Sunday, September 03, 2006

பதிலுக்கு பதில் 1

என்னுடைய பதிவைப் பற்றி தங்களுடைய பதிவில் சர்ச்சை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில்

சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர். உங்கள் மீது நடக்கப்போகும் அர்ச்சனைக்கு இப்போதே வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்த விஞ்ஞான காலத்திலும் இப்படியொரு பதிலை வைப்பது அபத்தம் தான். மேலும் நான் இன்டர் நெட் உலகிற்கு புதியவன் தான் ஆனால் என்னை இந்த அளவிற்கு சிந்திக்க வைத்ததே, ஆரோக்கியம், டோண்டு ராகவன்,
Calgary சிவா, நேச குமார், வஜ்ரா ஷங்கர் போன்றோர் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருந்ததால்தான் நாமும் எழுதினால் என்ன என்ற சிந்தனையே வந்தது அவர்கள் இந்து மதத்தைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை ஏனெனில் நானும் அங்கிருந்து வந்தவன் தான் ஆனால் சம்பந்தமில்லாமல் பிற மதங்களின் அடிப்படை தத்துவங்களின் மீது அதன் பூரண ரூபம் தெரியாமல் விமர்சித்தால் அதன்மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு வெறுப்பும் வேதனையும் ஏற்படுவது சகசமே பிறகு அவர்கள் தீவிரவாதிகள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று கூக்குறலிடுவது எந்த விதத்தில் ஞாயம் என்பதை சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியம் சாரோ, டோண்டு ராகவன் சாரோ, Calgary சிவா சாரோ, நேச குமார் சாரோ, வஜ்ரா ஷங்கர் சாரோ அவர்களை கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை அவர்களும் என் சகோதரர்களே இது எனக்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் பாடமாகும் அறியாமையால் செய்யும் அவர்கள் நல்லவர்களாகக் கூட இருக்கலாம்

சிவா அவர்களுடன் உண்டான வலைப்பதிவு கருத்துப் பரிமாற்றங்களில் என்னை மதித்து வீட்டிற்கு அழைத்தால் யாருடன் என்னைக் கூட்டாக அழைப்பேன் என எழுதியிருந்தார். அன்று முதல் அவரது பதிவுக்கு வருவது வழக்கமாகிப்போனது ஏனய்யா மத்திய கிழக்கில் வேலை செய்யும் என்போன்றோரை அடிமை என்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டபோது, பண்பாக மன்னிப்புக் கேட்டு ' இனி தவிர்த்துக்கொள்வேன் ' என்றார். அவர் மீது கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

டோண்டு ராகவன் சாரை நேரில் சந்தித்த அனுபவமும் இருப்பதால் அவர் சொல்லிய கருத்தின் விளக்கம் கேட்கிறேன் , அவ்வளவே.
அன்புடன் ஆசாத்

இது சகோதரர் ஆசாத் அவர்களின் அபிப்ராயம்

ஆனால் அவர்களின் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருப்பதால் தான் எதிர்க்கின்றேன். மற்றவர்களை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக கொள்ளாமல் அவர்களும் என்ன சொல்கின்றார்கள் என செவிகொடுத்து கேட்க ஆரம்பித்தாலே போதும் மனக்கசப்புகள் நீங்க.

இவர்களின் இப்படிப்பட்ட கூத்தைப் பார்த்துத்தான் மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும் http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post.html என்ற கட்டுரையே எழுதினேன். ஆக என்னை இந்த உலகிற்கு இழுத்து வந்தவர்களே மேலே குறிப்பிட்ட இந்த சகோதரர்கள் தான்.

அதனால் சகோதரர் ஆரோக்கியம் சொல்வதுபோல்

//சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர்//

அவர் நான் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் பதில் தொடரும்

1 comment:

ஆரோக்கியம் kettavan said...

நண்பர் ஸாலிஹ்

இந்த கும்பலுக்கு இது மிகவும் சுலபமான வேலை. முத்திரை குத்திவிட்டால் அடுத்து வரும் நல்ல கருத்துகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத் தான் இது.

அப்படியானால் ஆரோக்கியம் என்கிற தரம் தாழ்ந்து எழுதும் ஒரு ஜந்தின் எழுத்துகளைக் கொஞ்சிக் குலாவும் இவர்களில் ஒருவர் தான் அது என்று நான் என்றோ முடிவுக்கு வந்து விட்டேன்.

பாஸ்டன் பாலாவின் பதிவில் ஒரு அனானி சொல்லியிருந்ததைப் போல மஞ்சள் காண்டாக்ட் லென்சைக் கழற்றாமல் உலகைப் பார்ப்பவர்களுக்கு வேறு என்ன தெரியும்?

இவர் நண்பர் கருவியல் பொறியாளர் ஒருவர் ஜுபைலில் ஓட்டல் வைத்தார் என்றும் அதனை அவர் ஆராதனா என்று பெயரிட்டதால் மூடவேண்டி வந்ததாகவும் எழுதியிருந்தார். முதலில் கருவியல் என்றால் எம்பிரையாலஜி படித்தவரா இவர் நண்பர்?

இவர் ஏதோ இன்ஸ்ட்ரூமெண்டேசன் என்று கொஞ்சநாள் முன்னாடி எழுதியிருந்தாரே

ரெண்டாவது அவர் வசித்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் தம்மாமில் ஓஹோ என்று ஓடும் பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய ஓட்டல்களின் பெயர்கள் (அனைத்தும் இந்தியர்கள் நடத்துவது)

காப்பர் சாந்தினி
ஹொரைசன்
அக்வா
சாம்ராட்
ஒயாசிஸ்

நடுத்தரமக்கள் சாப்பிடும் சில இந்திய ஓட்டல்கள்

தஞ்சை காபி ஹவுஸ்
தஞ்சை ரெஸ்டாரண்ட்
மாஸ் ரெஸ்டாரண்ட்
தஞ்சாவூர் டிபன் செண்டர்


சும்மா என்னத்தயாவது காழ்ப்போடு கக்க வேண்டிய இந்த ஆளோட பழக்கமாப் போச்சு