Saturday, November 12, 2016

(ஆபாசத்தின் மறுபெயர் – ஆடைக்குறைப்பு) ஆபாசம் உருவாவது எங்கே?


 ஆபாசம் என்பது மிகக் கொடிய ஒரு நோயாகும். அது  வெகுவிரைவில் மனிதனின் சிந்தனையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு வைரஸாகும். ஆதமுடைய விலா எலும்பிலிருந்து  படைக்கப்பட்ட பெண் சந்ததியில் கணிசமான மக்கட் தொகையை ஆட்கொண்டுவிட்ட இந்த நோய் எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கின்றது என்றால் எங்களுக்கு அதாவது பெண்களுக்கு உடை சுதந்திரம் வேண்டும் கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டுமென போராடக்கூடிய அளவிற்கு இந்த நோய் வளர்ந்துவிட்டதை நினைத்து சமூகத்தில் நன்மையை விரும்பக்கூடியவர்கள் வேதனைப்பட வேண்டியுள்ளது.
     ஏனென்றால் மனித சமூகத்தில் மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டிய இவர்கள் தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் சிந்திக்காமல் தான் வாழக்கூடிய சமூகத்தில் இவை எப்படிப்பட்ட சீரழிவை ஏற்படுத்துகின்றன என்றெல்லாம் சிந்திக்காமல் ஏன் இப்படி தரம்கெட்டு போய்விட்டனர்?. அதுமட்டுமல்லாது இப்படிப்பட்ட சிந்தனையுள்ளவர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து வயிறுபிழைத்துக் கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம்.
    அந்தக்கூட்டத்தை வாழவைப்பதற்கு நம்முடைய உடலையும், மானத்தையும், மரியாதையையும் ஏன் தாரை வார்க்கவேண்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் கர்ப்பப்பை சுதந்திரம், உடை சுதந்திரம், பெண் உரிமை என்றெல்லாம் யாரோ தூக்கத்தில் உளறியதை வேதவாக்காக நினைத்து அதற்கு பின்னால் கொடிபிடிக்கும் பெண்ணினமே இதனால் உங்களுக்கு பணம் வேண்டுமானால் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கலாம்; ஆனால் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கும் பாடம் என்ன? உங்களால் பின் தலை முறையினருக்கு கிடைக்கும் படிப்பினை என்ன?
    பெண்கள் போடக்கூடிய உடை அக்கடா என்றிருந்தால் பெண்கள் காவல் நிலையம் என்ற சம்பிரதாயமே இந்தியப் பாண்பாட்டிற்குள் தேவைப்பட்டிருக்காதே! அன்னை தெரேஸாவுக்கோ அன்னை இந்திராகாந்திக்கோ உடை ஒரு பாதகமாக தோன்றவில்லை. அவர்களின் வளர்ச்சியில், அவர்களால் இந்த சமூகத்திற்கு கிடைத்த நன்மையின் அளவில் ஒரு கால் தூசு அளவு கூட ஆடை சுதந்திரத்தையும், கர்ப்பப்பை சுதந்திரத்தையும் கேட்கும் இப்பெண்களால் மனித சமுதாயத்திற்கு கிடைக்கவில்லையே! பிறகு ஏன் உடைக்குப் பின்னால் படை? அது மட்டுமா? இதைப்பார்த்து சமூகத்தில் எந்த ஒரு பிடிப்புமில்லாமல் எந்த லட்சியமுமில்லாமல் பெண்களுக்கு பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றது இளைஞர்கள் கூட்டம்.   படைத்தவனுக்கு தெரியும் படைப்பின் லட்சணம். ஒரு சமூகத்தின் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய வினையும் எதிர்வினையும் என்ன என்பதை நம்மைப் படைத்தவன் மிகத் துல்லியமாகக் கணிக்கக்கூடியவன்.
      பொதுவாக குரான் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக கட்டளைகளையும் ஆலோசனைகளையும் கூறிச்சென்றாலும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் கண்டிப்பாக பேணவேண்டிய கட்டாய கடமையாக சில கட்டளைகளை அறிவுரை வழங்குவது போல் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு இட்ட கட்டளையை முஸ்லிமல்லாதவர் கடைபிடிக்கவில்லை எனில் தவறில்லை(அவர் முஸ்லிமல்லாத காரணத்தினால்). அவர் தவறில்லை என்று கருதும் பட்சத்தில் (நினைத்தால்) ஆனால் முஸ்லிம் என்று தன்னை பறைசாற்றிக்கொண்டவர் கண்டிப்பாக குரானின் அனைத்து கட்டளைகளையும் கடைபிடித்தே தீரஆகவேண்டும். இல்லையேல் இறைவன் முன் அவர் குற்றவாளியாகின்றார். இஸ்லாமிய சமுதாயத்தில் அவர் வெறுக்கத்தக்கவராகின்றார்-அவர் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரியே.    
  I முஸ்லிமிற்கான அறிவுரை வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது.
1 பெண்களுக்கான அறிவுரை
33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்லர். நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள்.
 33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.  
 33:53 முற்றிலும் பரிசத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். உண்மையைக்   கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை.   நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால் திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்.
 33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
 2. குழந்தைகளுக்கான அறிவுரை 
24:58.ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை)களும் உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர் ' நேத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும் குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை.
 3. இஸ்லாமிய சமூகத்திற்கான அறிவுரை
 24:27.ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் (வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்.   நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
 24:28.அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும் 'திரும்பிப் போய் விடுங்கள் ' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
மேற்கண்ட வசனங்கள் ஒரு பெண் தன் சமூகத்தில் எப்படி இடை பழக வேண்டும், சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும், ஒரு குழந்தையை இஸ்லாமியன் எப்படி வளர்க்க வேண்டும்என்பனவற்றை அதன் குணாவிஷயத்தோடு அதனால் ஏற்படும் பாரதூரங்களோடு இஸ்லாம் எடுத்து வைக்கின்றது.
  மனித சமூகத்திற்கு (முஸ்லிமல்லாதவர்களுக்கு) இஸ்லாம் கூறும் அறிவுரை
 7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி,) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
 17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்   நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
 இஸ்லாம் ஒரு தீமையைக் கண்டால் கண்ணை மூடி இருக்கவோ அல்லது இடத்தை விட்டு ஓடி விடவோ சொல்லவில்லை. மாறாக அதை எதிர்த்து போராடச் சொல்கின்றது அத்தீமையின் ஆணிவேர் எங்கே உள்ளது எனத்தேடி அதை வேரோடும் வேரடி மண்ணோடும்   களைந்தெடுக்கச் சொல்கின்றது.   
   மேற்கண்ட இரண்டு வசனத்தின் அடிப்படையில் ஆடையை களைவதினாலும் ஆபாசத்தினாலும் மனித சமூகத்திற்கு ஏற்படக்கூடிய தீமையை சம்பந்தப்பட்டவர்கள்(அறிவு ஜீவிகள்) சமூகத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். ஆள்பாதி ஆடை பாதி; ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள். ஆடையென்பது ஒருவருக்கு கண்ணியத்தைத்தான் தருமேயல்லாது கேவலத்தை ஒருபோதும் தருவதில்லை- கேவலப்பட்ட ஜென்மங்களைத் தவிர


பிக்ஹ் கலை இமாம்கள்


இமாம்கள் ஜீவித்த வருடங்கள்
01 .இமாம் அபீ ஹனீபா(ரஹ்)-        ஹி 80-150     (70 வயது)ஹனஃபி
02 .
இமாம் மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) - ஹி 93-179     (86)மாலிகி
03 .
இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ்(ரஹ்)ஹி 150-204    (54) ஷாஃபி
04 .
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) ஹி 164-241   (77)
மரியாதைக்குறிய இமாம்கள் குர்ஆன், தீ… இறுதி தீர்வாக கூறுகிறார்கள். 

இமாம் அபூனீபா கூறுகிறார்கள்:
…†ான தீஸ் கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே என் வழியாகும்
ஆதார நூல்கள்: ரஸ்முல் முஃப்தி, ாஷியா பின் ஆபிதீன், ஈகாலுல் ஹிமம்

"
எந்த ஆதார அடிப்படையில் நாம் முடிவெடுத்தோம்?" என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் லால் இல்லை.
ஆதார நூல்கள்: அல்இன்திகா, ாஷியா இப்னு ஆபிதீன், ரஸ்முல் முஃப்தி.

என் ஆதாரத்தை அறியாதவன் என் சொல்லை பயன்படுத்தி ஃபத்வா கொடுப்பது ராமாகும்.
ஆதாரம்: மீஜான் அ‰„ஃரானி

நாங்கள் இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அதிலிருந்து வாபஸ் வாங்கிக்கொள்ளும் மனிதர்தாம். (எனவே குர்ஆன், தீ… ஒப்பிட்டு பார்க்காமல் பின்பற்றாதீர்கள்.) ஆதாரம்: அல்மீஜான் ஃரானி.

அல்லாவின் வேதத்திற்கும் நபி (ல்) அவர்களின் வழி முறைக்கும் மாற்றமாக நான் ஒன்றை சொன்னால் என் சொல்லை ஆதாரமாக எடுக்காமல் விட்டு விடுங்கள். ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்



இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்: 
நபி (ல்) அவர்கள் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்க தக்கவைகளும் உண்டு. விடப்படக் கூடியவைகளும் உண்டு. நபி (ல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக ஏற்க வேண்டியவைகளாகும். ஆதார நூல்கள்: இர்ாதுஸ்ாலிக், ஜாமிவு இப்னு அப்துல்பர், ூலுல் அகாம்

நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொறுத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் உட்படாதவற்றை விட்டு விடுங்கள். ஆதாரங்கள்: ஈகாழுல் ஹிமம், ஜாமிவு இப்னு அப்துல்பர், ூலுல் காம்

இமாம் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள்: 
எவராக இருப்பினும் அவரை விட்டும் ரூல் (ல்) அவர்களின் வழி முறைகளில் ஏதேனும் தவறிவிடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு தீர்வை கூறும்போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்து  தரும்போது "அல்லாவின் தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், டூறைத் தூதருடைய கூற்றே ஏற்கப்படவேண்டும்". ரூல் (ல்) கூற்றே ஏற்கப் படவேண்டும்". ூல் (ல்) கூற்றை ஏற்பதே என் கொள்கையாகும்.ஆதார நூல்கள்: இப்னு ாகீர், ஈகாழுல் ஹிமம்

ூல் (ல்) அவர்களின் வழிமுறை எவருக்கு தெரிகின்றதோ, அதை எவருடைய  கருத்துக்காகவும் விடுவது லால் அல்ல என்று இக்கால முஸ்லிம்கள் ஏகோபித்து முடிவு செய்துள்ளார்கள். ஆதார நூல்: ஈகாழுல் ஹிமம்

எனது நூலில் நபி (ல்) அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ல்) உடைய சுன்னத்தையே எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்! என் சொல்லை விட்டு விடுங்கள். ஆதார நூல்கள்: அல் மˆவு நவவி, இப்னு அாகீர், தம்முல் கலாம், ஈகாழுல் ஹிமம், ˆதிாத்.

…†ான தீஸ் கிடைக்கும்போது அதை ஏற்பதே எனது வழியாகும்.
ஆதார நூல்கள்: அல் மˆவு நவவி, மீான் ஸஃரானி.

நான் கூறிய சொற்கள் ஆதாரப்பூர்வமான நபி மொழிக்கு முரண்படும்போது நபியின் வழி முறைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை(தக்லீத் கண்மூடி) பின்பற்றாதீர்கள். ஆதாரனூல்கள்: இப்னு அபீாதமின், அல்அதாப், அபூநயீம்.

