அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர்களே மன்னிக்கவும் நீண்ட நாட்களாக தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது.
இஸ்லாத்தைப்பற்றி எந்த ஆதாரமும் இல்லாமல் விமர்சிப்பது மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஆரோக்கியம் , டோண்டு ராகவன் , Calgary சிவா , நேச குமார் , வஜ்ரா ஷங்கர் போன்றோர் அடுத்து வைக்கக்கூடிய இஸ்லாம் சம்பந்தமான வெறுப்பு வாதம்தான் பலதாரமணம்.
இவர்களுக்கு ஒரு செயலின் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை பெண்கள் அரைகுறை ஆடையுடன் வெளியில் உலாவ வேண்டும் இது மட்டும் தான் இவர்களின் பிரதான நோக்கம். இதை டொண்டு ராகவனின் சில பதிவுகளில் நான் கவனித்தது.(நன்மையை கருதி லிங் கொடுக்கவில்லை) அதுமட்டுமல்ல எத்தனை முறை பதில் கொடுத்தாலும் அதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஆனால் எங்காவது ஒரு மூலையில் ஓட்டை சங்கை வைத்துக்கொண்டு ஊளையிடுவது இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்று. நான் பலமுறை கேட்ட விஷயம்தான் என்னவெனில் இவர்கள் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்றெல்லாம் கூக்குரல் இடுவதைவிட தங்களின் மதத்தையும் அதன் கொள்கையையும் சொன்னாலே போதும் அவர்களின் நம்பிக்கைபடி எங்களைப் போன்றவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையாவது தடுத்திருக்க முடியும்.
பலதாரமணம் என்பது மனித சமூகங்களில் பலவற்றில் காணப்பட்ட மிகத்தொன்மையான பழக்கமாகும். பைபிள் பலதாரமணத்தை தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதாரமணத்தை மீண்டும் மீண்டும் அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்.
மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாக சொல்லப்படுகிறது. ( 1 இராஜாக்கள் 11:3)
மேலும், மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. (2 சாமுவேல் 5:13).
பல்வேறு மனைவிகளுக்கு பிறந்த மகன்களுக்கிடையே எவ்வாறு சொத்துக்களை விநியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7)
மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்குத்தான் இதில் தடையுள்ளது. (லேவியராகமம் 18:8)
அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என தல்மூது பரிந்துரைக்கிறது. Swidler, op. cit., pp. 144-148.
பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதாரமணப் பழக்கத்தை பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ராயீலிற்கு வந்து குடியேறும் வரை , தொடர்ந்து பலதாரமணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ராயிலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும் , சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதாரமணத்திற்கு அனுமதி இருக்கவே செய்கிறது. oazleton, op. cit., pp 44-45.
புதியஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது ? பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் பலதாரமணம் பற்றி மறுஆய்வு என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதாரமணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை. Euge,e oillman, Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches (New York: Ornis Nooks, 1975) p.140.
மேலும் , யூத சமூகத்தில் பலதாரமணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. கிரேக்க-ரோம கலாச்சாரத்தை (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற , ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) அனுசரித்தே சர்ச் பலதாரமணத்தை தடை செய்தது என்ற உண் மையை பாதர் ஊஜீன் ஹில்மேன் கவனத்திற்கு கொண்டு வருகிறார்.
நம்முடைய இக்காலத்தில், ரோம பழக்கவழக்கத்திற்கு ஏற்ப மற்றொரு திருமணம் செய்வது தடைசெய்யப்படுகின்றது. Inid., p. 17.
என்ற புனித அகஸ்டினின் அவர்களின் கட்டளையை எடுத்துக்காட்டுகிறார். பலதார மணத்தை சர்ச் தடைசெய்தது மற்ற கலாச்சாரத்தை பின்பற்றி செய்ததேயல்லாது அது கிறிஸ்தவ மதத்தின் கட்டளையல்ல என ஆப்பிரிக்க சர்ச்சுகளும் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவர்களும் அவர்களின் ஐரோப்பிய சகோதரர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகின்றனர்.
திருக்குர்ஆனும் பலதாரமணத்தை அனுமதித்துள்ளது , ஆனால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமலன்று:
அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக , மும்மூன்றாக , நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள் ; அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.(4:3)
பைபிளிற்கு எதிராக திருக்குர்ஆன் அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் வரை மணந்து கொள்ள , அதுவும் அவர்களை சமமாகவும் நீதமாகவும் நடத்தவேண்டும் என்ற கடும் நிபந்தனையின் கீழ் , அனுமதித்துள்ளது. திருக்குர்ஆன் பலதாரமணத்தை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது என்றோ அல்லது அது மிகவும் முன்மாதிரியான எல்லோரும் பின்பற்றியாகவேண்டிய பழக்கம் என்று கருதுவதாகவோ எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.
திருக்குர்ஆன் பலதாரமணத்தை ' சகித்துக்கொண்டுள்ளது' அல்லது 'அனுமதித்துள்ளது ' அவ்வளவுதான். அதுவும் ஏன்? ஏன் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது ? பதில் மிகவும் எளிது: பலதார மணத்தை நிர்ப்பந்திக்கும் சமூக மற்றும் ஒழுக்க காரணங்கள் கொண்ட சில நேரங்கள் , சில சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன என்பதுதான் அதற்குரிய பதிலாகும். மேற்காணும் திருமறைவசனம் குறிப்பிடுவது போல் அநாதைகள் , விதவைகள் ஆகியோருக்கு சமூகம் செய்ய வேண்டிய கடமைகளில் பலதாரமணம் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கவனிக்காமல் அதை தனியாக புரிந்துகொள்வதென்பது இயலாத ஒன்றாகும்.
எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் பொருத்தமான மார்க்கமான இஸ்லாம் இவைகள் போன்ற நிர்ப்பந்திக்கும் சூழ்நிலைகளை அலட்சியப்படுத்தவே முடியாது. இந்தக் கட்டுரையின் மூலம் ஆரோக்கியம் , டோண்டு ராகவன், Calgary சிவா, நேச குமார் , வஜ்ரா ஷங்கர் போன்றோருக்கு நான் சொல்லவிரும்பும் விஷயமும் இதுதான்
மனித சமூகங்களில் பலவற்றில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்களை விட குறைந்த பட்சம் எட்டு மில்லியன் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். குயினா போன்ற நாடுகளில் 100 ஆண்களுக்கு 122 பெண்கள் வீதம் இருக்கின்றனர். தான்ஸானியாவில் 100 பெண்களுக்கு 95.1 ஆண்களே இருக்கின்றனர். இப்படி சமமற்ற பால் விகிதம் இருக்கும் போது ஒரு சமூகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
அதற்கு பல தீர்வுகள், சிலர் சன்னியாசத்தையும் சிலர் பெண் சிசுக்கொலையையும் சிபாரிசு செய்கின்றனர். (இன்றைய உலகில் இது நடந்து கொண்டுதான் வருகின்றது) விபச்சாரம் , திருமணமின்றி உடலுறவு கொள்ளுதல் , ஓரினப்புணர்ச்சி போன்றவைகள் அனைத்தையும் சமூகம் , சகித்துக்கொள்வதுதான் ஒரே வழி என மற்றும் சிலர் நினைக்கின்றனர்.
பல ஆப்பிரிக்க சமூகத்தைப் போன்றவைகளுக்கோ மிகவும் கண்ணியத்திற்குரிய வழி என்பது எதுவெனில் பலதாரமணத்தை கலாச்சாரரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகவும் சமூக ரீதியில் மதிப்பிற்குரிய முறையாகவும் ஏற்றுக்கொள்வதுமேயாகும். மற்ற கலாச்சாரத்தை சேர்ந்த பெண்கள் பலதாரமணத்தை தங்களின் இழிவின் அடையாளமாக கருதுவதில்லை என்பதை மேற்கத்திய உலகம் அடிக்கடி தவறாகபுரிந்து கொள்கின்றது என்பதே பிரச்னையாகும்.
உதாரணமாக, பல ஆப்பிரிக்க பெண்கள் அவர்கள் கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ அல்லது மற்ற மதங்களைச் சார்ந்தவர்களோ ஏற்கனவே திருமணமாகி தான் பொருப்புள்ள கணவன் என செயல்பட்டுக்காட்டிய ஆணையே திருமணம் செய்ய அதிகம் விரும்புகின்றனர். தாங்கள் தனிமையை உணராதிருப்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி பல ஆப்பிரிக்க மனைவிகள் தங்கள் கணவனை தூண்டுகின்றனர். John E'Emilio and Estelle N. Freedman, Intimate Matters: A history of Sexuality in America (New Youk: oarper ~ Row Punlishers, 1988) p. 87.
நைஜீரியாவின் இரண்டாம் பெரிய நகரத்தில் 15 முதல் 59 வயது வரையுள்ள சுமார் 6000 பெண்களிடம் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி அவர்களில் 60 சதவிகிதம் பேர் தங்கள் கணவன்மார்கள் இரண்டாம் திருமணம் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். 23 சதவிகிதம் பெண்களே தங்கள் கணவன்மார்கள் இரண்டாம் மணம் செய்வதை விரும்பாமல் கோபிப்பவர்களாவார்கள். கென்யாவில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 67 சதவிகிதம் பெண்கள் பலதாரமணத்தை சரியானதெனவே கருதுகின்றனர். கென்யாவின் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 27 பெண்களில் 25 பேர் ஒருதாரமணத்தை விட பலதாரமணம் மிகச் சிறந்தது எனக் கருதினர். கூட இருக்கும் சக்களத்திகள் ஒத்துழைத்தால் பலதாரமணம் மகிழ்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமெனவும் இந்தப்பெண்கள் உணர்ந்துள்ளனர்.
சில புரட்டாஸ்டாண்டு சர்ச்சுகளும் கூட அதை சகித்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பெரும்பாலான ஆப்பிரிக்க சமூகத்தில் பலதாரமணம் மிகவும் மரியாதைக்குரிய ஒரு முறையாக ஆகியுள்ளது. கணவன் மனைவிக்கிடையேயுள்ள அன்பின் வெளிப்பாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக ஏகதாரமணம் இருக்கலாமென்றாலும் , சில சமூகங்களில் பலதாரமணம் சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும் பலதாரமணம் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருதப்படுவதையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். The Weekly Review, Aug. 1, 1987.
ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றி கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்கன் சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முறையை விட , இதனால் கைவிடப்பட்ட மனைவி குழந்தைகள் ஆகியோரை கவனத்தில் கொள்ளும் போது பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது என தீர்மானித்துள்ளார். Kilnride, op. cit., p. 126.
மேற்கத்திய நாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகும் பலதாரமணத்திற்கெதிராக எந்தவித ஆட்சேபமும் இல்லாத பல உயர் கல்வி கற்ற ஆப்பிரிக்க மனைவிகளை நான் தனிப்பட்ட முறையில் நன்கறிவேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர்களில் ஒருத்தி, குழந்தைகளை வளர்ப்பதில் அவளுக்கு துணையாயிருக்கும் வகையில் , இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்படி கணவனை வற்புறுத்துகின்றாள்.
சமமற்ற பால் விகித பிரச்னை போர்க்காலங்களில் மிகவும் சிக்கலாகின்றது. அமெரிக்க பூர்விக செவ்விந்தியர்கள் யுத்த காலத்தில் மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பால் விகிதத்தினால் மிகவும் துன்பத்திற்குள்ளாகினர். மிகவும் உயர்ந்த அந்தஸ்திலிருந்த இந்த குலப் பெண்கள் , இதன் விளைவாக, கெட்ட ஆபாசமான காரியங்களில் ஈடுபடுவதற்கு மாறாக பலதாரமணத்தை தங்களுக்கு சிறந்த பாதுகாப்பளிக்கும் ஒன்றாக ஏற்றுக்கொண்டனர். அங்கு வந்தேறிய அமெரிக்கர்களோ , இத்தகைய ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தின் போது வேறு என்ன முறையை கடைப்பிடிப்பது என்பதை கூறாமல் , பலதாரமண நடைமுறையை மாத்திரம் ' காட்டுமிராண்டித்தனம்' என்று கண்டனம் செய்தனர்.
ஒருவேளை அப்பெண்களை தங்களின் தவறான ஈனப்புத்திக்கு விருந்தாக்க நினைத்திருக்கக்கூடும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் , ஜெர்மனியில் மாத்திரம் ஆண்களை விட பெண்கள் 7,300,000 அதிகமாகயிருந்தனர் (அவர்களில் 3.3 மில்லியன் பேர் விதவைகள்.) 20 வயதிலிருந்து 30 வயதிற்குட்டவர்களில் 100 ஆண்களுக்கு 167 பெண்கள் இருந்தனர். இத்தகைய பல பெண்களுக்கு ஒரு ஆண் தோழனாக மாத்திரமல்லாமல் முன்னெப்போதும் ஏற்பட்டிராத துன்பம் கஷ்டம் ஆகியவை ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் குடும்பத்திற்கு தேவையானதை அளித்து பாதுகாக்கக்கூடியவர்கள் தேவைப்பட்டனர். ஐக்கிய இராணுவ வீரர்கள் இந்தப் பெண்களின் இத்தகைய பலவீனத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பல இளம் பெண்களும் விதவைகளும் இந்த ஆக்ரமிப்புப் படையுடன் (குடும்பத் தேவைகளுக்காக) கட்டுப்பாடற்ற உடலுறவு கொண்டனர். (இன்றும் யுத்தங்களின் முடிவு இதுவாகத்தான் இருக்கின்றது)
பல அமெரிக்க, பிரிட்டன் வீரர்கள் தாங்கள் பெறும் இந்த சுகத்திற்கு பதிலாக சிகெரட்டுக்கள், மிட்டாய்கள் , ரொட்டிகள் ஆகியவற்றை கொடுத்தனர். இந்த அன்னியர்கள் கொடுத்த பொருட்களால் குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தனர். மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் இந்தப் பொருட்களை கண்ட ஒரு பத்து வயதுப்பையன் தன் தாய் இனிமேல் பசிக்கொடுமைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அவளுக்கும் ஒரு 'ஆங்கிலேயன் ' இருந்தால் நன்றாகயிருக்கும் என மனப்பூர்வமாக ஆசைப்பட்டான். 62 Inid., pp. 257-258.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நம் மனச்சாட்சியை தொட்டு கேட்க வேண்டும். (இது மனசாட்சி உள்ள மனித சமூகத்தின் நன்மையை மதிக்கக் கூடியவர்களின் நிலைபாடு)
இதை விட பெண்களுக்கு கண்ணியமளிப்பது எது ? சிவப்பிந்தியர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதைக்குரிய இரண்டாம் மனைவியாக இருப்பது பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா அல்லது அநாகரிக 'ஐக்கிய இராணுவத்தினரிடம் இருந்தது போல் விபச்சாரியாக இருப்பது நல்லதா? வேறு வார்த்தைகளில் சொல்வதனால் , திருக்குர்ஆன் முன்வைக்கும் தீர்வு பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா அல்லது ரோம சாம்ராஜ்யத்தின் கலாச்சார அடிப்படையிலமைந்த இறையியல் பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா ?
1948 ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகிலஉலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. எந்த தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதாரமணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும் , இதை கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர் இது ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக , மாநாட்டின் இறுதித்தீர்மானங்களில் ஒன்றாக பலதாரமணமும் சேர்க்கப்பட்டது. Saniq, op. cit., p. 191.
பெரும் அழிவுகளை உண்டாக்கக்கூடிய ஆயுதங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலக நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளன. ஐரோப்பிய சர்ச்சுகள் இப்பொழுதோ பிறகோ பலதாரமணத்தை ஒரே தீர்வாக ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியிருக்காது. பாதர் ஹில்மேன் இந்த உண்மையை மிகவும் ஆழ்ந்து சிந்தனைக்குப்பிறகு அங்கீகரித்தேயுள்ளார் , மனித கூட்டுக்கொலை தொழிற் நுட்பங்கள் (நியூக்லியர் , பயாலாஜிகல், கெமிகல்...) பால் விகிதத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.
அப்பொழுது பலதாரமண முறைதான் மனித சமூகம் உயிர்பிழைத்திருக்க அவசியமான முறையாக ஆகிவிடும்... முன்னைய பழக்கம் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக பலதாரமணம்தான் இயல்பிற்கும் ஒழுக்கமாண்புகளுக்கும் ஒத்தது என்ற மனவிருப்பம் அத்தகைய சூழ்நிலைகளில் அதிகப்பட்டுவிடும். அது போன்ற சூழ்நிலைகளில் இறையியல் வல்லுநர்களும் சர்ச் தலைவர்களும் இந்த புதிய பலதாரமண கொள்கையை நியாயப்படுத்தும் விதத்தில் வலுவான காரணங்களையும் பைபிள் ஆதாரங்களையும் முன்வைப்பர். oillman, op. cit., p. 12.
இன்று வரை, நவீன சமூகங்களில் நிலவிவரும் ஒரு சில சமூகக்கேடுகளுக்கான சிறந்த தீர்வாக பலதாரமணம் இருந்து வருகின்றது. பலதாரமணத்திற்கு தரும் அனுமதியின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய திருமறைகுர்ஆன் குறிப்பிடும் சமூகக்கடமைகள் (நிறைவேற்றப்படாமல்) ஆப்பிரிக்காவை விட மேற்கத்திய சமூகங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உதாரணமாக, கருப்பர் சமுதாயத்தில் மிக அதிக பால்விகிதம் காணப்படுகின்றது.
