Friday, August 04, 2017

இழிவிற்குரிய பெண்மக்கள்

                   

 உண்மையில், பெண் குழந்தையைப் பற்றிய பைபிள், திருக்குர்ஆன் ஆகியவற்றின் கண்ணோட்டங்களுக்கிடையேயுள்ள வித்தியாசங்கள் பெண் குழந்தை பிறந்திதிலிருந்தே தொடங்கி விடுகிறது. உதாரணமாக, பெண் குழந்தை பிறந்து விட்டால் தாய் தூய்மையடையும் காலம் ஆண் குழந்தைக்கு அனுசரிக்கும் காலத்தைப் போல் இரு மடங்காகும் என பைபிள் கூறுகிறது. 
(லேவியராகமம் 12: 2-5). கத்தோலிக்க பைபிள் வெளிப்படையாகவே கூறுகிறது:

'பெண் குழந்தையின் பிறப்பு நஷ்டமேயாகும்.' (Ecclesiasticus 22:3)

இந்த அதிர்ச்சியூட்டும் கருத்திற்கு எதிராக ஆண் குழந்தை புகழப்படுகின்றான்.

'தன் மகனிற்கு கல்வி புகட்டுபவன் எதிரியையே பொறாமைப்பட வைத்த காரியத்தை செய்தவனாவான்.' (Ecclesiasticus 30:3)

இனத்தை விருத்தியடையச் செய்யும் பொருட்டு சந்ததிகளை பெருக்கும் செயலை ஆண்களுக்கு யூத அறிஞர்கள் கட்டாயமாக்கினார்கள்;. ஆனால் அதே நேரத்தில் ஆண் குழந்தைகள்தான் உயர்ந்தவர்கள் என்பதை அவர்கள் மறைக்கவில்லை.'  'எவர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்கின்றனவோ அது அவர்களுக்கு நல்லதாகும். ஆனால் எவர்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றவோ அது அவர்களுக்கு கெட்டதாகும்.' 'ஆண் குழந்தை பிறப்பின் போது எல்லோரும் மகிழ்கிறார்கள்... பெண் குழந்தை பிறக்கும் போது எல்லோரும் துக்கமாக இருக்கிறார்கள் 'ஒரு ஆண் குழந்தை இவ்வுலகிற்கு வரும் போது சமாதானம் இவ்வுலகிற்கு வருகிறது .... பெண் குழந்தை இவ்வுலகிற்கு வரும்போது ஒன்றும் வருவதில்லை.'7

உன் மகள் தான்தோன்றித்தனமாக இருக்கிறாளாஉன் எதிரிகள் உன்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்கும்படி, நகரத்தின் பிராதான பேச்சாக அவள் ஆகி, எல்லோரும் அவளைப்பற்றி குசுகுசுத்து பேசும் வகையில் அவள் நடந்து உன்னை அவமானப்படுத்திடாமலிருக்கும் வகையில் நீ அவளை எப்பொழுதும் கண்காணித்திரு. (Ecclesiasticus 42: 11)

தான்தோன்றித்தனமாக இருக்கும் மகளை கடும் கட்டுப்பாட்டில் வைத்திரு இல்லையேல் அவளுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தி விடுவாள்.  அவளின் வெட்கமற்ற கண்களின் மேல் ஒரு கவனம் வைத்திரு.  அவள் உன்னை அவமானப்படுத்தியும் விடுவாளா என்று வியந்து (இதை செய்யாமல்) இருக்காதே.  (Ecclesiasticus 26:10-11)

பெண்களை இழிவின் ஊற்றாக கருதும் இது போன்ற எண்ணம்தான் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியர்களை பெண் கொலை புரியத் தூண்டியது.  திருக்குர்ஆன் இந்த மோசமான செயலை அய்யாமுல் ஜாகலிய்யா அதாவது அறியாமைகாலம் எளிமையாக சொன்னால் காட்டுமிராண்டிக்காலம் எனக் கடுமையாக கண்டிக்கிறது :

இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால் அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது.  துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கின்றது. இந்தக் கேலவமான செய்தி கிடைத்து விட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களை விட்டு ஒதுங்கிச் செல்கின்றார்.  அவமானப்பட்டுக்கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் - பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்தனை கெட்டது. (16:59)

இந்தச் செயலை கண்டிப்பதற்காக திருக்குர்ஆனில் உபயோகிக்கப்பட்டுள்ள (16:59, 43:17, 81:8-9) சுடும் வார்த்தைப் பிரயோகங்களின் சக்தி இல்லையென்றால் இந்தக் கொடிய குற்றம் அரபு மண்ணில் ஒரு போதும் நிறுத்தியிருக்கப்படமாட்டாது என்பதை இஸ்லாத்தின் மீது கண்ணை மூடிக்கொண்டு மண்ணை தூற்றுபவர்கள் நினைவில் வைக்க வேண்டும். மேலும், ஆணுக்கும் பெண்ணிற்குமிடையே எந்த வித்தியாசத்தையும் திருக்குர்ஆன் கற்பித்திடவில்லை. பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக, திருக்குர்ஆன் ஆணுடைய பிறப்பைப் போலவே பெண்ணின் பிறப்பும் இறைவனின் கொடை, அருள் என்றுதான் கருதுகிறது. பெண் குழந்தை கொடையை திருக்குர்ஆன் முதலில் குறிப்பிடுகின்றது

அல்லாஹ் பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான்: தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண் மக்களை வழங்குகின்றான்: தான் நாடுவோருக்கு ஆண் மக்களை வழங்குகின்றான். (42:49)

ஆரம்ப கட்டத்திலிருந்த முஸ்லிம் சமுதாயத்தில் நிலவியிருந்த பெண் சிசுக்கொலையை முற்றாக, ஏன் அது பற்றிய தடயங்களைக் கூட அழித்தொழிக்கும் நோக்குடன் நபி (ஸல்) அவர்கள் பெண் குழந்தை கொடுக்கப்பட்டு அருள்புரியப்பட்டவர்களுக்கு அப்பெண் குழந்தைகளை அன்பான முறையில் வளர்த்தால் இறைவனிடத்தில் மிகப் பெரும் நற்கூலி பெறுவார்கள் என்று வாக்குறுதியளித்தார்கள்:

'எவர் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினால் அப் பெண் குழந்தைகள் நரக நெருப்பிலிந்து அவரை காப்பவர்களாக ஆகி விடுவார்கள்.' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

'எவர்கள் இரு பெண்களை பருவமடையும் வரை நல்ல முறையில் வளர்க்கின்றார்களோ அவரும் நானும் மறுமை நாளில் இது போன்று வருவோம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் தங்களின் இரு விரல்களை சேர்த்துக் காட்டினார்கள்.' (முஸ்லிம்)

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியது போல் பூமியிலுள்ள எந்த மதமும் கண்ணியப்படுத்தவில்லை என்பது உண்மைதான்  இதில் வருத்தத்திற்குறிய விஷயம் என்னவெனில் உலகில் இன்று எதார்த்தமாக கண்கூடாக பார்க்கமுடியும் விளையாட்டில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உடை வித்தியாசம் சினிமாவில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உடை வித்தியாசம் ஆனால் வெட்கமே இல்லாமல் இது நாகரீகம் என்பார்கள் என்ன செய்ய கலியுக காலம்    

No comments: