Saturday, July 28, 2007

சிலை வழிபாடு யாருடைய சூழ்ச்சி

என்னடா இது உலகத்தில் எவ்வளவோ பிரச்னைகள், ஒருபுறம் சுற்றுப்புற சுகாதாரம் சேதமடைகின்றது, மறுபுறம் குத்தகைக் கம்பெனிகளின் பொருளாதாரச் சுரண்டல் இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும் பொழுது இவன் இன்னும் கல்லைக் கும்பிடுகின்றான், மண்ணைக் கும்பிடுகின்றான் என்று எழுதிக்கொண்டு இருக்கின்றானே என்று எனதருமை சகோதரர்கள் எண்ணத்தோன்றும்.

உங்களின் எண்ணமும், சிந்தனையும் சரிதான் ஆனால் நான் அறிந்தவரை, இல்லாத, நடந்திராத ஒரு காரியத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த ஒரு மடத்தனமான காரியம் ஒரு சின்னஞ்சிறிய ஒட்டுண்ணி கூட்டத்திற்காக அவர்களின் மூட நம்பிக்கைக்காக இவ்வளவு செலவு செய்யப்படுகின்றது என்றால் இந்தியாவில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது அதற்கெல்லாம் செலவு செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவு செய்யாமல் இப்படி பாழடித்துவிட்டனரே என்று நினைத்தபோதுதான் அது ஏன் என்று சிந்திக்கத் தூண்டியது.

இறை நம்பிக்கைதான்

இதற்கான மூல காரணமே நாம் வைத்திருக்கும் இறை நம்பிக்கைதான் இறை நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இல்லை ஏதோ ஒரு வகையில் எதையோ ஒன்றை நம்பத்தான் செய்கின்றோம். அந்த நம்பிக்கை தெளிவாகிவிட்டால் நம்முடைய சிந்தனையும் தெளிவாகிவிடும். அந்த நம்பிக்கைத் தெளிவின்மைதான் இப்படிபட்ட மூடநம்பிக்கைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவைத்தது அது மட்டுமல்ல புத்தியுள்ளவர்களை எல்லாம் கைகொட்டி சிரிக்கவும் வைத்தது. விஞ்ஞானத்தில் எவ்வளவோ உச்சிக்கு சென்றுவிட்டோம் என்று உலக நாடுகளுக்கு முன்னால் மார்தட்டக்கூடிய நாம் நம்மைப்பற்றி உலக நாடுகள் எப்படி நினைக்கும் என்று கூட நினைக்கவில்லை?
என்னவென்று சகோதரர்களுக்கு புரிகின்றதா? ராமர் கட்டிய பாலத்தை கடலுக்கு அடியில் தேடியதைத்தான் சொல்லிவருகின்றேன். ஒரு காலத்தில் அப்படித்தான் பிள்ளையார் பால் குடிக்கின்றது என்றார்கள் இப்பொழுது கடலுக்கு அடியில் பாலம் என்கின்றார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.

பைபிள், பகவத்கீதை, திருக்குர்ஆன் போன்ற வேத புத்தகங்கள் எல்லாம் சிலை வழிபாட்டை முற்றாக தடுக்கும் போது இது யாரோ எதுக்கோ செய்த சூழ்ச்சி அல்லது யாரோ வந்தேறிகள் தங்களின் வயிறு பிழைப்பதற்காக ஏழை மக்களை சுரண்டி சாப்பிட எடுத்த தந்திரம் என்பது புத்தியுள்ளவர்களுக்கு தெரிகின்றது.

ஒரு காரியத்தை ஆச்சாரம் என்று செய்யும்பொழுது அதற்கு அந்த மதத்தில், மதத்தின் வேத புத்தகத்தில் ஆதாரம் வேண்டும், இல்லையேல் அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட அநியாயம், சுரண்டல் பேர்வழிகளால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்கவாவது
தைரியம் வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் அந்த இடத்தைவிட்டு வெளியேருவது தான் உத்தமம். சுய மரியாதையும் கூட. ஏழையாக வாழலாம் ஆனால் கோழையாக வாழக்கூடாது. கொஞ்சம் இதை நிதானமாக படித்துப்பாருங்களேன் எனக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்.

பைபிளின் சுய மரியாதை

நாம் தேவனுடைய சந்ததியினராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது . (அப்போஸ்தலர் :- 17,29)

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (கொரிந்தியர் 1:-10,14)

பிள்ளைகளே நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி உங்களைக் கார்த்துக் கொள்வீர்களாக ஆமென்.(யோவான் 1:-5,21)

பயப்படுகிறவர்களும்,அவிசுவாசிகளும்,அருவருப்பானவர்களும்,கொலை பாதகரகரும், விபச்சாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதானைக்காரரும், பொய்யர் அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி:- 21,8)

இது பைபிளின் சாட்சியம் அது சிலை வணக்கத்தை முற்றிலும் தடை செய்கின்றது யஹோவா' பிரிவினர்களைத்தவிர மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் அவர்களின் ஆலயத்துக்குள்ளும், வெளியேயும் சிலை வணக்கம் செய்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதனை சிறிதளவேனும் சிந்திக்க வேண்டாமா?

இன்னும் இது போன்ற மேலதிக விபரங்களுக்கு எபேசியர்:-5,5 பேதுரு:-4,3 போன்ற பல இடங்களை பார்வையிடுக.

பகவத்கீதையின் சுய மரியாதை

என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை, புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர். (பகவத்கீதை:- 7.24)

பகவத் கீதையை வைத்து வயிறு பிழைக்கும் அந்தக்கூட்டமும் அதற்குப் பின்னால் ஓடும் வானரக் கூட்டங்களும் இதை சிந்தித்தால் போதும் இந்தக் கூட்டத்தை அறிவிலிகள் என்கிறது பகவத்கீதை.
மடத்தலைவர்களுக்குப் பின்னால் ஓடும் மூடர்களே கொஞ்சம் நில்லுங்கள் உங்களின் வேத புத்தகம் என்ன சொல்கின்றது என்று கொஞ்சம் நிதானமாக இருந்து படித்துப்பாருங்கள்.
(அடே ஒப்புரானே சத்தியமா அதே நான் சொல்லலே பகவத் கீதைதான் சொல்லுது)

என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தையும் நாம் உயிர்களுக்கெல்லாம் ஈசாயாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு 'மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.
(பகவத்கீதை : 9,11)

கேப்பையில் (கேல்வரகில்) நெய் வடியிதுன்னு சொன்னா கேப்பானுக்கு புத்தி எங்கே போச்சி என்று தமிழில் ஒரு பழமொழிகூட இருக்குதண்ணே. இங்கு பாப்பானுக்கு புத்தி தெளிவா இருக்கு நமக்குத்தான் புத்தி புளியங்காய் புடுங்கப்போயிடுச்சி

எனக்குத் தெரிந்தவரை சுயமரியாதையை பேச தகுதியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே சந்தேகமே வேண்டாம் இதோ அத்தியாயம் ஆயத் நம்பர் உட்பட சகல சகிதமும் உள்ளது துருவித் துருவி தேடலாம் ஆனால் நிச்சயமா பொய்யோ தவறோ உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.

திருக்குர்ஆனின் சுய மரியாதை

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அல்பகறா 2:21)

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள்(அல்லாஹுவுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும்,அவர்களோ அல்லாஹுவினாலேயே படைக்கப்பட்டவர்களாயிற்றே!

(அல் அஃராஃப் :-7,191)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக்காப்பாற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல் ஹஜ் :- 22,73)

அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் காப்பாற்றவும் முடியாது. என்ற
இந்த தைரியம் சிலைகளை திருடும் திருடனுக்கும், சிலைகளை வைத்து வயிறு பிழைக்கும் பாப்பானுக்கும் மிக மிக அதிகமாகவே இருக்கின்றது. (அதனாலேதானையா தைரியமா ஏமாற்றி, மற்றவன் தலையிலே தண்ணியை தெளிச்சிட்டு வந்தர்ரான்)

அவர் கூறினார்! நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான். (அஸ் ஸாஃப்ஃபாத் :- 37,95.96)

அறிவு என்பது சிந்திப்பதற்கு! சிந்தனை என்பது சமுதாயத்தையும், வரும் தலைமுறையையும் நல்வழி நடத்துவதற்கு.
சிந்திப்போம்..!! செயல்படுத்த…..!!!

Thursday, April 26, 2007

துடைத்தெறிந்தால் துன்பம் தீரும்

இந்தத் தலைப்பும் வழக்கம் போல் இஸ்லாம் மதம், இந்து மதம், இவைகளுக்கு விளக்கம் போன்ற விஷயங்களை உள்ளடக்கியதுதான் ஆனால் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தில் வாழும் சாதாரண இந்திய குடிமகன் எப்படியெல்லாம் அவஸ்தப்படுகின்றான் என்பதையும் அதற்கு சம்பந்தப்பட்ட மடத் தலைவர்கள் என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தனர் என்று பார்த்தால் வேதனையாக இருக்கின்றது.


ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அதாவது


ஒரு விவசாயி தன் மகளை ஒரு கசாப்புக் கடைக்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை பார்க்க போனார்களாம் அங்கு மகள் வீட்டில் பயங்கரமான மாமிச வாடை இருந்ததாம் இதை பார்த்த தாய் என்னம்மா இதுலே எப்படி இருக்கிறே ஒரே நாத்தமா இருக்கே என்று கேட்டாராம் அதற்கு அந்த மகள் நான் இந்த வீட்டிற்கு வரும்பொழுது சரியான நாத்தமாக இருந்தது ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருகின்றேன் அவ்வளவாக வாசனை இல்லை என்று மகள் பதிலளித்தாலாம்.


இந்தக் கதையின் கருத்து என்னவெனில் தான் வாழக்கூடிய சுற்றுப்புறத்திற்கு ஏற்றார்போல் மனிதன் தன்னை தயார் செய்து கொள்கின்றான் அதுபோலத்தான் “தாழ்த்தப்பட்ட” என்று ஒரு சிறுபான்மையால் சொல்லக்கூடிய ஒரு பெரும்பான்மையான சமுதாயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சமூக அவலங்களை அவர்கள் சகித்துக்கொண்டே பழகிவிட்டனர். அதனால் அவர்கள் படக்கூடிய அவஸ்தை நம் கண்களுக்கு தெரியவரவில்லை, அல்லது அதை நாம் கண்டுகொள்ளவில்லை.


மேலும் அரசாங்கம் எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் அவர்களோடு வாழக்கூடிய சமுதாயம் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றது அதனால் அவர்கள் எவ்வளவுதான் பெரிய பதவிகளுக்கு போனாலும் அவர்களோடு ஒட்டியிருக்கக்கூடிய அடையாளத்தை அவர்களால் களைந்தெரிய முடியவில்லை. இதற்கு இந்திய வரலாற்றில் நிரைய சான்றுகள் உள்ளது, மற்ற சமூகத்தார் அவர்களை பார்க்கக்கூடிய பார்வையின் அர்த்தம் மாற்றப்படாதவரை இந்தியாவில் இது சாத்தியமாகாது.



ஆனால் இந்த விஷயத்தில் உலகிலேயே வெற்றியடைந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இஸ்லாம் மட்டுமே என்று ஆயிரம் முறைகூட சொல்லலாம்.




ஆகிய இரண்டு கட்டுரைகளையும் கீழே நான் வைத்துள்ள கட்டிரையோடு சேர்த்து வாசித்தால் அதில் ஒழிந்திருக்கும் உண்மை புரியும்.

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எ.யு.பி என்ற பள்ளியில் தலித், பிராமண, முஸ்லிம் மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்திய பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இக்கொடுமைக்கு துணை நின்றவர்கள் இப் பள்ளியின் தலைமை நிர்வாகி தாமோதரன் நம்பீசன், தலைமை ஆசிரியை பத்மஜா ஆவர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மனதில் இனவெறியைத் தூண்டும் விதமாக நிர்வாகம் நடந்துள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து B பிரிவிற்கு மாற்றியது தான் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிராக களமிறங்கிய பெற்றோர்களின் முறையீட்டில், ஐந்தாம் வகுப்பின் A பிரிவில் மேல்வர்க்கத்து மாணவர்கள் மட்டும் தான் உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மேலும் உருது பாடப் பிரிவின் காரணத்தைக் கூறி முஸ்லிம் குழந்தைகளுக்கு தனி வகுப்பறை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில பெற்றோர்கள் ஒன்று கூடி நிர்வாகத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு சில தலித் மாணவர்களை இரு வாரங்களுக்கு முன் A பிரிவில் மாறியிருந்தனர். ஆனால், தாழ்ந்த ஜாதியில் பிறந்த பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளைக் கலந்து அமர வைத்து வகுப்பு எடுக்கக் கூடாது என மேல்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தலித் மாணவர்கள் அனைவரும் மீண்டும் B பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக சாத்தமங்கலம் யு.பி பள்ளியில் ஜாதிப் பிரிவினை தலை தூக்கியிருப்பதாகவும் இதனை கடந்த வருடங்களில் உள்ள பள்ளி பதிவுப் புத்தகத்தை பரிசோதித்தால் புரியும் எனவும் பெற்றோர்கள் கூறினர்.

சாத்தமங்கலம் யு.பி பாடசாலையின் நிர்வாகத்தினர் மாணவர்களிடம் தீண்டாமையைத் திணிப்பதை எதிர்த்து பெற்றோர்கள் நேற்று(01/08/2006) மாவட்ட ஆட்சியாளரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலிட உந்துதலின் பெயரில் குந்தமங்கலம் காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை நடத்தினர். இப்பிரச்னையைக் குறித்து கலந்தாலோசனை செய்ய பெற்றோர்-ஆசிரியர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


இச்சம்பவத்தை அறிந்து யு.ஸி.ராமன் எம்.எல்.ஏ, தாமரச்சேரி எ.இ.ஓ போன்றவர்கள் நேற்று இந்த பள்ளியைப் பார்வையிட்டனர். கல்வியறிவு அதிகமாகப் பெற்றிருந்தும், இன்னும் இன வெறியினை மனதில் கொண்டு இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் இச்செயல் இம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது.


நன்றி: தினமலர் 02/08/06

இச்சம்பவம் நடந்தது அன்னிய நாடுகளில் இல்லை நாம் வாழக்கூடிய இந்திய, பாரதத் திருநாட்டில்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"