அன்புள்ள தமிழ்மணம் வாசகர்களுக்கு, உங்கள் சகோதரன் ஸாலிஹ் குலசையின் அஸ்ஸலாமு அலைக்கும்! (தங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.)
உலகத் தமிழ்மக்கள் இத்தனை பேரை ஒருசேர பார்க்கையில் மனம் குதூகலிக்கின்றது. இதனை எமக்கு அறிமுகப்படுத்திய சகோதரர்களுக்கு நன்றிகள் பல. இச்சேவையை வழங்கும் தமிழ்மணத்திற்கும் மிக்க நன்றி.
நான் ஆங்கிலத்திலோ, அல்லது தமிழிலோ புலமை பெற்றவனல்லன். என் வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை, என் எண்ண ஓட்டங்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வதில் மன நிறைவு ஏற்படும் என்று கருதியதால் உங்களுடன் கைகோர்த்துள்ளேன். பல தமிழ் எழுத்தர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்று புதியவனான என்னையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
உங்கள் சகோதரன், சாலிஹ் (குலசை)
15 comments:
"வ அலைக்கும் ஸலாம்!" வாருங்கள் வாருங்கள் சகோதரரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
சகோதரரே!
இந்தச் சேவை தமிழ் மனத்தாால் வழங்கப்படுவது அல்ல. ப்ளாக்கரால் வழங்கப்படுகிறது. தமிழ்மனம் ஒரு திரட்டி மட்டுமே.
வ அலைக்கும் ஸலாம் சகோதரரே! தங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஆக்கப்பூர்வமான தங்கள் பதிவுகளை மிகவும் எதிர்பார்க்கின்றேன்.
வ அலைக்கும் ஸலாம் சகோதரரே! தங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன்.
அனுபவபூர்வமான உங்கள் எழுத்துக்கள் நிறைய கண்களைத் திறக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களின் உதவிக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக ஸாலிஹ்
நன்பரெ,
உங்கல் பதிவுகல் அர்புதமாக உல்லன. உங்கலிடம் சில கேல்விகல்:
1. உங்க பேரே சாலி குலசைதானா இல்லாட்டி இது புனைபேரா?
2. நீங்க மதம் மார்ரதுக்கு முன்னாடி என்ன பேர் வச்சிருந்தீங்க?
3. பேர ஏன் மாத்திக்கிட்டீங்க?
4. நீங்க முச்லீமா மார்ரதுக்கு முன்னாடி உங்க சாதி என்ன? இப்போ என்ன சாதி?
5. உங்க ஊர் எது? உங்க ஊருக்குப் போயி உண்மையிலேயே நீங்க மதம் மாரிருக்கீங்கலா இல்ல இது உடான்சான்னு தெரிஞ்சிக்கலாமா?
இதுக்கெல்லாம் பதில் சொல்லுவீங்கன்னு நினைக்கிரேன். ஏமாத்திடாதீங்க.
கலிபோர்னியா ஆனந்த் அவர்களுக்கு நல்வரவு!
என்னிடமிருந்து என் பிறப்பு தொடங்கி இன்றுவரையான எல்லாத் தகவல்களையும் ஐந்து கேள்விகளுக்குள் அடக்கி, பதில் தருமாறுக் கேட்டிருக்கின்றீர்கள். ஆனால், உங்களைப் பற்றி - குறைந்த பட்சம் - ஒரு மின்னஞ்சல் முகவரிகூட இல்லாமல் அனானியாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள். நீங்கள் பார்க்கக் கூடிய எத்தனை வெப்சைட்கள் பயடோட்டாவுடன் வலம் வருகின்றன.
என்றாலும் என்னைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் காட்டியிருக்கும் ஆர்வத்துக்கு நன்றி! உங்கள் ஆர்வத்துக்காகக் கொஞ்சம் அவல் தருகிறேன் , நீங்கள் உமிகூடத் தராத போதும்.
//1. உங்க பேரே சாலி குலசைதானா இல்லாட்டி இது புனைபேரா?//
ஈ மெயிலைக்கூட தராத ஆளுக்கு ஏம்பா என் அட்ரஸ்
//2. நீங்க மதம் மார்ரதுக்கு முன்னாடி என்ன பேர் வச்சிருந்தீங்க ? // பழைய பெயர் எனக்கே தேவையில்லன்னு ஆயிப் போச்சு. எனவே, அது உங்களுக்கு உபயோகப் படாது.
//3. பேர ஏன் மாத்திக்கிட்டீங்க?// எனக்குப் பிடிச்சிருந்துச்சி, வச்சிக்கிட்டேன்.
//4. நீங்க முச்லீமா மார்ரதுக்கு முன்னாடி உங்க சாதி என்ன? இப்போ என்ன சாதி?//
"சூத்திரர்க்கென்றொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி. சாத்திரம் என்றதைச் சொன்னால் , சாத்திரம் அல்ல சதி எனக் கொள்வோம்" - "சாதிகள் இல்லையடி பாப்பா" ரெண்டுமே பாரதி அப்பவே சொன்னது. "இஸ்லாத்திலே சாதியென்ற பேச்சுக்கே இடமில்லை" இது நான் இப்போ சொல்றது.
//5. உங்க ஊர் எது? உங்க ஊருக்குப் போயி உண்மையிலேயே நீங்க மதம் மாரிருக்கீங்கலா இல்ல இது உடான்சான்னு தெரிஞ்சிக்கலாமா ? // நீங்க எப்ப எங்க ஊருக்கு வரத் திட்டமிட்டிருக்கிறீங்க? உங்களைப் பற்றிய முழுத்தகவல் தந்தால் 'நண்பர் வருகிறார்னு' என் பெற்றோருக்குத் தெரியப்படுத்த வசதியாயிருக்கும்.
வா அலைக்கும் ஸலாம்!
வாருங்கள் சகோதரரே! உங்களுக்கு என் அன்பான வரவேற்பு.
அன்புடன்,
அபூ முஹை
//"சூத்திரர்க்கென்றொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி. சாத்திரம் என்றதைச் சொன்னால் , சாத்திரம் அல்ல சதி எனக் கொள்வோம்" - "சாதிகள் இல்லையடி பாப்பா" ரெண்டுமே பாரதி அப்பவே சொன்னது. "இஸ்லாத்திலே சாதியென்ற பேச்சுக்கே இடமில்லை" இது நான் இப்போ சொல்றது.//
சாக்கடைனு சொல்லி காலை எடுத்து ஆசிட்ல வெச்சிட்டிங்களே என்னத்த சொல்ல. வகாபிக்கு ஒரு நீதி - சூப்பிக்கு ஒரு நீதி, சியாவுக்கு ஒரு நீதி - ஷுன்னிக்கு ஒரு நீதி. தலித் முஸ்லிம் கேள்விபட்டதில்லையா ?
உலகெங்கும் வெவ்வேறு இனத்துக்குள் இனப்போர்கள் நடந்துகிட்டுதான் இருக்கு. அதுக்காக நான் முஸ்லிம் என்கிற போர்வைய போத்திகிறேன்னு சொன்னால் சிரிக்கத்தான் வேண்டியிருக்கு.
வ அலைக்கும் சலாம்(வரஹ்)
தங்களின் அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
dear brother in islam
walaikum salam we expecting for your worthless words
rafi
kuwait
test
புதியவனான என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரு விஷயங்கள்:
திரு. கலிபோர்னியா ஆனந்த் அவர்களுக்கான பதிலை இங்கே வைத்திருக்கின்றேன்.
முகம் தெரியாத Anonymous சகோதரருக்கு: மனித குலத்திற்குள் நிலவிய பிரிவினைகள், ஏற்றத்தாழ்வுகளைக் களையும் வழிமுறைகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளிலேயே இருந்ததைக் கண்டதனால்தான் நான் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டேன். தவறு இஸ்லாத்தின் அடிப்படையில் இல்லை, என்பது தெளிவாகத் தெரியும் என்றாலும் தங்களுக்கான பதிலை வைக்கச் சிறிது அவகாசம் கொடுங்கள்.
இப்பதிவிற்கு வருகை தரும் இஸ்லாமிய சகோதரர்கள் யாராவது இதற்கான பதிலை தெரிவித்தாலும் நன்றியுடையவனாக இருப்பேன்.
இணையத்துடன் அதிக பரிச்சயமும், இணையத் தொடர்பும் உள்ளவனாக இல்லாததாலும், மட்டுறுத்தல்கள் சில சமயங்களில் தாமதமாகலாம். பொறுத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
-ஸாலிஹ்(குலசை)
//இப்பதிவிற்கு வருகை தரும் இஸ்லாமிய சகோதரர்கள் யாராவது இதற்கான பதிலை தெரிவித்தாலும் நன்றியுடையவனாக இருப்பேன்.//
புதிய சகோதரர் சாலிஹ் அவர்களே! அழகான முறையில் நீங்கள் எடுத்து வைக்கும் கருத்துக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சாதிகள் பற்றி திருவாய் மலர்ந்திருக்கும் திரு.புறம்போக்கு அவர்களுக்கான பதிலை என்
இஸ்லாத்தில் பிரிவுகளா? பதிவில் இட்டிருக்கின்றேன். படித்துப்பார்க்கவும்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் வந்து சங்கமிக்கும் இந்த இடத்தில் முகம் காட்ட தைரியமில்லா சிலர் இதுபோல் எச்சமிடத்தான் செய்வார்கள். அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு உங்கள் பதிவுகளைத் தொடருங்கள்.
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அடியோடு நீக்குவதற்கான விடையளிக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளை விளக்க எனக்கொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி!
அன்புடன்
இறைநேசன்.
சகோதரர் இறைநேசன் அவர்கள் மிகவும் அருமையான கருத்தை அட்ரஸ் இல்லாதவருக்கு சொல்லியிருந்தார்கள் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு அருமையான பதிலைத் தந்து உதவியமைக்கு மிக்க நன்றி.
Post a Comment