மத் இமாம் கூறுகிறார்கள்:
என்னையே, மாலிக், ாஃபிஈ, அவ்ாயி, ஃதெªவ்ரி போன்றவர்களையோ "தக்லீத்" கண்மூடி பின்பற்றாதே. மாறாக அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ அதிலிருந்து ( குர்ஆன், தீஸிலிருந்து) நீயும் புரிந்துகொள். ஆதார நூல்:ஈகழுல் ஹிமம்.


நபி(ல்) அவர்களின் தீஸை நிராகரிப்பவர்கள் அழிவின் விளிம்பிலே இருக்கிறார்கள். ஆதார நூல்: இப்னு வ்ஸி. 

இதுவரை மரியாதைக்குறிய நான்கு இமாம்களும் குர்ஆனையும், தீ…யும் சிந்தித்துச் செயல்படுங்கள் என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளார்கள்.  வல்ல நாயன் நம் அனைவரயும் குர்ஆன், தீஸ் வழியில் நடக்க துணை புரிவானாக! ஆமீன். 


நபி மொழிகள்-ஒரு வரலாற்றுப்பார்வை

 “ஆறு திரட்டுகள்

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாக உலகம் முழுதும் ஒப்புக் கொள்ளப்பட்டவை அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுமாகும். இதில் நபி மொழிகள் தொகுக்கப்பட்ட வரலாற்றை - குறிப்பாக முஸ்லிம்களால் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகாரி - முஸ்லிம் - திர்மிதி -நஸாயி- அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய ஆறு கிரந்தங்களின் பின்னணியையும் இதர ஹதீஸ் தொகுப்புகளின் பின்னணியையும் இங்கே காண்போம்.
நபித்தோழர்கள்
நபி-ஸல்- அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களிடம் பாடமும் பயிற்சியும் பெற்ற நபித் தோழர்கள் நபிவழிக்கு தம் வாழ்க்கையில் செயல் வடிவம் கொடுத்ததோடு பிறருக்கு வாய்வழி செய்தியாகவும் அதை எடுத்துரைத்து வந்தனர்.எழுதப் படிக்கத் தெரிந்த மிகச் சொற்பமான தோழர்கள் நபி வழியை பதிவு செய்தும் வைத்துக் கொண்டார்கள்.
அரபி அல்லாதவர்களின் அரிய சாதனைகள்
நபிக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற நல்லவர்களின் கால கட்டங்களில் இஸ்லாமிய வளர்ச்சி வேகம் பிடித்தது. அரபி மொழி பேசுபவர்களைக் கடந்து அது விரிவாக வளர்ந்த போது அந்த மக்களுக் கெல்லாம் நபிவழியை சேர்க்கும் அவசியம் உணரப்பட்டது. இப் பணியை வேகமாக முன்னெடுத்தவர்களில் பெரும்பாலோர் அரபி அல்லாதவர்கள்தான்.
ஹதீஸின் பொற்காலம்
ஹிஜ்ரி 100 முதல் 300 வரையுள்ள காலகட்டங்களை நபிவழி தொகுக்கப்பட்டதின் பொற்காலம் எனலாம். இக் காலகட்டங்களில் பற்பல ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்டாலும் மக்களிடம் நாம் மேல்குறிப்பிட்ட ஆறு நூல்களே வெகுவாகச் சென்றடைந்தன. இந்த நூல்களையே பிற்காலத்தில் மக்கள் ஸிஹாஹ் ஸித்தா (ஆறு ஆதாரப்பூர்மான திரட்டுகள்) என்று அழைக்கத்துவங்கினர்.


