலை கொடுத்து வாங்கினர்?

மேற்காண்பவற்றைப் பற்றிச் சிந்திப்பது என்னைப் போன்ற சாதாரண மனிதனின் பிறப்பைப் பற்றிச் சிந்திப்பதைவிட பன்னூறு மடங்கு பயனுள்ளதாகும். சிந்தித்துப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் விடை கிடைக்கும்.

இருப்பினும் என் பயடேட்டாவை தருகின்றேன்:

தந்தை பெயர்: ஆதம்

தாயின் பெயர்: ஹவ்வா

சகோதரர்கள்: இரண்டு

உறவினர்கள்: 498 கோடி

பிறந்தது வளர்ந்தது மரணிக்கவிருப்பது: பூமியில்


இதற்கு மேல் எதுவும் தேவையில்லையென நினைக்கின்றேன்.

கருவூரிலே இருந்து மண்ணூரிலே பிறந்து காளையூரில் வளர்ந்து என்ற பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.

உங்களுக்கு நற்சிந்தனையையும் நேர்வழியையும் வழங்குவதற்கு நான் வணங்கும் இறைவனை வேண்டி முடிக்கிறேன்.

நன்றி!

அன்புடன்
ஸாலிஹ்(குலசை)

Wednesday, February 15, 2006

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்புள்ள தமிழ்மணம் வாசகர்களுக்கு, உங்கள் சகோதரன் ஸாலிஹ் குலசையின் அஸ்ஸலாமு அலைக்கும்! (தங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.)

உலகத் தமிழ்மக்கள் இத்தனை பேரை ஒருசேர பார்க்கையில் மனம் குதூகலிக்கின்றது. இதனை எமக்கு அறிமுகப்படுத்திய சகோதரர்களுக்கு நன்றிகள் பல. இச்சேவையை வழங்கும் தமிழ்மணத்திற்கும் மிக்க நன்றி.

நான் ஆங்கிலத்திலோ, அல்லது தமிழிலோ புலமை பெற்றவனல்லன். என் வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை, என் எண்ண ஓட்டங்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வதில் மன நிறைவு ஏற்படும் என்று கருதியதால் உங்களுடன் கைகோர்த்துள்ளேன். பல தமிழ் எழுத்தர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்று புதியவனான என்னையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

உங்கள் சகோதரன், சாலிஹ் (குலசை)