புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!
உலகில் எந்த ஒரு மதமாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், தத்துவங்களாக அல்லது இயக்கங்களாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வழிகாட்டுதல் உண்டு. அதற்கென்று ஒரு சட்ட ஒழுக்க நெறிமுறைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் அவைகள் இயங்கும் அந்த அடிப்படையில் தான் அதன் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அமையும் அதனை பயன்படுத்தியே அதே இயக்கத்தை அல்லது ஏதோ ஒன்றை சேர்ந்த யாராவது தவறு செய்தால் தண்டிக்கவும் செய்வார்கள். இது உலக நியதியாகும். இப்படிப்பட்ட உலக நியதிக்கும் மனிதாபிமானத்திற்கும் யாராவது கட்டுப்படவில்லையெனில் அல்லது பங்கம் ஏற்படுத்துவார்கள் எனில் அவர்களை ஜாஹலியாக்கள் (அறியாமை காலத்து மக்கள்) அல்லது அறிவீனர்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கின்றது.
இங்கு நாம் விளக்க விரும்புகின்ற விஷயம், முஸ்லிம்கள் நடத்தக்கூடிய இஸ்லாமிய வார இதழ் அல்லது மாத இதழ்களில் அவ்வப்பொழுது யாராவது ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் பெயர்தாங்கி முஸ்லிம் அல்லது இஸ்லாமிய வரம்பை தாண்டியவர் என்று பிரசுரிக்கப்படுவதுண்டு. இதை அனேகம் பேர் படித்திருக்கக் கூடும்.
ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த மக்களுக்கு மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக உணரக்கூடிய தன்மையையும் இஸ்லாம் அடிப்படையிலேயே ஊட்டியுள்ளது. மனிதனை மனிதனாக வாழ அவனையும் மனிதனாக மதிக்க உலகிற்கு கற்றுக்கொடுத்த மதம் இஸ்லாம். "கருப்பச்சியின் மகனே!" என்று ஒருவர் மற்ற ஒரு நபரைக் கூப்பிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் இஸ்லாத்திற்கு மட்டுமே உரியதாகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடைசி ஹஜ்ஜின் பொழுது நவின்றார்கள்:
'அறிந்து கொள்ளுங்கள் அஞ்ஞானக் கால வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன.
'ஓர் அரபிக்கு, அரபியல்லாதவரை விடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'
'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்'
'உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். (அதாவது உங்கள் அடிமைகளுக்குரிய உரிமைகளைப் பேணிக்காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்). நீங்கள் உண்பதையே அவர்களுக்கு ஊட்டுங்கள், நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்.'
'அறியாமைக் காலத்தின் இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரபூஆ பின் ஹர்ஸ் உடைய மகனுக்கான ரத்தப் பழியை ரத்து செய்கின்றேன். செல்லாதென அறிவிக்கின்றேன்'.
'அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (இனி எவரும் எவரிடமும் வட்டி தரும்படி கோர உரிமை இல்லை) அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்கு உரிய வட்டியை செல்லாதது ஆக்குகின்றேன்.'
'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்களுக்கும் உரிமையுள்ளது.'
'இந்த நாளும் இந்த மாதமும் இந்த இடமும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குவது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்'
இவை சாதாரண வார்தைகளில்லை! உலகத்தின் தலைவிதியையே மாற்றியமைத்த வார்த்தையாகும். இஸ்லாமிய சரித்திரத்தில் பொன்னேடுகளில் பொறித்த வைரவரிகள். அந்த வரிகளை பின்பற்றி நடக்க விரும்புகின்றவர்கள் தான் முஸ்லிம்கள்.
இந்த அளவிற்கு மனித சமூகத்திற்கு எது நன்மை பயக்கும் எது கேடு விளைவிக்கும் என்பதை தெளிவு படுத்தியதால்தான் அந்த எல்லைக் கோட்டை தாண்டியவர்களை பெயர்தாங்கி முஸ்லிம்கள் என்று தைரியமாக சொல்லமுடிகின்றது.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்...
( 6:108). அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
(5:32) அநியாயமாக ஒரு மனிதரை கொலை செய்தவன் மனித சமுதாயத்தையே கொலை செய்தவன் போலாவான்.
(2:191 ) ஃபித்னா(குழப்பம்) செய்வது கொலை செய்வதைவிட கொடூரமானது.
இந்த அளவிற்கு மென்மையையும், மனிதநேயத்தை மதிக்கும் தன்மையையும், இவ்வுலக வாழ்க்கையின் லட்சியத்தையும், பூமியில் அவன் வாழவேண்டிய முறையையும் இஸ்லாம் முறையாக கற்று கொடுக்கின்றது. இதை பின்பற்றுபவர்கள் தான் முஸ்லிம்கள். அதை மீறுபவர்களை பெயர்தாங்கி முஸ்லிம்கள் என்கிறது இஸ்லாம்.
இந்த கண்ணியம் உலகிலேயே இஸ்லாத்தில் மட்டுமே காணமுடியும். அதைப்போல் இந்து மதத்தையும் இந்திய பாரம்பரியத்தையும் கட்டிக்காக்க புறப்பட்டு உள்ளவர்கள், அவர்களில் வரம்பு மீறுபவர்களை பெயர்தாங்கி இந்துக்கள் என்று சொல்லவாவது தைரியம் உள்ளதா?
உள்ளவர்கள்-இல்லாதவர்களையும், மெஜாரட்டி-மைனாரட்டியையும் அரவணைத்து செல்வதும் மனிதர்களின் உரிமையை மதிப்பதும் அவர்களின் மான மரியாதைக்கு பங்கமில்லாமல் நடப்பதும்தான் உலகநீதி. அதனால் தான் ஆங்கிலேயர்கள் இருநூறு ஆண்டுகாலம் முழுதாகஆட்சி செய்யமுடியாத இந்தியாவில் முஸ்லிம்கள் எட்டுநூறு ஆண்டுகள் ஆட்சி செய்யமுடிந்தது. அதனால் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டம் போல முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பாரத மக்கள் முன்வரவில்லை இதை சிந்தித்தால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று கொக்கரிக்கின்றவர்களின் பொய் முகம் தெரியவரும்.
பிறரின் உயிரையும் உடமையையும் சூறையாடித்தான் தான் சார்ந்த மதத்தை காப்பாற்ற வேண்டும் அல்லது பரப்ப வேண்டும் என்று எந்த மதமும் கூறவில்லை. மாறாக தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று தான் இந்து மதம் கூட சொல்கின்றது.
ஆனால் தர்மத்தின் கண்களை கட்டி இந்தியாவின் 85 கோடி மக்களின் உரிமையை பறித்து மும்பையிலும், குஜராத்திலும், கோவையிலும் லட்சக்கணக்கான அப்பாவிகளின் உயிரையும் உடைமையையும் மண்ணில் போட்டு புதைத்த மனித இன துரோகிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் நோக்கி கேட்கின்றோம். இதுதான் உங்கள் மதம் போதிக்கும் தர்மமா? இப்படித்தான் இந்துமதம் நீதியையும் நேர்மையையும் போதிக்கின்றதா? மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும். அல்லது இந்து மதத்தின் காவலர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்படிப்பட்ட மனித இனத் துரோகிகளை பெயர்தாங்கி இந்துக்கள் என்று சுட்டிக்காட்டவாவது தைரியம் உள்ளதா?
முஸ்லிம்களை இனம் காண அவர்களை சீர்படுத்த அவர்களிடம் நேர்வழி காட்டும் வேதநூல் உள்ளது. இந்துக்களை இனம் காண அவர்களின் வாழ்க்கை முறையை சீர்படுத்த உங்களின் வேதநூலை மக்களுக்கு போதியுங்கள். கற்றுக் கொடுங்கள் (இங்கே நாம் இந்துக்கள் என்று கூறுவது இந்து மதத்தின் காவலர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்களை)
அதை மக்களுக்கு கற்றுத்தர மாட்டார்கள் ஆனால் இதோ நாம் இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமல்ல. இந்து மதத்தைப் பற்றியும் கற்றுத் தருகின்றோம்.
மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல் பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.
அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.
ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே! மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.
பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)
வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். (மனுவின் விதி 167-272)
பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ கற்றுக் கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும்இ வாயிலும் ஊற்றிட வேண்டும். மனுவின்விதி இன்னும் சொல்கின்றது.
பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.
டாக்டர் அம்பேத்கார் அவர்கள் பிராமணர்களின் கொள்கைகள் பற்றி இப்படிக் கூறுகின்றார்கள்:
1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.
2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.
3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.
4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.
5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.
6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை நசுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.
ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி 204 அபபி J.A. Duboils (டுபாயில்ஸ்) என்பவர் Hindu Manners Customs and Cermonies என்ற நூலில் (Oxford Third Edition 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.
இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.
கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.
மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.
எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருக்பவர்கள் (என்று கூறி ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அந்த கூட்டத்தை நாம் இனம் காண வேண்டும்)
இதுதான் இந்துமதம் போதிக்கும் நாகரீகமாகும். இதை அவர்கள் போதிப்பதற்கு மனமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், மதமற்ற தடை சட்டம், பசுவதை தடைசட்டம், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானின் ஏஜண்டுகள் என்றெல்லாம் கூறி இள ரத்தத்தில் சூடேற்றி குளிர்காய நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாங்கள் இன்னும் மடையர்கள் இல்லை என்பதை மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் மடத்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- குலசை ஸாலிஹ்