ஸிஹாஹ் ஸித்தாவைத் தொகுத்தவர்கள்
இந்த ஆறு நூல்களை தொகுத்தவர்களையும் அவர்களின் கால கட்டங்களையும் பார்ப்போம்.
1.இமாம் புகாரி (194 - 256) நாடு:புகாரா, (ரஷ்யா)          62 வயது
2
இமாம் முஸ்லிம் (206 - 261)நாடு: நைஷாபூர் ஈரான் (பாரசீகம்)55 வயது
3
இமாம் அபூதாவூத் (202 - 275)நாடு: சிஜிஸ்தான் (இராக்)     73 வயது
4
இமாம் நஸாயி (214 - 303) நாடு:நஸா (ஈரான்)            89 வயது
5
இமாம் இப்னு மாஜா (209 - 273)நாடு: ஆதர்பைஜான் (ஈரான்) 64 வயது
6
இமாம் திர்மிதி (209-279)நாடு திர்மிதி (குராஸான்)          70 வயது
இந்நூல்கள் மக்களின் தேவைக்கேற்ப பாடங்களாக இலகுபடுத்தி அவற்றுக்கு தலைப்பிட்டு தொகுக்கப் பட்டுள்ளன. இவை ஒவ்வொரு நூலிலும் 4000 த்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் அடங்கியுள்ளன. இவற்றில் இமாம்களின் ஆய்வுகளையும் கடந்து பலவீனமான சில ஹதீஸ்களும் இடம் பெற்றன.அவை அவற்றிற்கு அடுத்த கால கட்டங்களில் அலசி ஆராயப்பட்டு பிரித்தெடுத்து இனங்காட்டப்பட்டன. அவை தனி வரலாறாகும்.
இவை பற்றிய விரிவான ஆய்வுகளை ஷெய்கு முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி போன்றவர்களின் அல்ஜாமிவுஸ்ஸகீர் வஸியாததுஹு-ளயீஃப் -ஸஹீஹ்-நூல்களில் காணலாம்.
இந்நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முந்திய காலகட்டங்களில்-முஸ்னத்-தாக பல ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்டு விட்டன.
முஸ்னத்- என்றால் என்ன?
நாம் குறிப்பிட்டுள்ள ஆறு ஹதீஸ் நூல்களில் பாடங்களின் தலைப்பிட்டு அவற்றிற்கு கீழ் தேவையான ஹதீஸ்களை எடுத்தெழுதும் இந்த போக்கு இல்லாமல் ஒருவரிடமிருந்து பெறும் எல்லா ஹதீஸ்களையும் அவருடைய பெயருக்குக் கீழே கொண்டுவரும் இந்த வழிமுறைக்கே முஸ்னத் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது.
உதாரணமாக, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த முஸ்னத் அஹ்மத் என்ற நூலில் முதல் பாடமாக முஸ்னத் அபீ பக்கர் இடம் பெறுகிறது. இதில் முதற் கலீஃபா(ஜனாதிபதி) அபூபக்கர் - ரலி-அவர்களிட மிருந்து கிடைத்த எல்லா ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. இத்தகைய முஸ்னத் ஹதீஸ் நூல்கள் புகாரி முஸ்லிம் போன்ற நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பே ஹிஜ்ரி 93 லிருந்து ஹிஜ்ரி 191 வரையுள்ள கால கட்டங்களில் தொகுக்கப்பட்டன
முஸ்னத் நூல்கள் (ஹி93-191)
அவற்றுள் முக்கிய நூல்கள் சில:- ( ஹிஜ்ரி 93 லிருந்து ஹிஜ்ரி 191 வரை தொகுக்கப்பட்ட முஸ்னதுகள்)
1.
முஸ்னத் முவத்தா
2.
முஸனத் ஷாஃபியீ
3.
முஸ்னத் அஹ்மத்
4
முஸ்னத் தவ்ரி
5.
முஸ்னத் முஹம்மத் பின் ஸலாமா
6.
முஸ்னத் இப்னு முபாரக்
7.
முஸ்னத் இப்னு உஅய்னா
8.
முஸ்னத் இப்னு முஅம்மர்
9.
முஸ்னத் இஸ்ஹாக் இப்னுரராஹ்வைஹ்
10.
முஸ்னத் அவ்ஸாயி
11.
