சகோதரர் மகேஸ் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி
நான் பிரமணர்களை திட்டுவதாக சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்து கொண்டார்கள் இது அவர்களின் புரிந்தாற்றலின் தவறாகும் நிச்சயமாக ஒரு முஸ்லிம் இன்னொரு தனிநபரை நேருக்கு நேர் அல்லாது சம்பத்த்ப்பட்ட மனிதருக்கு முன்னால் இல்லாது பின்னால் இருந்து திட்டுவதை எங்களின் நபி (தலைவர்) முஹம்மது (ஸல்)அவர்கள் தடுத்து உள்ளார்கள் அதுமட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.
அதனால் பிராமணர்களை நான் திட்டவில்லை மாறாக அவர்களின் கொள்கையைத்தான் எதிர்க்கின்றேன் அவர்கள் பிற மனிதர்களை பார்க்கும் பார்வையையும், அவர்கள் நடத்தும் முறையையும் தான் எதிர்க்கின்றேன். மற்றபடி அவர்களும் என் சகோதரர்களே.
மேலும் சகோதரர் மகேஸ் கூறும் பொழுது (இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.( இங்கு தகுதி என குறிப்பிட்டது கல்வித் தகுதியை)
என்று கேட்டிருந்தார் இது அவரின் அறியாமையா? அல்லது நானும் இதை சொல்லவேண்டும் என்ற ஆசைப்பட்டாரா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்வதைவிட சான்றோர்களின் பட்டியலையே சான்றாக கொடுக்கின்றேன்
இன்று இந்த நாட்டில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.பணமும் - வளமும் - பிராமணர்களும்மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.
சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான்.
அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறுக்கலாகாது.
இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36%3 கவர்னர்கள் - L.G. 50%4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)
ஏனைய நிறுவனங்களில்வங்கிகள் 57%விமானத் துறை 61%IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.
இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.
இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.
சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.
நன்றி www. எனது கிறுக்கல்ஸ் April 2005.htm
இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல என்பதை சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
6 comments:
"இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது."
உளறாதீர்கள். இக்கால இந்தியாவில் பள்ளிக் கல்வி யாருக்கும் மறுக்கப்படுவதில்லை. தற்போதைய இந்தியாவைப் பற்றிப் பேசுங்கள். வேத காலம் எல்லாம் இப்போது இல்லை. நீங்கள் கூறுவது தலித்துகள் பற்றி என்றால் அவர்களுக்கு எல்லா சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. அதன்றி அவர்கள் படிப்பதை எந்தப் பார்ப்பனராவது எதிர்ப்பதாக யாரேனும் நாக்கில் பல்லைப் போட்டு பேச முடியுமா?
"இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல என்பதை சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்."
இன்னொரு உளறல். மனுஸ்ம்ருதி எங்கே அமுலில் இருக்கிறது? இந்திய அரசியல் சட்டத்தின்படித்தானே நடக்கிறது? பார்ப்பனர்களுக்கு இன்றைய பாரதத்தில் வரிவிதிப்பு இல்லை என்று எந்த புத்திசாலி உங்களிடம் கூறினார்? விவாதம் செய்ய வேண்டுமானால் தற்போதைய நிலையை மனதில் நிறுத்திப் பேசுங்கள். பழைய கதையெல்லாம் வேண்டாம்.
அப்படியும் பார்ப்பனர்கள் படிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக கடைபிடிக்கும் பாரபட்ச கொள்கைகளையும் மீறித்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. கல்விதான் அவர்களுக்கு ஒரே மார்க்கம். அதை நன்றாக செய்கிறார்கள் என்று ஏன் குற்றமாகக் கூறவேண்டும்?
மற்றப்படி பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் சான்றிதழ் தேவையில்லை. உங்கள் இஸ்லாம் மதத்தில் நடக்கும் குளறுபடிகளையும் காட்டுமிராண்டித்தனமாக கல்லெறிந்து கொல்லும் முறைகளை எதிர்த்தும் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யவும். எங்கள் இந்து மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
மற்ற மதத்தினரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை கால்கரி சிவா அவர்களின் சவுதி அரேபியப் பதிவைப் பார்த்து முடிந்தால் அங்கு போய் பதில் கூறவும்.
இங்கு அதர் ஆப்ஷன் இல்லாததால் உண்மையான டோண்டுதான் பின்னூட்டம் இட்டான் என்பதைப் பார்க்க எலிக்குட்டி சோதனையில் என்னுடைய சரியான ப்ளாக்கர் எண் 4800161 தெரிகிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.//
வேறு யாரும் பத்திரிக்கைத் தொழில் நடத்தக் கூடாது என எதுவும் சட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.முடிந்தால் நீங்களும் நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள்
//விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.//
அது எப்படி ஒரு சாரருக்கு மட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது? அவர்களைத் தான் open quota வில் சேர்த்தாகிவிட்டதே. அதிகபட்டம் 100க்கு 10 பேர் படித்தால் அதிகம்.மீதம் 90 இடங்கள் மற்றவர்களுக்குத்தானே கொடுக்கப்படுகிறது. எனக்கு ஏற்பட்ட அனுபவம். என் நண்பன் பிராமணர். ஆனால் நான் பிராமணன் அல்ல.நானும் அவனும் B.Scயில் இருந்து பழக்கம். நாங்கள் இருவரும் சாதாரண நடுத்தரவர்கம. MCA entrance ல் நான் open quota வில் கடைசி ஆளாக நுழைந்து விட்டேன். மதிப்பெண் பட்டியலில் எனக்கு அடுத்த இடம் அவனுக்கு. அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் அதே கல்லூரியில் நுழைவுத் தேர்வில் negative மதிப்பெண்(entrance ல் கேள்விகளுக்கு -ve மதிப்பெண் இருந்தது) பெற்ற ஒரு வசதியான தலித் மாணவருக்கு இடம் கடைத்தது. அதாவது -4,-3,-2.5 மதிப்பெண்கள் பெற்றவர்களில் -2.5 பெற்ற மாணவணுக்கு இடம் கிடத்தது. அப்போது என் நண்பன் கண் கலங்கியது என் மனதில் வடுவாக உள்ளது. தகுதியே இல்லாத அந்த வசதியான தலித் மாணவன் இன்று தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.என்னைப் பொறுத்தவரை இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு தகுதியுள்ளவரை அனுமதித்தால் நாட்டில் உள்ள பல பிரசினைகள் தீரும்
//இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல//
மனுஸ்மிர்தி... அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும். அதை யாரும் மதிக்க வேண்டாம். நம் சட்ட விதிகள் மனுஸ்மிர்தியைப் பின்பற்றி இயற்றப்படவில்லை.சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்
ஆமா எனக்கு ஒரு சந்தேகம். பெரும்பாலான் இஸ்லாமிய சகோதரர்கள்(பெயரை வைத்து தான் அடையாளம் காண்கிறேன்) மதத்தைப் பற்றியே வலைப்பதிவது ஏன்?
சகோதரரே! திசை திருப்பல்களுக்கு நீங்களும் பலியாகி விடவேண்டாம். கவனமாக நீங்கள் சொல்லவரும் கருத்தை கூறி சென்று விடுங்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று நீங்கள் ஆரம்பித்தால் அதிலேயே நீங்கள் காலம் கழிக்க வேண்டி வரும். விஷயங்கள் அறிந்தவர்களுக்கு வந்தேறி ஆரிய கூட்டத்தின் முகம் தெளிவாகத் தெரியும். நீங்கள் இத்தனை தெளிவுகளை நிரத்தியப் பின்னரும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் முடிந்தால் நீங்கள் காட்டியிருப்பது போல் வேதத்திலேயே இல்லை என்று கூறிக் கொண்டு "எல்லாம் அறிந்த சமுத்ர மேதாவிகள்" வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எப்படி நாம் ஆதாரங்களை நிரத்தினாலும் அவாள்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டு தான் இருப்பார்கள். எனவே இப்படிப் பட்ட திசை திருப்பல்களுக்கு பலியாகி விடாமல் உங்கள் பாணியில் தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அது சரி மேலே ஒரு படம் போட்டுள்ளீர்களே! அதில் அவாள்கள் என்ன கபடியா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்? ம்ம்ம்ஹ்ஹ்.. எல்லாம் நேரம். அவாள்கள் அப்பாவிகளை(சம்புகன் சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காக பிராமணன் ராமன் அவன் தலையை வெட்டியது) செய்தால் அது அறப்போர், அவாள்களின் அனியாயத்தைத் தட்டிக் கேட்க அவாள்களுக்கு எதிராக ஓர் துலுக்கன் வந்தால் அவன் தீவிரவாதி. நடத்துங்கய்யா நடத்துங்க! எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்ப்போம்.
அன்புடன்
இறை நேசன்
டோண்டு போன்ற பார்ப்பன வெறியன்களுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக பாழும் கிணற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு குதிக்கலாம்.
சகோதரர் குலசை அவர்களுக்கு,
நான் "எல்லாம் அறிந்த(!)" சமுத்ராக்களை எதிர் பார்த்தேன் - வேதத்தில் அப்படி இல்லவே இல்லை என்று மறுப்பதற்கு.
நான் சொல்ல விட்ட/எதிர்பார்க்காத வேறொரு வழியில் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படி இல்லை என்று கூறி நீங்கள் சொல்வதெல்லாம் "உளறல்" என்று வெறுப்பை உமிழ ஒரு கூட்டம் வரும் என்பதை கூற விட்டு விட்டேன்.
ஒரு விதத்தில் நிம்மதி. வேதத்தில் அப்படி இருக்கிறது என்பதையாவது ஒத்துக் கொண்டதுகளே!(இது தான் போட்டு வாங்கும் டெக்னிக்கோ?)
இந்த வேத ரீதியான (ராம ராஜ்ஜியம் - ராமன் - பிராமணன் - சூத்திரன் சம்புகன் தலை வெட்டல்) ஆட்சிக்காகத் தானே சங்க்-பார்ப்பன கூட்டம் முயற்சிக்கிறது.
இதற்கான பதிலை இந்த சங்க் பரிவார கூட்டம் எங்குமே கூறாமல் ஓடி ஒழிவதை கவனித்தீர்களா?
//மற்றப்படி பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் சான்றிதழ் தேவையில்லை. உங்கள் இஸ்லாம் மதத்தில் நடக்கும் குளறுபடிகளையும் காட்டுமிராண்டித்தனமாக கல்லெறிந்து கொல்லும் முறைகளை எதிர்த்தும் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யவும். எங்கள் இந்து மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.//
பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் சான்றிதழ் தேவையில்லை - எங்கள் இந்து மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
லோக மகா உளறல் இது தான். சகோதரர் டோண்டு அவர்களே! இது உங்களுக்கு மிகப் பெரிய "உளறலாகத்" தெரியவில்லை.
இதற்கு என்ன அர்த்தம். இந்து மதம் எனில் உண்மையில் பார்ப்பனர்களை மட்டும் கொண்டது தான் இந்து மதம் எனக் கூற வருகிறீர்களா? அப்படியெனில் தெளிவாக கூறி விடுங்கள். நாங்கள் "உங்கள்(இந்து-பார்ப்பனர்) மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்று ஒதுங்கி விடுகிறோம்.
இல்லையில்லை, காலிலிருந்து பிறந்தவன், தொடையிலிருந்து பிறந்தவன், தோளிலிருந்து பிறந்தவன் எல்லா பேரையும் கொண்டது தான் இந்து மதம் எனில் என்ன தான் நீங்கள் எங்களை புழுதி வாரி தூற்றினாலும் உங்களை(வந்தேறி ஆரிய பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தை) அவ்வளவு எளிதில் நாங்கள் சும்மா விடப் போவதில்லை. யப்பா இது கலி காலமப்பா. கலி முத்திடுச்சு. அன்று சம்புகன் சூத்திரன் என்பதால் நீங்கள் அவன் தலையை வெட்டியது போல் இன்றும் அதே பாணியில் செய்வதற்கு ஒரு அரசை(இதற்குத் தடையாக கம்யூனிஸ்ட், திராவிட, இஸ்லாமிய கொள்கைகள் இருப்பதால் தானே அவற்றை கண்ணை மூடி மலர்ந்து கிடந்து காறித் துப்புகிறீர்கள்) ஏற்படுத்தி விடலாம் என நீங்கள் கனவு கண்டால் - பாவம் நீங்கள் அது வெறும் கனவாகவே இருந்தாலும் பரவாயில்லை, சம்புகன் கதி சம்புகன் பரம்பரையினரான எங்களால் உங்களுக்கு நேராமல் இருக்க கவனித்துக் கொள்ளுங்கள்(ஓ! அதற்கும் சேர்த்து தான் சங்க் பரிவாரம் மூலமாக காலிப் படையை தயார் செய்து வைத்திருக்கிறோம் என்கிறீர்களா?).
//மற்ற மதத்தினரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை கால்கரி சிவா அவர்களின் சவுதி அரேபியப் பதிவைப் பார்த்து முடிந்தால் அங்கு போய் பதில் கூறவும்.//
சகோ. குலசை நான் முன்னர் இட்ட பின்னூட்டத்தைக் கவனியுங்கள். இதற்குத் தான் சொன்னேன் - பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொருவருக்கும் பதிலளிக்க இறங்காதீர்கள் என்று. நீங்கள் கொடுக்கும் பதில் அல்ல அவர்கள் நோக்கம். நீங்கள் கூற வரும் பார்பன ஆதிக்க சக்திகளின் மதவெறி விஷங்கள் வெளி வராமல் தடுப்பதே.
இதிலேயே கவனியுங்களேன். சகோதரர் கால்கரி சிவா அவர்கள் கூற வருவது அரேபியாவில் உள்ள அவர் சந்தித்த சில காட்டுமிராண்டி அரபிகள்(அவர் சொல்வது உண்மையெனில்) மூலம் அவர் அனுபவித்த மன கஷ்டங்களை. அதனை அப்படியே அரேபியாவில் உள்ள எல்லா அரபிகளும் மற்ற மதத்தினர் எல்லோரையும் நடத்தும் விதமாக "மத" சாயம் பூசி விஷயத்தை திசை திருப்பி தங்களுடைய "பார்ப்பன" சிந்தனையை நியாயப் படுத்துவதை. இது தான் பார்ப்பான் புத்தி என்பது. எங்கேடா ஒரு சிறு துரும்பு கிடைக்கும் - இஸ்லாத்திற்கு மதம் மாறும் அவர்களால் அடக்கி ஒதுக்கப் பட்டவர்களை நீங்கள் எங்கு சென்றாலும் இது தான் கதி. அங்கு போய் அதை அனுபவிப்பதை விட இங்கு காலாகாலத்திற்கும் இருந்து எங்களுடைய மலத்தினை அள்ளிக் கொண்டிருங்கள் என்று கூறி தாழ்த்தப் பட்டவர்களை அந்த நிலையிலேயே வைப்பதற்கு.
இவர்கள் இருவருக்கும் இங்கு பதில் வைத்துள்ளேன். உங்களிடம் தாழ்மையாய் நான் கேட்டுக் கொள்வது - இது போன்ற எந்த பார்ப்பன திசை திருப்பல்களுக்கும் பலியாகி விடாதீகள். நீங்கள் வைக்கும் கருத்துக்கள் சில வேளை எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் புது தெம்பு ஊட்டும். ஆகவே உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பதியுங்கள்.
தாமதத்திற்கு வருந்துகின்றேன் தங்கள் அனைவரின் வருகைக்கும் என் முதற்கண் நன்றி உரித்தாக்குகின்றேன்.
சகோதரர் இறைநேசன் குறிப்பிட்டது போல் என்னுடைய நோக்கம் அதாவது நான் இந்த பதிவு ஆரம்பித்ததன் நோக்கம் சிதறடிக்கப்படுகின்றதோ என்ற அச்சம் எனக்கு உருவாகியுள்ளது காரணம் நான் பலருடைய பதிவையும் படித்துவருகின்றேன் அதில் பின்னூட்டமாக வந்துள்ள பல கேள்விகளை இங்கும் காணக்கிடைக்கின்றது.
அதனால் சகோதரர் டோண்டு அவர்களுக்கு மட்டும் ஒரு விஷயத்தில் பதிலை வைத்துவிட்டு பின்னூட்டத்தை நிறுத்தலாம் என நினைக்கின்றேன்.
இன்னொரு உளறல். மனுஸ்ம்ருதி எங்கே அமுலில் இருக்கிறது ? இந்திய அரசியல் சட்டத்தின்படித்தானே நடக்கிறது ?
இ ந்தியாவில் மனுஸ்ம்ருதி ஆட்சி உள்ளது என்று நானும் கூறவில்லை மனிதநேயம் உள்ள மனிதர்கள் இந்தியாவில் வாழும்வரை அது நடக்காது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதற்காக ஒரு சிறிய கூட்டம் கோமனத்தை வரிந்துகட்டிக்கொண்டு போராடுகின்றதா இல்லையா? அப்படி இல்லையென்றால் உலகிலேயே மனிதநேய சட்டம் உள்ள ஒரே நாடு இந்தியாதான் என்ற பெருமைக்குறிய இந்திய நாட்டின் பிரதமரான வாஜ்பேய் அமெரிக்கா சென்றிருந்த பொழுது இந்தியாவில் இந்துக்களின் ஆட்சியை அமைப்போம் என கூறினாரே ஏன்?
வி பி சிங், பி ஜெ பி கட்சியின் ஆதரவோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கின்றார் அந்த ஆட்சியில் மண்டல் கமிஷன் கொண்டுவரப்பட்டது அதை எதிர்த்து பி ஜெ பி கட்சி தன் ஆதரவை வாபஸ் வாங்கியது மண்டல் கமிஷனையும் முறியடித்தது இது ஏன்?
மேலும் அவர் கூறினார்
உங்கள் இஸ்லாம் மதத்தில் நடக்கும் குளறுபடிகளையும் காட்டுமிராண்டித்தனமாக கல்லெறிந்து கொல்லும் முறைகளை எதிர்த்தும் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யவும்.
உலகில் உள்ள 20 கோடி முஸ்லிம்களுக்கு தெரியாத குளறுபடி சகோதரர் டோண்டுவின் வகையாருக்கு தெரிந்ததுதான் ஆச்சரியம். காட்டுமிராண்டித்தனமாக கல்லெறிந்து கொல்லும் முறையைப் பற்றி ஏசி ரூமில் கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்துகொண்டு விவாதிக்கும் விஷயமில்லை சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் விவாதிக்க வேண்டிய விஷயமாகும். அதை பேசக்கூடிய அருகதையும் சகோதரர் டோண்டுவிற்கு இல்லை ஏனென்றால் இவையெல்லாம் நம்மால் பிறமனிதன் பாதிக்கப்படுகின்றான் அல்லது மனிதாவிமனம், சுயமரியாதை, தன்மானம் என்பதை உணரக்கூடிய மனிதர்கள் பேச வேண்டிய விஷயமாகும். தனக்கு அருகாமையில் ஒருவன் வந்துவிட்டால் தன்னைச்சுற்றி மூன்றுமுறை தண்ணீர் தெளித்துக் கொள்பவர்களுக்கு நிச்சயமாக புரிந்துகொள்ளத் தகுதியில்லை.
எங்கள் இந்து மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நிச்சயமாக உங்கள் இந்து மதத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் உங்கள் இந்து மதம் எங்கள் மீது வேண்டாம்.(நானும் இந்து மதத்திலிருந்து மாறியவன் தான்) உங்களால் அவமானப்படக்கூடிய என் சகோதரன் மீது வேண்டாம்.
மனிதனிடம் மனிதனாக பழகுங்கள் மரியாதை தானாகக் கிடைக்கும்.
தங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி இந்த விவாதம் வேரு கோணத்தில் போவதால் தயவு செய்து இதில் பின்னூட்டத்தை இத்தோடு நிறுத்துகின்றேன்
Post a Comment