Saturday, September 24, 2005

எது சுதந்திரம்…?


B- 52 Bomber jet - லா சுதந்திரம்?
ஆயிரங்களை கொலை செய்து கொண்டா சுதந்திரம்..?
ஒரு சமூகத்தை நடமாடும் பிணமாக்கியா சுதந்திரம்..?
50 ஆண்டுகளாகக் கேட்டும் அக்ஸாவிற்கு மறுக்கப்படும் - சுதந்திரம்
ஈராக்கிகள் விரும்பும் மனிதனை அழித்து ஈராக்கிகளுக்கு- வலுக்கட்டாய சுதந்திரம்
புரிந்து கொண்டாயா சகோதரனே?

கொள்ளையும் கொள்ளிவைப்பும் ஈராக்கிகளின் சுதந்திரமாம்
இதைத்தான் பிரிட்டனும் பென்டகனும் விரும்பியதாம்
புரிகிறதா.? இந்த குள்ளநரிகள் யாரென்று - ஆம்
சுதந்திரத்தைச் சொல்லி ஈராக்கின் சொத்தைக் கொள்ளையிடும்
கழுகுகளுக்கு கொள்ளையும் கொள்ளிவைப்பும் சுதந்திரம் தான்!

இழி மதிகொண்ட ஈனப்பிறவிகளின்
சுதந்திர தாகம் புரியவில்லையா...!
கொள்ளை போனது ஈராக்கின் சொத்தல்ல
2000-ம் காலம் பழக்கமுள்ள நம் முன்னோர்களின் வரலாறு
நினைவுச் சின்னங்களாய் விட்டுச் சென்ற பாரம்பரிய ஏடு
என்பதை மறந்து விடாதே. . . !


நாளைய சமூகத்திற்கு நேற்றைய வரலாறு தெரியாமல் போவதற்கு
இஸ்லாமிய சரித்திரத்தை பூவுலகிலிருந்து மாய்ப்பதற்கு
மேலாதிக்கத்தை உன் மீது திணிப்பதற்கு
ஆடு நனைகிறதென குள்ளநரிகளின் கூப்பாடு -சகோதரனே
இனியும் விழிக்கவில்லையெனில் நாளைய சரித்திரம்
உன்னை விரல் சுட்டிக் காட்டும் - ஏனெனில்

காஃபிர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி
அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும் - அல்லாஹ்
அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (9:32)


எனவே ...! ... ?


_________________________________________________________
(கடந்த வருடம் ஈராக்-கின் மீது அமெரிக்க படையெடுத்ததை ஒட்டி தோஹாவின் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் இணையதளத்தில் வெளியான கவிதை.)