முஸ்னத் பகீ போன்றவற்றை குறிப்பிடலாம்.
அடுத்த காலகட்டத்தில் ஆறு பெரும் கிரந்தங்கள் தொகுக்கப்படுவதற்கு இந்த முஸ்னத்கள் பெரிதும் உதவின.இதைத் தவிர வேறு பல ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களும் உள்ளன.
ஹதீஸின் இதர ஆதார நூல்கள்
அவற்றுள் முக்கிய ஹதீஸ் நூல்களும் அதன் தொகுப்பாளர்களும்
01
தப்ரானி (அபுல் காஸிம் சுலைமான் இப்னு அஹ்மது 209-273 தபரிய்யா-ஜோர்டான்)
02
அபூ யஃலா (அஹ்மது இப்னு அலி இப்னுல் முதன்னா 210-307 முதன்னா)
03
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (அபூ ஹாத்தம் முஹம்மது இப்னு ஹிப்பான் 354 ஸமர்கந்த்-(இமாம் ஹாகிமின் ஆசிரியர்)
04
ஸஹீஹ் இப்னு குஸைமா (அபூபக்ர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா 223-311 நைஸாபூர்)
05
ஸுனனு பைஹகீ (அபூபக்ர் அஹ்மது இப்னு ஹுஸைன் அல்பைஹகீ 384-458 குராஸான் (இமாம் ஹாகிம்pன் மாணவர்)
06
ஹாகிம் (அபூ அலீ அந்நைஸாபூரீ)
07
ஸஹீஹ் அபீ அவானா (யஃகூப் இப்னு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம்)
08
தார குத்னீ (இமாம் தார குத்னீ)
09
தாரமீ (இமாம் தாரமீ)
10
அல் பஸ்ஸார் (அஹ்மது இப்னு அம்ருப்னு அப்துல் காலிக் -292 பஸரா- ஈராக்)
11
இப்னு அபீ ஷைபா (இப்னு அபீ ஷைபா)
12
இப்னு அபீ கைஸமா (இப்னு அபீ கைஸமா)
13
அப்துர் ரஸ்ஸாக் (இமாம் அப்துர் ரஸ்ஸாக்)
14
இப்னுல் ஜாரூத் (இமாம் இப்னுல் ஜாரூத்)
15
நைஸாபூரீ (அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் 321-405 நைஸாபூர்)
16
இப்னு அபித்துன்யா (அபூபகர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அபித்துன்யா அல்குறஷீ 208-282)
ஸஹீஹ்,ஹஸன், ளயீப்
ஹதீஸ்களில் ஸஹீஹானவைகளும் அவையடுத்த தரத்தையுடைய ஹஸன் என்பவைகளும்உள்ளன.இவற்றுள் ளயீஃப் பலவீனமான பல ஹதீஸ்கள் சேர்ந்துள்ளதால் அவற்றை களை எடுப்பதற்காக இமாம்கள் கடுமையான பல நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள். அந்த விதிகளுக்கு உட்பட்டிருநதால் தான் அவற்றை நமடபகரமான ஹதீஸ்களாக ஏற்றுக் கொள்வர்.இல்லையேல் அவற்றை ஒதுக்கிவிடுவர்.
இங்கே சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
ஸஹீஹான ஹதீஸ்களுக்குரிய விதிகள்
1.
அறிவிப்பாளர் தொடரில் அனைவரும் நம்பத்தகுந்தவராக இருத்தல்.
2.
அறிவிப்பாளர் நூறு சதவிகிதம் நினைவாற்றல் மிக்கவரதக இருத்தல்.அல்லது
பிழையில்லாது ஏட்டில் பதிவு செய்பவராக இருத்தல்.
3.
ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது ஆசியரியர்களிடமிருந்து நபி மொழிகளை நேரடியாகத்
தெரித்திருக்கவேண்டும்.
4.
தம்மைவிட நம்பத்தகுந்த அல்லது நினைவாற்றல் மிக்கவருடைய நபிமொழிக்கு
(
ஹதீஸிற்கு)முரண்படாதிருத்தல்.
5.
அறிவிப்பாளர் தொடரில் மறைமுகமான குறைகள் காணப்படாதிருத்தல்.( உ-ம் : ஒரு
ஸஹாபியின் தனிப்பட்ட கருத்தை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ரிவாயத்-
தெரிவிப்பதாகும்.
இவை முதல் தர வகையைச்சார்ந்த ஹதீஸ்களாகும்.
அடுத்து ஹஸன் தரத்தைச்சார்ந்த ஹதீஸ்களை இரண்டாம் தர வகைகளாகக் கொள்கின்றனர்.இவை ஸஹீஹான ஹதீஸிற்குரிய ஐந்து விதிகளில் இரண்டாவது விதியில் மட்டும் சற்று மாறுபடுவதாகும்.அதாவது அறிவிப்பாளர் நூறு சதவிகித நினைவாற்றலில் சற்று குறைந்தவராக இருப்பதாகும்.
இந்த வகை ஹஸன் தர ஹதீஸ்கள் ஒன்றாகச்சேர்ந்து ஒரு நபிமொழியைத் தெரிவிக்கும் போது ஸஹீஹான ஹதீஸ் தரத்தை எட்டுவதாக ஹதீஸ்கலை இமாம்கள் கருதுகின்றனர்.
ளயீஃபான ஹதீஸ்கள் என்றால் என்ன?
ஸஹீஹ், ஹஸன் ஆகியவைகளுக்குக் கூறப்பட்ட ஐந்து விதிகளில் ஒன்றுவிடுபட்டிருந்தால் அவை ளயீஃபான தரத்த்துக்குத் தள்ளப்படும். இவை ஊர்ஜிதமற்ற நம்பகத்தன்மை இழந்த ஹதீஸ்களாகக் கருதப்படும்.
(
பொய்யர் அல்லது ஹதீஸ்களில் மிக அதிகமாக தவறு செய்பவர் என்று குறை கூறப்பட்ட அறிவிப்பாளரைத் தவிர்த்து ளயீஃபான பல ஹதீஸ்கள் ஒள்று சேர்ந்து சில சமயம் ஹஸன் தரத்தை எட்டுவதுண்டு. இவை மிக அபூர்வமாகும்.ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.
பலவீனமான ஹதீஸ்களை தெரிந்து கொள்ளும் இன்னும் சில வழிகள்!
குர்ஆனும் ஹதீஸ்களும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எனக்கூறும்போது ஹதீஸ்களில் ளயீஃபான (பலவீனமான)ஹதீஸ்களும் உண்டா? இருக்க முடியுமா ? என நம்மில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கேலியும் கிண்டலும் செய்கின்றனர். நியாயமான கேள்விகள் தான்! இருப்பினும் அவற்றிற்கான தெளிவான விடைகளை தெரிந்து கொள்வது அவசியாகும்.
உண்டு என்றால் பலவீனமான ஹதீஸ்கள் உருவானதுஎப்படி? அதை இனம் கண்டு கொள்வது எவ்வாறு ? என்பதை கீழே காண்போம்.
ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய செய்திகளல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படைச்செய்தி இதுதான்.
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல நினைவாற்றலுடன் இருந்து பிற்காலத்தில் நினைவாற்றலில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனமாகும்.
12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
14. தமது கருத்தை நியாயப்படுத்துவதற்காக அல்லது நம்ப வைப்பதற்காக ஆதாரமில்லாது கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில்-மொழிகளில் -பலகீனமாக வரும் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36).
என்ற இறைக் கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். எனவே ஹதீஸ்கலை மேதைகள் தரம் பிரித்து ஸஹீஹானவை- நம்பத்தகுந்தவை-என்று அடையாளம் காட்டப்பட்ட ஹதீஸ்களையே நாம் ஏற்க வேண்டும்.
(குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸான், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது)