Thursday, April 26, 2007

துடைத்தெறிந்தால் துன்பம் தீரும்

இந்தத் தலைப்பும் வழக்கம் போல் இஸ்லாம் மதம், இந்து மதம், இவைகளுக்கு விளக்கம் போன்ற விஷயங்களை உள்ளடக்கியதுதான் ஆனால் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தில் வாழும் சாதாரண இந்திய குடிமகன் எப்படியெல்லாம் அவஸ்தப்படுகின்றான் என்பதையும் அதற்கு சம்பந்தப்பட்ட மடத் தலைவர்கள் என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தனர் என்று பார்த்தால் வேதனையாக இருக்கின்றது.


ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அதாவது


ஒரு விவசாயி தன் மகளை ஒரு கசாப்புக் கடைக்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை பார்க்க போனார்களாம் அங்கு மகள் வீட்டில் பயங்கரமான மாமிச வாடை இருந்ததாம் இதை பார்த்த தாய் என்னம்மா இதுலே எப்படி இருக்கிறே ஒரே நாத்தமா இருக்கே என்று கேட்டாராம் அதற்கு அந்த மகள் நான் இந்த வீட்டிற்கு வரும்பொழுது சரியான நாத்தமாக இருந்தது ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருகின்றேன் அவ்வளவாக வாசனை இல்லை என்று மகள் பதிலளித்தாலாம்.


இந்தக் கதையின் கருத்து என்னவெனில் தான் வாழக்கூடிய சுற்றுப்புறத்திற்கு ஏற்றார்போல் மனிதன் தன்னை தயார் செய்து கொள்கின்றான் அதுபோலத்தான் “தாழ்த்தப்பட்ட” என்று ஒரு சிறுபான்மையால் சொல்லக்கூடிய ஒரு பெரும்பான்மையான சமுதாயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சமூக அவலங்களை அவர்கள் சகித்துக்கொண்டே பழகிவிட்டனர். அதனால் அவர்கள் படக்கூடிய அவஸ்தை நம் கண்களுக்கு தெரியவரவில்லை, அல்லது அதை நாம் கண்டுகொள்ளவில்லை.


மேலும் அரசாங்கம் எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் அவர்களோடு வாழக்கூடிய சமுதாயம் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றது அதனால் அவர்கள் எவ்வளவுதான் பெரிய பதவிகளுக்கு போனாலும் அவர்களோடு ஒட்டியிருக்கக்கூடிய அடையாளத்தை அவர்களால் களைந்தெரிய முடியவில்லை. இதற்கு இந்திய வரலாற்றில் நிரைய சான்றுகள் உள்ளது, மற்ற சமூகத்தார் அவர்களை பார்க்கக்கூடிய பார்வையின் அர்த்தம் மாற்றப்படாதவரை இந்தியாவில் இது சாத்தியமாகாது.



ஆனால் இந்த விஷயத்தில் உலகிலேயே வெற்றியடைந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இஸ்லாம் மட்டுமே என்று ஆயிரம் முறைகூட சொல்லலாம்.




ஆகிய இரண்டு கட்டுரைகளையும் கீழே நான் வைத்துள்ள கட்டிரையோடு சேர்த்து வாசித்தால் அதில் ஒழிந்திருக்கும் உண்மை புரியும்.

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எ.யு.பி என்ற பள்ளியில் தலித், பிராமண, முஸ்லிம் மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்திய பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இக்கொடுமைக்கு துணை நின்றவர்கள் இப் பள்ளியின் தலைமை நிர்வாகி தாமோதரன் நம்பீசன், தலைமை ஆசிரியை பத்மஜா ஆவர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மனதில் இனவெறியைத் தூண்டும் விதமாக நிர்வாகம் நடந்துள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து B பிரிவிற்கு மாற்றியது தான் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிராக களமிறங்கிய பெற்றோர்களின் முறையீட்டில், ஐந்தாம் வகுப்பின் A பிரிவில் மேல்வர்க்கத்து மாணவர்கள் மட்டும் தான் உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மேலும் உருது பாடப் பிரிவின் காரணத்தைக் கூறி முஸ்லிம் குழந்தைகளுக்கு தனி வகுப்பறை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில பெற்றோர்கள் ஒன்று கூடி நிர்வாகத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு சில தலித் மாணவர்களை இரு வாரங்களுக்கு முன் A பிரிவில் மாறியிருந்தனர். ஆனால், தாழ்ந்த ஜாதியில் பிறந்த பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளைக் கலந்து அமர வைத்து வகுப்பு எடுக்கக் கூடாது என மேல்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தலித் மாணவர்கள் அனைவரும் மீண்டும் B பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக சாத்தமங்கலம் யு.பி பள்ளியில் ஜாதிப் பிரிவினை தலை தூக்கியிருப்பதாகவும் இதனை கடந்த வருடங்களில் உள்ள பள்ளி பதிவுப் புத்தகத்தை பரிசோதித்தால் புரியும் எனவும் பெற்றோர்கள் கூறினர்.

சாத்தமங்கலம் யு.பி பாடசாலையின் நிர்வாகத்தினர் மாணவர்களிடம் தீண்டாமையைத் திணிப்பதை எதிர்த்து பெற்றோர்கள் நேற்று(01/08/2006) மாவட்ட ஆட்சியாளரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலிட உந்துதலின் பெயரில் குந்தமங்கலம் காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை நடத்தினர். இப்பிரச்னையைக் குறித்து கலந்தாலோசனை செய்ய பெற்றோர்-ஆசிரியர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


இச்சம்பவத்தை அறிந்து யு.ஸி.ராமன் எம்.எல்.ஏ, தாமரச்சேரி எ.இ.ஓ போன்றவர்கள் நேற்று இந்த பள்ளியைப் பார்வையிட்டனர். கல்வியறிவு அதிகமாகப் பெற்றிருந்தும், இன்னும் இன வெறியினை மனதில் கொண்டு இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் இச்செயல் இம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது.


நன்றி: தினமலர் 02/08/06

இச்சம்பவம் நடந்தது அன்னிய நாடுகளில் இல்லை நாம் வாழக்கூடிய இந்திய, பாரதத் திருநாட்டில்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"