ஆண்களில் இருபது பேர்களில் ஒருவர் 21 வயதையடையும் முன்பே இறந்து விடுகின்றனர். 20 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களில், ஒருவருக்கொருவர் கொலைசெய்து கொள்வதே சாவிற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. மேலும் , பல கருப்பு ஆண்கள் வேலை கிடைக்காதவர்களாகவும் , ஜெயிலிலும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுமுள்ளனர். Inid., p. 26.
இதன் விளைவாக நான்கில் ஒரு கருப்புப் பெண் 40 வயதிலும் கூட திருமணமாகாமல் இருக்கின்றனர். வெள்ளையரிடத்தில் இந்த விகிதம் பத்தில் ஒன்று. Kilnride, op. cit., p. 94.
மேலும் பல கருப்பு பெண்கள் இருபது வயதிற்கு முன்னரேயே (திருமண பந்தமின்றி கர்ப்பமாகி) ஒற்றை தாயாக (-முறையான தகப்பனில்லாமல்) ஆகி விடுகின்றார்கள். அவர்கள் தங்களின் தேவைகைளை பூர்த்தி செய்வதற்காக வேறு ஆட்களை சார்ந்து நிற்க வேண்டியதிருக்கிறது. இத்தகைய துன்ப சூழ்நிலைகளின் விளைவாக பல கருத்த பெண்கள் 'ஆளை பகிர்ந்து கொள்ளுதல் ' என்பதில் ஈடுபட்டு விடுகின்றனர். அதாவது, ஆதரவற்ற இந்த கருத்த பெண்கள் திருமணமானவர்களுடன் கள்ள உறவு வைத்துக்கொள்கின்றனர். தங்களின் கணவனை வேறு பெண்களும் ' பங்கு' போட்டுக்கொள்கிறார்கள் என்ற இந்த விசயம் பெரும்பாலும் அவர்களின் மனைவிகளுக்கு தெரியாமல் போகின்றது.
ஆப்பிரிக்க வழியிலான அமெரிக்க சமூகத்தினரின் ஆளை பங்குபோடுதல் ' எனும் இந்த பிரச்னையை உற்று நோக்கி வரும் சிலர், அமெரிக்க சமூகத்தில் பரந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும் வரையிலாவது, இந்த கருத்த ஆண்கள் குறைவு பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக 'சம்மதப்பட்ட பலதாரமணத்தை ' தீவிரமாக பரிந்துரைக்கின்றனர். Inid.
சம்மதப்பட்ட பலதாரமணம்' என்பது என்னவெனில் மனைவிக்கும் மொத்தத்தில் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தற்போது நடந்து வரும் ' ஆளை பங்கிடும் ' இரகசிய முறைக்கு எதிராக பலதாரமணமென்பது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட ஒன்றாக இருக்க வேண்டும் .
மேலும் அதில் சம்மந்தப்பட்ட அனைவரின் சம்மதமும் வேண்டும் என்பதாகும். ஆப்பிரிக்க வழி அமெரிக்க கருப்பர்களின் 'ஆணைப் பங்கிடுதல் ' பிரச்னைதான் பிலாதெல்பியாவிலுள்ள டெம்பிள் பல்கலைக்கலைக்கழகத்தில் 27 ஜனவரி 1993 அன்று நடந்த கருத்தரங்கின் முக்கிய , சிறப்பிற்குரிய பேச்சாளர்கள் அழைக்கப்படிருந்த , தலைப்பாக இருந்தது. Inid. pp. 95-99.
இந்தப் பிரச்னைக்குரிய சரியான தீர்வாக பலதாரமணத்தை சில பேச்சாளர்கள் முன்வைத்தனர். பலதாரமணம் சமூகத்தில் , குறிப்பாக விபச்சாரத்தையும் வைப்பாட்டிகளையும் அனுமதிக்கும் சமூகத்தில் , தடைசெய்யப்படக்கூடாது என கூறினர். ஆப்பிரிக்காவில் மிகவும் பொறுப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு ஆரவாரமான வரவேற்ப்பை பெற்றுவரும் பலதாரமணத்தை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் கருத்து தெரிவித்தார்.
ரோமன் கத்தோலிக்கத்தை சார்ந்த பிலிப் கில்ப்ரைட் எனும் அமெரிக்க மனிதவியல் ஆராய்ச்சியாளர் தன்னுடைய சிந்தனையைத் தூண்டும் 'நம் காலத்திற்கு பலதாரமணம் ' என்ற புத்தகத்தில் அமெரிக்க சமுகத்தில் மொத்தத்தில் நிகழும் சில சமூகத்தீமைகளுக்கு சரியான தீர்வாக பலதாரமணத்தை முன்வைத்துள்ளார். பெரும்பாலான சமயங்களில் விவாகரத்துக்களுக்கு , அதன் விளைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் மிகச்சிறந்த தீர்வாக பலதாரமணம் விளங்கும் என அவர் வாதிக்கின்றார்.
திருமணத்திற்கு பிறகு நடக்கும் கள்ள உறவுகளே அமெரிக்க சமூகத்தில் பெரும்பாலான விவாகரத்திற்கு காரணமாக உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த கள்ள உறவு (முந்திய துணையை) விவாகரத்து செய்வதில் முடிவதை விட இன்னுமொரு திருமணத்தில் முடியுமானில், அது (முந்திய துணையின்) குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் குடும்பம் பிரிந்து இல்லாமலாகி போவதுதான் வழி என்றிருப்பதை விட குடும்பம் ஒன்றிணைந்து இருந்தால் அக்குடும்பத்தின் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் கவனித்திட முடியும் என கில்ப்ரைட் கூறுகிறார். மேலும் , வயதாகியும் திருமணமாகா முடியாமல் இருக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் 'ஆணைப் பங்கிடுதல் ' முறையில் ஈடுபட்டிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போன்றவர்களுக்கும் அது மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என கில்ப்ரைட் ஆலோசனை தெரிவிக்கிறார்.
பேக்கரியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடையே 1987 ஆம் ஆண்டு ஒரு செய்திப்பத்திரிக்கை ' திருமணம் செய்ய தகுதியுள்ள ஆண்கள் குறைவாக இருக்கும் நிலையில் பலதார மணத்தை சட்டம் அனுமதிக்கலாமா? என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த பலதாரமண கருத்தை பெரும்பாலும் அனைத்து மாணவ மாணவிகளுமே ஏற்றுக்கொண்டனர். பலதாரமணம் தன்னுடைய உணர்வு மற்றும் பௌதீக தேவைகளை நிறைவேற்றி , ஒரே மனைவியாயிருப்பதினால் கிடைக்கும் சுதந்திரத்தை விட அதிக சுதந்திரத்தை அளிக்கும் என ஒரு மாணவி கூறினார். Lang, op. cit., p. 172.
அமெரிக்காவில் இன்னும் பலதாரமணத்தை அனுசரித்து வரும் அடிப்படைவாத சில மோர்மேன் பெண்களும் இதே வாதத்தையே முன்வைக்கின்றனர். தங்களின் சக தோழி மனைவிகளும் தாங்களும் ஒருவரின் குழந்தைகளை மற்றவர்கள் கவனித்துக்கொள்ள முடிவதால் பலதாரமணமென்பது பெண்கள் தங்களின் வேலையை விட வேண்டிய அவசியமில்லாமல் தொடர்ந்து செய்து வரவும் குழந்தைகளை கவனிப்பதற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியான முறையென அவர்கள் நம்புகிறார்கள்.
பலதாரமணமென்பது இஸ்லாத்தில் ஒருவருக்கொருவர் சம்மதப்பட்டு செய்வதேயாகும். கல்யாணமான ஒருவரை கல்யாணம் செய்யும்படி எந்தப்பெண்ணையும் யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. மேலும், தான் மணக்கும் கணவன் வேறொரு பெண்ணை மணக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கவும் மனைவியாகப்போகின்றவளுக்கு உரிமையுண்டு. Saniq, op. cit., pp. 187-188.
இதற்கு எதிராக, பைபிள் சில நேரங்களில் நிர்ப்பந்த பலதாரமணத்திற்கு அனுமதிக்கிறது. குழந்தையற்ற விதவை மரணித்த கணவனின் சகோதரனை, அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட, அவளின் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , மணக்க வேண்டுமென அது கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10)
இன்றைய முஸ்லிம் சமூகங்கள் பலவற்றில் , அங்கே பால் விகித ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இல்லாமலிருப்பதால், பலதாரமணம் மிகவும் குறைவு என்பதையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும். மேற்கத்திய உலகில் திருமணத்திற்கப்பாலும் கள்ள உறவு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட முஸ்லிம் உலகில் பலதாரமணம் செய்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவென அறுதியிட்டு கூறிட முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதனால், முஸ்லிம் உலகிலுள்ள ஆண்கள் மேற்கத்திய ஆண்களை விட மிக அதிகம் கடுமையான ஒருதாரமணவாதிகளாக இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
புகழ்பெற்ற கிறிஸ்தவ அறிஞர் பில்லி கிரஹாம் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்: 'கிறிஸ்தவமதம் பலதாரமணத்தை பொறுத்துப் போகவேண்டும் தற்கால கிறிஸ்தவமதம் அதை பொறுத்துப் போகவில்லையெனில் அது அதற்கு அழிவையே கொண்டு வரும். சமூகத்தீமைகளுக்கு பரிகாரமாக இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்துள்ளது இது சம்பந்தமாக மனித இயல்பு அவசியப்படும் சில சுதந்திரங்களை , ஆனால் மிகவும் கடுமையாக வரையறுக்கப்பட்ட சட்டத்தின் கீழேயே , அனுமதித்துள்ளது. தாங்கள் ஒருதாரமணவாதிகள் என கிறிஸ்தவ நாடுகள் மிகவும் வெறுமனே காட்டிக்கொள்கின்றன.
ஆனால் அவைகள் பலதாரமணத்தையே பின்பற்றுகின்றனர். மேற்கத்திய சமூகத்தில் நடைபெறும் வைப்புக்களை பற்றி அறியாதவர் யாருமில்லை. இது விசயத்தில் இஸ்லாம் அடிப்படையில் நியாயமான மார்க்கம். அது முஸ்லிமை , தேவைப்பட்டால் , இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் , ஒழுக்கம் சிதைந்திடாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் எல்லாவித கள்ள உறவுகளையும் கடுமையாக தடை செய்துள்ளது. Andul Rahman Doi, Woman in Shari'ah (London: Ta=oa Punlishers, 1994) p. 76.
நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்
ஆக சகோதரர்களே சிந்தனையாளர்களே இஸ்லாம் மீது காரணம் இல்லாமல் காலவரையறையற்ற வெறுப்பு கொண்டவர்களே உங்களுக்கு நேரம் கிடைக்குமெனில் சற்று நிதானமாக சிந்தித்துப்
பார்த்தால் இஸ்லாத்தின் இது போன்ற சட்டங்களின் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மையை உணரலாம்.
ஆக கண்ணியமிக்க இஸ்லாம் அதை ஏற்றுக்கொண்ட மனிதனையும் கண்ணியப்படுத்துகின்றது. அவனை கண்ணியத்தோடு வாழவைக்கின்றது. உனக்கு உள்ள மதிப்பை நீ இழந்துவிடாதே, என்று அறிவுருத்துகின்றது, குறிப்பாக மனிதனை இந்த சமூகத்திற்கு முன்னால் மனிதத்துவம் உள்ள, தன்மானமிக்க தனித்துவம் மிகுந்த மனிதனாக்குகின்றது இஸ்லாம்.
இந்த இடத்தில் சில பேரை சுட்டிக்காண்பித்து இவர்களுக்கு என் மனிதத்துவம் இல்லை என்றுகூட அவர்கள் பாஷையில் சொல்லலாம்
அதற்கு ஒரேபதில் : நான் அதாவது என் போன்றவர்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேரக் காரணம் என்ன என்பதை கேட்கக்கூடியவர்கள் ஆராய்ந்தால் மிக எளிதில் பதில் கிடைத்துவிடும்.
ஒரு இடத்தில் அநியாயம் நடக்கும் பொழுது சக்தி உள்ளவன் தட்டிக்கேட்பான் அரசாங்கமே சேர்ந்து என்னதான் உதவிகள் செய்ய வந்தாலும் இல்லாதவன் அல்லது முடியாஅதவன் இது போன்ற முடிவுதான் எடுப்பான்.
ஆகவே இதை விரும்பாதவர்களின் கூப்பாடுதான் இஸ்லாம் பற்றிய புரியாத வெற்றுப் புலம்பல்கள் தான். அதனால் இவர்களையும் இவர்களின் நோக்கத்தையும் நிச்சயமாக நாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.