Saturday, November 12, 2016

(ஆபாசத்தின் மறுபெயர் – ஆடைக்குறைப்பு) ஆபாசம் உருவாவது எங்கே?


 ஆபாசம் என்பது மிகக் கொடிய ஒரு நோயாகும். அது  வெகுவிரைவில் மனிதனின் சிந்தனையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு வைரஸாகும். ஆதமுடைய விலா எலும்பிலிருந்து  படைக்கப்பட்ட பெண் சந்ததியில் கணிசமான மக்கட் தொகையை ஆட்கொண்டுவிட்ட இந்த நோய் எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கின்றது என்றால் எங்களுக்கு அதாவது பெண்களுக்கு உடை சுதந்திரம் வேண்டும் கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டுமென போராடக்கூடிய அளவிற்கு இந்த நோய் வளர்ந்துவிட்டதை நினைத்து சமூகத்தில் நன்மையை விரும்பக்கூடியவர்கள் வேதனைப்பட வேண்டியுள்ளது.
     ஏனென்றால் மனித சமூகத்தில் மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டிய இவர்கள் தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் சிந்திக்காமல் தான் வாழக்கூடிய சமூகத்தில் இவை எப்படிப்பட்ட சீரழிவை ஏற்படுத்துகின்றன என்றெல்லாம் சிந்திக்காமல் ஏன் இப்படி தரம்கெட்டு போய்விட்டனர்?. அதுமட்டுமல்லாது இப்படிப்பட்ட சிந்தனையுள்ளவர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து வயிறுபிழைத்துக் கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம்.
    அந்தக்கூட்டத்தை வாழவைப்பதற்கு நம்முடைய உடலையும், மானத்தையும், மரியாதையையும் ஏன் தாரை வார்க்கவேண்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் கர்ப்பப்பை சுதந்திரம், உடை சுதந்திரம், பெண் உரிமை என்றெல்லாம் யாரோ தூக்கத்தில் உளறியதை வேதவாக்காக நினைத்து அதற்கு பின்னால் கொடிபிடிக்கும் பெண்ணினமே இதனால் உங்களுக்கு பணம் வேண்டுமானால் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கலாம்; ஆனால் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கும் பாடம் என்ன? உங்களால் பின் தலை முறையினருக்கு கிடைக்கும் படிப்பினை என்ன?
    பெண்கள் போடக்கூடிய உடை அக்கடா என்றிருந்தால் பெண்கள் காவல் நிலையம் என்ற சம்பிரதாயமே இந்தியப் பாண்பாட்டிற்குள் தேவைப்பட்டிருக்காதே! அன்னை தெரேஸாவுக்கோ அன்னை இந்திராகாந்திக்கோ உடை ஒரு பாதகமாக தோன்றவில்லை. அவர்களின் வளர்ச்சியில், அவர்களால் இந்த சமூகத்திற்கு கிடைத்த நன்மையின் அளவில் ஒரு கால் தூசு அளவு கூட ஆடை சுதந்திரத்தையும், கர்ப்பப்பை சுதந்திரத்தையும் கேட்கும் இப்பெண்களால் மனித சமுதாயத்திற்கு கிடைக்கவில்லையே! பிறகு ஏன் உடைக்குப் பின்னால் படை? அது மட்டுமா? இதைப்பார்த்து சமூகத்தில் எந்த ஒரு பிடிப்புமில்லாமல் எந்த லட்சியமுமில்லாமல் பெண்களுக்கு பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றது இளைஞர்கள் கூட்டம்.   படைத்தவனுக்கு தெரியும் படைப்பின் லட்சணம். ஒரு சமூகத்தின் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய வினையும் எதிர்வினையும் என்ன என்பதை நம்மைப் படைத்தவன் மிகத் துல்லியமாகக் கணிக்கக்கூடியவன்.
      பொதுவாக குரான் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக கட்டளைகளையும் ஆலோசனைகளையும் கூறிச்சென்றாலும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் கண்டிப்பாக பேணவேண்டிய கட்டாய கடமையாக சில கட்டளைகளை அறிவுரை வழங்குவது போல் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு இட்ட கட்டளையை முஸ்லிமல்லாதவர் கடைபிடிக்கவில்லை எனில் தவறில்லை(அவர் முஸ்லிமல்லாத காரணத்தினால்). அவர் தவறில்லை என்று கருதும் பட்சத்தில் (நினைத்தால்) ஆனால் முஸ்லிம் என்று தன்னை பறைசாற்றிக்கொண்டவர் கண்டிப்பாக குரானின் அனைத்து கட்டளைகளையும் கடைபிடித்தே தீரஆகவேண்டும். இல்லையேல் இறைவன் முன் அவர் குற்றவாளியாகின்றார். இஸ்லாமிய சமுதாயத்தில் அவர் வெறுக்கத்தக்கவராகின்றார்-அவர் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரியே.    
  I முஸ்லிமிற்கான அறிவுரை வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது.
1 பெண்களுக்கான அறிவுரை
33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்லர். நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள்.
 33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.  
 33:53 முற்றிலும் பரிசத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். உண்மையைக்   கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை.   நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால் திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்.
 33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
 2. குழந்தைகளுக்கான அறிவுரை 
24:58.ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை)களும் உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர் ' நேத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும் குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை.
 3. இஸ்லாமிய சமூகத்திற்கான அறிவுரை
 24:27.ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் (வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்.   நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
 24:28.அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும் 'திரும்பிப் போய் விடுங்கள் ' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
மேற்கண்ட வசனங்கள் ஒரு பெண் தன் சமூகத்தில் எப்படி இடை பழக வேண்டும், சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும், ஒரு குழந்தையை இஸ்லாமியன் எப்படி வளர்க்க வேண்டும்என்பனவற்றை அதன் குணாவிஷயத்தோடு அதனால் ஏற்படும் பாரதூரங்களோடு இஸ்லாம் எடுத்து வைக்கின்றது.
  மனித சமூகத்திற்கு (முஸ்லிமல்லாதவர்களுக்கு) இஸ்லாம் கூறும் அறிவுரை
 7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி,) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
 17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்   நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
 இஸ்லாம் ஒரு தீமையைக் கண்டால் கண்ணை மூடி இருக்கவோ அல்லது இடத்தை விட்டு ஓடி விடவோ சொல்லவில்லை. மாறாக அதை எதிர்த்து போராடச் சொல்கின்றது அத்தீமையின் ஆணிவேர் எங்கே உள்ளது எனத்தேடி அதை வேரோடும் வேரடி மண்ணோடும்   களைந்தெடுக்கச் சொல்கின்றது.   
   மேற்கண்ட இரண்டு வசனத்தின் அடிப்படையில் ஆடையை களைவதினாலும் ஆபாசத்தினாலும் மனித சமூகத்திற்கு ஏற்படக்கூடிய தீமையை சம்பந்தப்பட்டவர்கள்(அறிவு ஜீவிகள்) சமூகத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். ஆள்பாதி ஆடை பாதி; ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள். ஆடையென்பது ஒருவருக்கு கண்ணியத்தைத்தான் தருமேயல்லாது கேவலத்தை ஒருபோதும் தருவதில்லை- கேவலப்பட்ட ஜென்மங்களைத் தவிர


No comments: